மாணவர்கள் பாடசாலை வளாகத்தினுள் கையடக்கத் தொலைபேசி கொண்டுவரக் கூடாது ஆசிரியர்கள் கடமை நேரங்களில் கையடக்கத் தொலைபேசி உபயோகிக்கக் கூடாது என கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளர் செ.ஸ்ரீகிருஸ்ணராஜா தெரிவித்துள்ளார்.
வேல்ட் விஷன் நிறுவனத்தின் கல்வி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு - கிரான் பிரதேச பாடசாலை மாணவர்களுக்கு பாதணிகள் பாடசாலைகளுக்கு விளையாட்டு உபகரங்கள் மற்றும் தளபாடங்கள் வழங்கும் நிகழ்வு கிரான் உவெஸ்லி மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்த நவீன உலகிலே மாணவர்களைக் குழப்புகின்ற ஒரு விடயமாக தொலைக்காட்சி காணப்படுகிறது. குடும்பத்துடன் இருந்து தொலைக்காட்சி பார்பதன் காரணமாக மாணவர்களின் கல்வியில் ஆர்வம் குறைவடைந்து செல்கிறது. தற்போது மாணவர்களின் பலர் கையடக்கத் தொலைபேசி பாவிக்கிறார்கள் இதனால் பல தீய விடங்களுக்குச் செல்ல வழிவகுக்கிறது.
இனிமேல் கல்குடா கல்வி வலயத்திலே எந்தவொரு மாணவனும் கையடக்கத் தொலைபேசியினைனை பாடசாலை வளாகத்தினுள் கொண்டு செல்லக் கூடாது. இந்த விடயத்தில் அதிபர் ஆசிரியர்கள் கவனமாக இருக்க வேண்டும். அதேபோல் கடமை நேரத்தில் ஆசிரியர்கள் கையடக்கத் தொலைபேசி பாவிக்கக் கூடாது. பாடசாலைகள் சரியாக இயங்க வேண்டும்