புவி வெப்பமடையும் வேகம் குறைகிறது

பருவநிலை மாற்றமடையும் வேகம் அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு தற்காலிகமாக குறையும் என்று பிரிட்டனின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பூவியின் வெப்பநிலை தொடர்ந்து உயரும் என்றாலும், வெப்பநிலை உயர்வு முன்பு கணிக்கப்பட்ட அளவை விட இருபது சதவீதம் குறைவாக இருக்கும் என்றும் அது கணித்துள்ளது.

இயற்கை காரணங்கள் காரணமாக புவி வெப்பமடைவது குறைந்திருக்கிறது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். சூரியனில் ஏற்பட்டிருக்கலாம் என்று கருதப்படும் மாற்றங்களும் கடல் நீர் சுழற்சியும் இதில் முக்கிய காரணங்களாகக் கருதப்படுகின்றன.
இயற்கை மாற்றங்களால் சற்றே தணியும் புவி வெப்பமடையும் வேகம், எதிர்காலத்தில் வெப்ப வாயுக்கள் வெளியீட்டால் மீண்டும் பழைய படி அதிகரிக்கலாம் என்றும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
Previous Post Next Post