கடந்த டிசம்பர் 18 ஆம் தினத்திலிருந்து வெள்ளத்தால் மூழ்கடிக்கப்பட்டிருந்த சித்தாண்டி கிராமம் தற்போது முழுமையாக நீர் வடிந்து சென்ற நிலையில் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது. வெள்ள நிலைமை 21 ஆம் திகதியிளவில் வடிந்து சென்றுகொண்டிருந்த நிலையில் மீண்டும் 23 ஆம் திகதியளவில் தொடர்ச்சியாக மழைபெய்தமையால் வெள்ளநீர் படிப்படியாகவே வடிந்துசென்றது.
பிராதான வீதி, சித்தாண்டி 03 ஆகிய பகுதிகளில் இருந்த வெள்ள நீர் விரைவாக வடிந்துசென்றாலும், சித்தாண்டி 04 மதுரங்காட்டுக்கொலனி, உதயன்மூலை ஆகிய பகுதிகளில் உள்ள நீh மெதுமெதுவாவே வடிந்தோடத் தொடங்கியது. அந்தவையில் தற்போது (30.12.2012) வெள்ளநீர் சித்தாண்டியின் பெரும்பாவலான பகுதிகளில் இருந்து வடிந்து சென்றுள்ளது.
இதேவேளை சித்தாண்டி கிராமத்தின் வயல் எல்லையில் அமைந்துள்ள வீதிக்கு மறுபக்கத்தில் உள்ள வயல் நிலங்கள் மற்றும் புளியடி பிள்ளையார் ஆலயம் வரையிலான வீதி ஆகியவற்றில் சுமார் 3 அடிக்குக் குறைவான நீர் காணப்படுகின்றது.