Web Development Language களை இலவசமாகக் கற்க சில இணையத்தளங்கள்


           Web Development Language களைக் கொண்டுதான் எந்த ஒரு இணையத்தளமும் இயங்குகிறது. ஒரு தளத்தை உருவாக்க, நடத்த, மேம்படுத்த இவை அவசியமானவை. இது குறித்து கற்க இணையத்தளத்திலும் வசதிகள் காணப்படுகின்றது.
அத்தகைய Web Development Language களை இலவசமாகக் கற்க உதவும் தளங்கள் பல காணப்படுகின்றன. அவற்றில் சிலவற்றை இங்கே பார்ப்போம்.

                   

                             W3Schools (http://www.w3schools.com) :-     மிக அதிகமான தகவல்களைக்கொண்டுள்ள இந்த இணையத்தளம் Web Development க்கு தேவையான அனைத்தையும் இலவசமாகவே கற்றுத்தருகின்றது. மிக எளிமையாக கற்றுத்தரும் இந்த தளத்தின் மூலம் Web Development குறித்த அடிப்படை அறிவு இல்லாதவர்கள் கூட விரைவில் அவற்றை கற்றுக் கொள்ளலாம். 

                Hscripts (http://hscripts.com/tutorials/index.php) :-     இந்த தளமும் W3Schools போல மிக எளிமையாகவே கற்றுத்தருகின்றது. Flash, JSP, UNIX command, prrl போன்றவற்றையும் கற்கும் வசதி இந்த தளத்தில் உள்ளது.

                    HTML.net (www.html.net)  :- HTML, CSS, PHP, java, Script போன்றவற்றை கற்பதற்கு இது சிறந்த தளமாகும்.

                     
               jQuery (http://jquery.com)  :-       jQuery ஆனது, ஒரு தளத்தின் செயல்பாட்டை தீர்மானிக்க உதவும் jhva script இன் library ஆகும். இதை jQuery தளத்திலேயே கற்கலாம். இதனை வீடியோtutorial ஆகவும் கற்க முடியும். 

   
       HTML Code Tutorial (www.htmlcodetutorial.com) :-  மிக அடிப்படை மொழியான html ஐ அடிப்படை நிலையிலிருந்து கற்க இந்த தளம் உங்களுக்கு உதவுகின்றது. அத்தோடு இங்குCSS ஐயும் நீங்கள் கற்க முடியும்.
Previous Post Next Post