5 ஆவது தடவையாகவும் சித்தாண்டியில் வெள்ளம்

கடந்த 03 நாட்களாக தொடர்ச்சியாக பெய்து வரும் மழையின் காரணமாக சித்தாண்டி 04 மற்றும் சித்தாண்டி 03 இன் ஆற்றங்கரையோர குடியிருப்புக்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. 

தொடர்ந்தும் மழை பெய்தகொண்டிருந்ததனால் உறுகாமம் குளத்தின் வான்கதவுகளும் திறந்து விடப்பட்டுள்ளன. இதனால் சித்தாண்டியின் மதுரங்காட்டு கொலனி, உதயன்மூலை, சித்தாண்டி 03 மாரியம்மன் ஆலய பகுதி ஆகியவற்றில் வெள்ள நீர் வந்துசேர்ந்துள்ளது. 
சித்தாண்டி முச்சந்திப் பிள்ளையார் ஆலயம் வரை இந்த வெள்ளநீர் பரவியுள்ளதுடன், பாதிக்கப்பட்ட மக்கள் இடம்பெயர்ந்தும் வருகின்றனர்.

இதேவேளை உறுகாமம் குளத்தின் 2 வான்கதவுகள் 8 அடி உயரத்தில் திறந்துவிடப்பட்டுள்ளதாகவும் இக்குளத்தில் 3 அடி உயரத்தில் மேலதிகமாக வெளியேறுவதாகவும்  உன்னிச்சைக் குளத்தில் 3 வான்கதவுகள் 10 அடி உயரத்தில் திறந்து விடப்பட்டுள்ளதாகவும்  இக்குளத்தில் 1 அடி 2 அங்குல உயரத்தில் மேலதிக நீர் வெளியேறுவதாகவும் இக்குளங்களுக்குப் பொறுப்பான பொறியியலாளர் ஏ.கிருஷாந்தன்  தெரிவித்தார்.

சித்தாண்டி மக்களுக்கு தற்போது வெள்ளம் ஒரு வழமையான நிகழ்வாக மாறிவிட்டதாக பிரதேசவாசி ஒருவர் தெரிவித்தார்.













Previous Post Next Post