கிழக்கின் ஆலயங்களைப் பற்றிய பாடல்கள்

கிழக்கு மாகாணத்தின் பிரபலமான ஆலயங்கள் மீது பாடப்பட்ட '' கோபுர வாசலிலே'' என்ற ஒலிப்பேளை 2001 ஆம் ஆண்டளவில் வெளியிடப்பட்டிருந்தது. இந்த ஒலிப்பேளையில் திருகோணமலை கோணேஸ்வரர் ஆலயம், கொக்கட்டிச் சோலை தான்தோன்றீச்சரர் ஆலயம், கோராவளி கண்ணகி அம்மன் ஆலயம்,  போரதீவு காளி அம்மன், சித்தாண்டி முருகன் ஆலயம், உகந்தை முருகன் ஆலயம், தாந்தாமலை முருகன் ஆலயம், மாமாங்கப் பிள்ளையார் ஆலயம் முதலிய தலங்கள் பாடப்பட்டுள்ளன.

"கோபுர வாசலிலே"  என்ற இந்த ஒலிப்பேளையில் அடங்குகின்ற பாடல்கள் அழகிய பாடல் வரிகளையும், இனிமையான இசையையும் கொண்டுள்ளதுடன், இனிய குரல்வளம்  உள்ளவர்களினாலும் பாடப்பட்டுள்ளது. இந்தப் பாடல்களை நேரடியாகவே கேட்பதுடன் , தரவிறக்கியும் கொள்ளமுடியும்.












Previous Post Next Post