குசலானமலை ( Kusalanamalai)

குசலானமலைப் பற்றிய ஆரம்பம் சுமார் முப்பது தலைமுறைகளாக ( சுமார் 2000 வருடங்களுக்கு முதல் ) காணப்படுகின்றதாம். 30 தலைமுறைகள் என குறிப்பிடப்படுகின்றமைக்கு காரணம் இம் மலை மீது முருக வழிபாடு சுமார் 30 தலைமுறைகளாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றமையே ஆகும்.
இம் மலையில் மனிதனுக்கு தென்படாத பல வகையான மர்மமான விடயங்கள் காணப்படுகின்றதாம். அவை தற்போதும் இம் மலையில் பூதங்கள் புதையல்களை பாதுகாத்துக் கொண்டு வாழ்வதாவும் இம் மலையில் கண்ணுக்கு புலப்படாத குகை காணப்படுவதாவும் அத்துடன் வேடுவ இனத்தர்கள் மலையின் ஒரு பகுதியில் வாழ்வதாகவும் முற்காலத்தில் வாழந்த மன்னன் ஒருவன் மலையினை ஒளிந்து வாழ்வதற்காக பயன்படுத்தியதாகவும் அத்துடன் இங்கு காணப்படும் முருகன் கோவில் மிகவும் சக்தி வாய்ந்தது எனவும் குறிப்பிடுகின்றனர்.
இப் பகுதியில் வேளாண்மை அறுவடை மேற்கொள்ளும் காலத்தில் இம் மலையில் புதையல்களை பாதுகாத்துக் கொண்டிருக்கும் பூதங்கள் முற்றிய நெல்களைக் கொண்டு இம் மலை மீது வைத்து தங்களுக்கு தேவையான உணவினை தயாரித்துக் கொள்ளுமாம் இச் சம்பத்தினை இங்கு வாழும் மக்கள் நேரடியாக பார்வையிடத போதிலும் இச் சம்பங்கள் நடைபெற்றமைக்கான ஆதாரங்கள் இம் மலைப் பகுதில் காணலாம் குறிப்பிடுகின்றனர்.
குசலான மலையில் புதையல்கள் அகழந்தொடுக்கப்பட்டமைக்கு சான்றாக இங்கு தோண்டப்பட்ட கிடங்குகள் காணப்படுகின்றன. ஆனால் தற்போது அவற்றினுள் புற்கள் வளர்ந்து பற்றையாக காட்சியளிக்கின்றன.
இவ் ஆய்வுப் பயணத்தை மேற்கொள்ளும் போது மலை அடிவாரத்தில் வசிக்கின்ற மக்கள் நண்பகல் வேளையில் 'வேடுவ' இனத்தைச் சேரந்தவர்கள் இக் கோவிலுக்கு வந்து இங்கு குடிகொண்டிருக்கும் இறைவனை வணங்கி பூசைகளை மேற்கொள்வதாகவும் இவ்வின மக்கள் ஆரம்பத்திலிருந்து இங்கு காணப்படும் இறைவனை 'குமாரத் தெய்வம்' என்கின்ற வடிமாக கொண்டு வழிபட்டு வருகின்றனர் எனவும் குறிப்பிட்டனர்.
குசலானமலையில் காணப்படும் வரலாற்று மூலாதாரங்கள்
இப் பிரதேச மக்கள் குறிப்பிட்டது போன்று இம் மலையில் பல வகையான வரலாற்றுச் சான்றுகள் காணப்படுகின்றன.இச் சுவடுகள் பொலநறுவை, அனுராதபுரம் போன்ற பிரதேசங்களில் காணப்படும் வரலாற்று மூலாதாரங்களுக்கு இணையானதாக காணப்படுகின்றன. அவை பின்வருமாறு
1. கற்தூண்கள்
2. கல்வெட்டு
3. பிரேதங்களை சுத்தமாக்குமிடம்
4. செங்கற்கள்
5. குகை அமைப்புகள்
6. புதையல் அகழ்ந்து எடுக்கப்பட்ட கிடங்குகள்
குசலானமலையினை சூழவுள்ள பொருளாதார நிலை
இக் குசலான மலையினை சுற்றி பிரதானமாக நெற்ப் பயிர்ச் செய்கை நடைபெற்று வருகின்றது. இந் நெற்பயிர் செய்கையானது மழை நீரினையும் இங்கு காணப்படும் கரடியன் குளத்தினையும் நம்பியே மேற்கொள்ப்படுகின்றது. இப் பயிர்ச் செய்கை ஆடி மாதத்தின் கடைசியில் இருந்து மாசி மாத வரையிலான காலப்பகுதியிலேயே மேற்கொள்ளப்படுகின்றனது.
