"இயற்கை அனர்த்தம்" நூல்வெளியீடு - 24.02.2013

தவசி லேணிங் சிற்றியின் தலைமை ஆசிரியர் வி.எஸ். அக்சயன் அவர்களினால் எழுதப்பட்ட இயற்கை அனர்த்தம் எனும் நூல்வெளியீட்டு வைபவம் நேற்று (24.02.2013) சந்தணமடு ஆற்று கரையில் இடம்பெற்றது. 

வி.எஸ். அக்சயன் அவர்களின் தலமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அதிதிகளாக ஜனாதிபதியின் ஆலோசகரும், முன்னாள் முதல்வரினதும் ஊடகச் செயலாளர் திரு. ஆ.தேவராஜா அவர்களும், செயற்குழு உறுப்பினர் நா.அருண் அவர்களும்,  செங்கலடி மத்திய கல்லூரி புவியியல் ஆசிரியையான திருமதி சக்தி புவீந்திரன் அவர்களும், ஏறாவூர் ஆதார வைத்தியசாலையின் தாதியியல் பணிமணை உத்தியோகத்தர் திரு. சு.புவீந்திரன் அவர்களும் அத்துடன் கல்வி நிலைய ஆலோசகர் திரு. சி.திலகன் அவர்களும், சமுர்த்தி உத்தியோகத்தர் மா.பரசுராமன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
நிகழ்வுகளில் மாணவர்கள் மற்றும் பெற்றோரும் கலந்து கொண்டனர். சித்தாண்டியின் இயற்கை வனப்புடைய பகுதிகளில் ஒன்றான சந்தணமடு ஆறு என்னும் இயற்கையான பிரதேசத்தில் இந்நூல் வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.













Previous Post Next Post