2011 ஆம் ஆண்டு கல்விப்பொதுத் தராதர உயர்தரப்பரீட்சையில் வெட்டுப்புள்ளி (இஸட்) பிரச்சினையினால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் நான்காவது தடவையாகவும் பரீட்சை எழுதுவதற்கு அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது.
உயர்க்கல்வியமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கே அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
2011 ஆம் ஆண்டு மூன்றாவது தடவையாக மற்றும் இறுதியாக உயர்தரப்பரீட்சையில் தோற்றிய மாணவர்கள்.
2012 ஆம் ஆண்டு மூன்றாவது தடவையாக மற்றும் இறுதியாக உயர்தரப்பரீட்சையில் தோற்றுவதற்கு சந்தர்ப்பம் கிடைத்தும் தோற்றமுடியாது போன மாணவர்கள்.
அதேபோல 2012 ஆம் ஆண்டு மூன்றாவது தடவையாக மற்றும் இறுதியாக உயர்தரப்பரீட்சையில் தோற்றிய மாணவர்களுக்குமே இந்த சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் மேற்குறிப்பிட்ட மூன்று பிரிவுகளைச்சேர்ந்த மாணவர்கள் 2013/2014 கல்வியாண்டுக்கு மட்டுமே உரித்துடையதாகும் வகையில் பழைய மற்றும் புதிய பாடத்திட்டங்களின் கீழ் 2013 ஆம் ஆண்டு இறுதி தடவையாக உயர்தர பரீட்சைக்கு தோற்றுவதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.