பேஸ்புக் பாவனையளர்களினுடைய Account and Profile மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு வைரஸ் தற்போது சில தீய எண்ணம் கொண்ட பேஸ்புக் பாவனையாளர்களால் பரப்பப்பட்டு வருகின்றது. இதனை விழிப்பாக இருந்து அந்த வைரஸ் பாதிப்பிலிருந்து உங்களது கணக்கு விபரங்களைப் பாதுகாத்துக்கொள்ளவேண்டும். இந்த ஆக்கத்தினை எனது சொந்த அனுபவத்தினால் எழுதுகின்றேன். இன்று தொழிநுட்பத்தின் பலாபலன்களை கிராமங்களும் அனுபவிக்குமளவிற்கு வியாபித்துள்ளது.
ஆனால் ஒரு சில வஞ்சக எண்ணம் மற்றும் அடுத்தவருடைய ஒரு வியத்தை அடியோடு அழிக்கவேண்டும் என்று நினைக்கின்றவர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள்.
அந்தவகையில் பேஸ்புக் மெசேச் பகுதிக்கூடாக ஒருவகை இணைப்பு ஒன்றினை இத்தகையவர்கள் அனுப்புகின்றார்கள். அந்த இணைப்பு வழியே சென்றால் ".scr" எனும் Extension கொண்ட ஒரு பைல் தரவிறக்கம் செய்யப்படுகின்றது. அதனை தரவிறக்கிக் கொண்டு நாம் அதனை இயக்கினால் அந்த குறிப்பிட்ட வைரஸ் மூலம் நமது பேஸ்புக் எக்கவுண்ட் பாதிக்கப்படுகின்றது.
எனது பேஸ்புக் மெசேச்சிற்கும் இந்த இணைப்பு இருவால் அனுப்பப்பட்டது. அந்த இணைப்பை சென்று தரவிறக்கிய எனக்கு சிறிது சந்தேகம் வந்தது. உடனே தேடுபொறிகளில் தேடிப்பார்த்தபோதுதான் அது ஒரு வைரஸ் என்பதை அறியமுடிந்தது.
எனவே பேஸ்புக் பாவனையாளர்களே இத்தகைய இணைப்புகள் வருமானால் அதனை முதலில் தேடுபொறியில் கொடுத்து அது பற்றிய விளக்கத்தை பெற்றுக்கொள்ளவேண்டும். இல்லாத பட்சத்தில் எமது பேஸ்புக் கணக்கில் பல பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புண்டு.
இந்த இணைப்பில் சென்று இத்தகைய வைரசின் தாக்கம் பற்றி மேலும் அறிந்துகொள்ளுங்கள்.