சித்தாண்டியில் வெள்ளம் வடிந்து பொங்கல் நிகழ்வுகள் கோலாகலமாக இடம்பெற்றது. சித்தாண்டி 04 பகுதியில் நிலை கொண்டிருந்த வெள்ள நீரும் படிப்படியாக வடிந்து விட்டது. இருப்பினும் சில வசிப்பிடங்களில் வீடுகளில் இருந்து நீர் வடிந்திருந்தபோதும் அவர்களுடைய முற்றத்திலிருந்து நீர் வற்றவில்லை. இருந்தும் மக்கள் தமது கலாசார நிகழ்வை வீடுகளுக்குள்ளாவது வைத்து பொங்கி கொண்டாடியுள்ளனர்.
சித்தாண்டியில் உள்ள ஆலயங்களிலும் தொப்பொங்கல் தினத்தை முன்னிட்டு விசேட பூஜைகள் இடம்பெற்றிருந்தன.