MP3 கோப்புக்களுக்கு நீங்கள் விரும்பும் படங்களை இணைக்க வேண்டுமா?

            இணையத்திலிருந்து பதிவிறக்கம் செய்யும் பாடல்களுக்கு அந்த குறிப்பிட்ட இணையத்தளத்தின் Logo மற்றும் திரைப்படத்தின் படம் போன்றன இணைக்கப்பட்டிருக்கும்.
நாம் அந்த MP3 கோப்பினை play செய்யும் போது அந்தப்படங்களை player இல் காண முடியும். ஆனால் அந்த Audio Tag படங்களை நாம் விரும்பியவாறு மாற்றியமைத்துக்கொள்ள தற்போது வழிவகை காணப்படுகின்றது.
                       “MP3 Tag” என்ற மென்பொருளினை இணையத்திலிருந்து பதிவிறக்கி, கணினியில் நிறுவிக்கொள்ளுங்கள். பின் அதனை open செய்து, தோன்றும் வின்டோவில்; file மெனு button ஐ அழுத்தி, Add directory யை தெரிவு செய்து கொள்ளுங்கள். அதன்பின் தோன்றும் வின்டோவில் குறிப்பிட்ட பாடல்கள் உள்ள folder தெரிவு செய்யவும். அதன்போது அனைத்துப் பாடல்களும் பட்டியலிடப்படும். எந்த பாடலுக்குப் படத்தினை tag செய்யப் போகின்றீர்களோ அதனை மட்டும் தெரிவு செய்யுங்கள். பின்னர் Extended tags என்ற buttonஐ தெரிவு செய்து க்ளிக் பண்ணுங்கள்.

                                           அதனையடுத்து தோன்றும் வின்டோவில் Add cover button ஐ அழுத்தி குறிப்பிட்ட படத்தினை தெரிவு செய்து பின்னர் ok button ஐ அழுத்தவும். இப்போது குறிப்பிட்ட பாடலுக்கு நீஙகள் தெரிவு செய்த படம் இணைக்கப்பட்டிருக்கும். அந்தப்படம் குறிப்பிட்ட பாடலுக்கு இணைக்கப்பட்டு சேமிக்கப்பட்டு விட்டது, என்ற செய்தியும் தோன்றும். இறுதியாக நீங்கள் அந்த பாடலை ஒலிக்கவிட்டால் player இல் நீங்கள் இணைத்த படம் தோன்றுவதனைக் காணலாம். 

MP3 tag மென்பொருளினை இலவசமாக தரவிறக்கி கொள்ள http://www.mp3tag.de/en/download.html என்னும் இந்த முகவரியை நாடுங்கள்.

Previous Post Next Post