இப் பிரதேசத்தில் எடுத்தாக காணப்படும் பயிர்செய்கை சேனைச் செய்கையாகும். இப் பயிர்செய்கைக்கு குறிப்பிட்ட காலப்பகுதியில் செய்ய வேண்டும் என்கின்ற காலவறையறை இல்லை. பிரதான பயிராக சோளன், கச்சான், மரவள்ளிக் கிழங்கு போன்றன பயிரிப்படுகின்றன.
குசாலன மலைக்கு அருகில் காணப்படும் 'கரடியன் குளத்தினை' அடிப்படையதாகக் கொண்டு மீன்பிடிக் கைத்தொழில் அப்பிரசேத்தில் மேற்கொள்ப்படுகின்றன. இக் குளத்தில் காணப்படும் பிரதான வகையான மீன்கள் கோல்டன், பனையான், கச்சபொட்டியான், விறால் போன்றனவாகும்.
இக் குசாலனை மலைப் பிரதேசமானது மந்தை வளர்ப்பிற்கும் ஏற்றதொரு பிரதேசமாக காணப்படுவதால் இங்கு மந்தை வளர்ப்பும் மேற்கொள்ளப்படுகின்றன்.பிரதான மந்தைகளாக கோழி,ஆடு, மாடு, எருமைமாடு போன்றனவாகும்.
குசலானமலையினை சூழவுள்ள பிரதேசத்தின் காலநிலை
இலங்கை நாட்டின் கிழக்குப் பிரதேசத்தில் அமைந்துள்ள பிரதேசமே இக் குசலான மலையாகும். இப் பிரதேசமானது இலங்கையின் வெப்பவலயத்தில் அமைந்துள்ளது. ஆகையால் வருடத்தில் வெப்பம் அதிகமான காணப்படும். சராசரி வெப்பநிலையாக 27 C தொடக்கம் 35 C வரை காணப்படுகின்றது. அத்துடன் வெப்ப காலத்தில் மாலை வேளைகளில் குளிருடன் கலந்த காற்றும் வீசுகின்றது.
இப் பிரதேசத்திற்கு மழைவீச்சியானது 'வடகீழ் பருவக்காற்று' மூலமே கிடைக்கின்றது. அதிகமாக மார்கழி மற்றும் தை மாதங்களிலேயே அதிக மழைவீழ்ச்சி கிடைக்கின்றது.
குசலானமலையில் காணப்படும் உயிர் வகைமைகள்
விலங்குகள்
இங்கு காணப்படும் விலங்குகளாக
• குரங்கு
• மயில்
• பாம்பு
• எலி
• யானை
• காட்டுப்பன்றி
• எறும்புகள்
• சிறு பூச்சிகள் இனங்கள் போன்றன காணப்படுகின்றன.
தாவரங்கள்
இப் பிரதேசத்தில் வைரம் நிறைந்த மரங்கள் அதிகமாக காணப்படுவதுடன் கொடிகள், சிறு மரங்கள், புற்கள் போன்றவும் காணப்படுகின்றன.
குசலானை மலைப் பிரதேசத்தில் ஏற்படக் கூடிய இடர் மற்றும் அனர்த்தங்கள்
இக் குசலானை மலையானது இயற்கை எழிலுடன் காணப்பட்டாலும் சில சந்தர்ப்பங்களில் பின்வரும் அனர்த்தங்கினால் பாதிப்புக்குள்ளாகின்றனது.
• வருடத்தில் அதிக வெப்பம் காணப்படுவதால் வரட்சிக் காலங்களில் நீருக்குரிய பற்றாக்குறை ஏற்படுகின்றனது.
• வடகீழ் பருவக்காற்று வீசும் காலங்களில் அதிக மழை வீழச்சி மூலம் இங்கு காணப்படும் கரடியன் குளம் நிரம்பிவிடுவதால் வான் கதவுகள் திறக்கப்படும் சந்தர்ப்பங்களில் வெள்ள அனர்த்தம் ஏற்பட்டு வயல் நிலங்கள் மற்றும் பாதைகள் பாதிப்புக்குள்ளாகின்றன.
• இங்கு மிருங்களினால் ஏற்படும் இடர்களும் அனர்த்தங்களும் ஏற்படுகின்றன குறிப்பாக யானைகளில் அட்டகாசச் செய்றபாடுகளைக் குறிப்பிடலாம்.


Previous Post Next Post