மட்டக்களப்பின் பல பகுதிகளில் மின்வெட்டு

மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (27.01.2013)  9 மணிநேர மின்வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளதாக இலங்கை மின்சாரசபையின் மட்டக்களப்பு பிராந்திய மின் பொறியியலாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.


மின்சாரசபையின் பராமரிப்பு வேலைகள் நடைபெறவுள்ளதால் மட்டக்களப்பு மாவட்டத்தின் 77 இடங்களில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணியிலிருந்து மாலை 5 மணிவரை இம்மின்வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளது.

காவத்தமுனை, ஓட்டமாவடி, வாழைச்சேனை, கறுவாக்கேணி, கிண்ணியடி, சின்னவேம்பு, பாசிக்குடா, கிரான், சந்திவெளி, முறக்கெட்டாஞ்சேனை, சித்தாண்டி, மாவடிவேம்பு, வந்தாறுமூலை, கொம்மாதுறை, செங்கலடி, பங்குடாவெளி, இலுப்படிச்சேனை, கரடியனாறு, மரப்பாலம், இராஜபுரம், கித்துல், கோப்பாவெளி, தும்பாலஞ்சோலை, பெரியபுல்லுமலை, ஆயித்தியமலை, உன்னிச்சை, நெல்லிக்காடு, மகிழவெட்டுவான், நரிப்புல்தோட்டம், ஏறாவூர், ஐயங்கேணி, மிச்சிநகர், தளவாய், மீராங்கேணி, சதாம்ஹுசைன் கிராமம், ஹிஸ்புல்லாஹ் கிராமம், ஆறுமுகத்தான்குடியிருப்பு, தன்னாமுனை, சவுக்கடி, மயிலம்பாவெளி, சத்துருக்கொண்டான், பிள்ளையாரடி, ஊறணி, திருப்பெருந்துறை, நாவலடி,  ரிதிதென்ன, ஜெயந்தியாய, வாகனேரி, மியாங்குளம், புணானை, கும்புறுமூலை, வெம்பு, கல்குடா, பாசிக்குடா, பேத்தாழை, பிறைந்துறைச்சேனை, மீராவோடை, மாஞ்சோலை, வாழைச்சேனை மீன்பிடித்துறைமுகச்சந்தி தொடக்கம் பாசிக்குடாவரையுள்ள பகுதி, வட்டவான், காயங்கேணி, கஜுவத்த, மதுரங்கேணிகுளம், மாங்கேணி, கிரிமிச்சை, பனிச்சங்கேணி, வாகரை, ஊரியன்கட்டு, தட்டுமுனை, பால்ச்சேனை, கதிரவெளி, வெருகல்  ஆகிய பகுதிகளிலேயே மின்வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவ்வலுவலகம் தெரிவித்துள்ளது.
Previous Post Next Post