குடும்பிமலை புலம் பெயர் உறவுகளின் உன்னத சேவை

மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவாங்கரையில் மிகவும் பின்தங்கிய கிராமமான 18 மாணவர்களையே பாடசாலையாக கொண்ட குடும்பிமலை குமரன் வித்தியாலயத்தில் இன்று(17/12/2017) லண்டனில் வசிக்கும் திரு,திருமதி இந்திரன் சுபோ தம்பதியினரின் மகள் மெலானியின் 16வது பிறந்தநாளை முன்னிட்டு மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது.

மெலானிக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களும் நன்றிகளும்..அத்தோடு இதனை ஏற்பாடு செய்த ஜோர்ச் அண்ணாவிற்கும் எமது நன்றிகளை தெரிவிக்கின்றோம் அத்தோடு தரம் 5 வரையே வகுப்புக்களைக் கொண்ட பாடசாலையாகக் காணப்பட்ட போதிலும் தரம் 5 இல் புலமைப் பரிசில் பரீட்சை எழுதி பொ.சயுர்தன் எனும் மாணவர் 118 புள்ளிகள் பெற்றமை பாராட்டத்தக்கது. இன்னும் பின்தங்கிய நிலையிலேயே காணப்படும் இப்பிரதேசத்தில் ஓர் முன்பள்ளிப் பாடசாலை இல்லாதது வேதனைக்குறிய விடயமாகும். மற்றும் தரம் 5 இன் பின் மேலதிகப் படிப்பிற்கு கிட்டத்தட்ட 20 Km தூரத்தில் இருக்கும் கோரகல்லீமடு அல்லது கிரான் பாடசாலைக்கே செல்ல வேண்டி ஏற்படுவதுடன், பல மாணவர்கள் இடைவிலகி தங்களது தொழிலான விவசாயத்தை சிறு வயதிலேயே செய்யும் அபாயம் ஏற்பட்டு மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாக உள்ளது. நகர் புறங்களில் சிறப்பாக கல்வி பயிலும் மாணவர்கள் கிராமப் புறத்திலேயே உருவாக்கப்படுகின்றார்கள் என்பதை யாரும் மறந்துவிடக்கூடாது.

Previous Post Next Post