சித்தாண்டி கிராமத்தின் 03, 04 ஆம் குறிச்சி பகுதிகளில் வெள்ளநீர் வந்துசேர்ந்துள்ளது. கடந்த சில நாட்களாக பெய்து வந்த மழை இன்று ஓய்வு நிலைக்கு வந்தபோதிலும், உறுகாமம் குளத்தினுடைய வான்கதவுகள் திறக்கப்பட்டதால் வெளியேறும் நீரே இந்த வெள்ள நிலமையை ஏற்படுத்தியுள்ளது.
இன்று சித்தாண்டி பிரதேசத்தில் மழை விட்டு வானம் தெளிவானதாக இருப்பதனால் இந்த வெள்ள நிலைமை பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தாது என சித்தாண்டி பிரதேசவாசி ஒருவர் குறிப்பிட்டார்.
இன்று சித்தாண்டி பிரதேசத்தில் மழை விட்டு வானம் தெளிவானதாக இருப்பதனால் இந்த வெள்ள நிலைமை பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தாது என சித்தாண்டி பிரதேசவாசி ஒருவர் குறிப்பிட்டார்.
வெள்ளநீரானது மதுரங்காட்டுக்கொலனி, சித்தாண்டி மாரியம்மன் ஆலய பகுதி ஆகியவற்றில் சுமார் 2 அடிவரையில் காணப்படுவதுடன், தீர்த்தக்கேணிவீதிவரை பரவியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இதனால் தாழ்வான பகுதியிலுள்ள ஒருசில மக்கள் இடம்பெயர்ந்து பாடசாலைகளில் தங்கியுள்ளமையையும் அவதானிக்கமுடிகின்றது. (இரவு வேளையில் ஒளிப்படங்கள் எடுக்கப்பட்டமையினால் தெளிவுதன்மை குறைவாகக் காணப்படுகின்றது)