சித்தாண்டியில் முதலை மரணம்

சித்தாண்டி சந்தணமடு ஆறு, சின்னாளன்புளியடி குளம், உதயன்மூலை தீர்த்தக்குளம் ஆகியவற்றில் கடந்த வெள்ள நிலைமைகளின் போது முதலைகள் நடமாடத் தொடங்கியிருந்தன. 

வெள்ள காலத்தின்போது உதயனமூலையிலிருந்து  இடம்பெயர்ந்து வந்த மக்களை முதலை துரத்தியிரந்தது. அத்துடன் சந்தணமடு ஆறிலும் இரண்டு முதலைகள் மக்களை துரத்தி அச்சத்தை ஏற்படுத்தியிருந்தன. 
இந்த நிலையில் சின்னாளன் புளியடி குளத்தின் அணைக்கட்டிற்கு மறுபக்கத்தில் உள்ள நீர்வடிகால் பகுதியில் முதலை ஒன்று மரணமடைந்து காணப்படுகின்றது. இம்முதலையானது சுமார் 2 நாட்களுக்கு முன்னர் குறிப்பாக 27.12.2012 ஆம் திகதியளவில் உயிரிழந்திருக்கக்கூடும் எனவும், சந்தணமடு ஆற்றில் மக்களைத் துரத்திய இரண்டு முதலைகளில் ஒரு முதலையாக இது இருக்கக்கூடும் எனவும் வேரம் விவசாய பிரதேசத்தில் விவசாயம் செய்யும் சித்தாண்டி பிரதேசவாசி ஒருவர் குறிப்பிட்டார்.




Previous Post Next Post