சித்தாண்டி பிரதேசத்தின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. குறிப்பாக சித்தாண்டி 04, இன் மதுரங்காட்டுக்கொலனி, உதயன்மூலை , சித்தாண்டி 03 இன் சில பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. சித்தாண்டி 04 பலநோக்கு மண்டபப் பகுதியில் 6 அடிக் மேற்பட்ட நீர் காணப்படுகின்றது.
திருமலை - மட்டக்களப்பு பிரதான வீதியிலும் வெள்ள நீர் காணப்படுகின்றது.
இந்த நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சித்தாண்டி மக்கள் இடம்பெயர்ந்து சித்தாண்டி மத்திய மகா வித்தியாலயத்திலும், ராமகிருஸ்னர் வித்தியாலயத்திலும், சித்தி வினாயகர் வித்தியாலயத்திலும் மற்றும் சித்தாண்டி பொதுச் சந்தையின் மேல்தளத்திலும் தங்கியுள்ளனர்.
சித்தாண்டியிலுள்ள வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள இடைத்தங்கல் முகாமில் கிராம உத்தியோகத்தர் பூ.அருள்நாதன் அவர்களும், சிவில்குழு செயலாளர் சி.திருப்பதி மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தாகள் அங்கிருந்து பாதிக்கப்பட்ட மக்களைப் பராமரித்துக்கொண்டிருக்கின்றனர். தங்கியுள்ளவாகளுக்கு சமைத்த உணவு வழங்கப்படுவதுடன், நிவாரணமாக வந்து சேர்ந்த பொருட்களையும் பகிர்ந்து வழங்கிக்கொண்டிருக்கின்றனர்.
இதேவேளை இம்முகாமில் மொத்தமாக 101 குடும்பங்கள் தங்கியள்ளதாகவும் அதில் 04 கர்ப்பிணித்தாய்மாரும், 18 வயதிற்கு கீழ்ப்பட்ட சிறுவர்கள் 115 பேரும் தங்கியுள்ளதாகவும் முகாமிற்கு பொறுப்பாக உள்ள கிராம உத்தியோகத்தர் பூ.அருள்நாதன் அவர்கள் தெரிவித்தார்.

சித்தாண்டி பிரதேசத்து மக்களது வாழ்க்கையில் அவலத்தை ஏற்படுத்துகின்ற ஒரு விடயமாக இந்த வெள்ள அனர்த்தம் காணப்படுகின்றது.