அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்ட பூமி நடுக்கம் தொடர்பான விசேட ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக புவி ஆராய்ச்சி மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஆராயவென கொழும்பில் இருந்து அதிகாரிகள் குழுவொன்று அம்பாறை சென்றுள்ளதாக பணியகத்தின் தலைவர் என்.ரி.விஜயானந்த தெரிவித்தார்.
கடந்த மாதம் 24ம் திகதி முதல் இதுவரை அம்பாறை மாவட்டத்தின் ஏழு பிரதேசங்களில் பூமி அதிர்ச்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அதிர்வு, பள்ளேகல புவி அதிர்வு கருவியிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. புவி அதிர்ச்சியுடன் சத்தமும் கேட்டதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளார்கள்.
இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் இருந்து புவி நடுக்கத்திற்கான காரணம் அறியப்படவில்லை.
இது தொடர்பாக இலங்கை ஆராய்ச்சியாளர்களுக்கு போதுமான அறிவு காணப்படுவதால் பரிசோதனைகளை மேற்கொள்ள வெளிநாட்டு நிபுணர்களின் ஆலோசனைகை பெற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் கிடையாது என்று பணியகத்தின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.