நீண்ட இடைவெளிக்குப் பின்னர் காமெடி நடிகர் வடிவேலு ஹீரோவாக நடிக்கும் "ஆபிரிக்காவில் வடிவேலு" எனும் படத்தில் நடிக்கின்றார். இந்தப் படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்குவது முடிவாகி உள்ளது. இப்படத்திற்கான கதையை ரஜினியின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய டாக்டர் காயத்ரி எழுதியுள்ளார். வடிவேலுவுக்கும், கே.எஸ்.ரவிக்குமாருக்கும் இந்த கதை பிடித்துவிட்டதால் சேர்ந்து பணியாற்ற முடிவு செய்துவிட்டார்களாம்.
இப்படத்திற்கு ‘ஆபிரிக்காவில் வடிவேலு’ என பெயர் வைத்திருக்கின்றனர். ஆப்பிரிக்கா காட்டில் தன்னந்தனியாக மாட்டிக் கொள்ளும் வடிவேலு, அங்கு அனுபவிக்கும் சிக்கல்களையும், சிரமங்களையும் கதையாக உருவாக்கியிருக்கிறார்கள். வடிவேல் தனது உடல் தோற்றத்தை மிகவும் இளமையானதாகக் காட்டுவதற்கா ஜிம்முக்கு சென்று தன்னுடைய தொப்பையைக் குறைப்பதற்காக கடுமையான உடற்பயிற்சி செய்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.