சபரகமுவ மாகாணத்தில் ஆசிரியர் வெற்றிடம் - 17.10.2016


சபரகமுவ மாகாணத்திற்குட்பட்ட பாடசாலைகளில் நிலவும் ஆசிரிய வெற்றிடங்களை நிரப்புவதற்காக பட்டதாரிகள் மற்றும் ஆங்கிலம் தொடர்பான இரண்டு வருட டிப்ளோமாதாரிகளிடமிருந்து (சிங்கள / தமிழ் மொழி மூலம்) விண்ணப்பங்களைக் கோரல் - 2016








சபரகமுவ மாகாண சபைக்குரித்தான பாடசாலைகளில் நிலவும் ஆசிரிய வெற்றிடங்களுக்காக இலங்கை ஆசிரிய சேவை பிரமாணக் குறிப்பிற்கமைய இலங்கை ஆசிரிய சேவையின் 3 – I (அ) தரத்திற்கு பட்டதாரிகளையும் மற்றும் 3 – I (இ) தரத்திற்கு ஆங்கிலம் தொடர்பான இரண்டு வருட முழுநேர டிப்ளோமாதாரிகளை (சிங்கள /தமிழ் மொழிமூலம்) பாடசாலைகள் அடிப்படையில் ஆட்சேர்ப்பு செய்வதற்காக சபரகமுவ மாகாண பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமாதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. 





தகைமைகள் 





அ. பொதுத் தகமைகள்


(i) இலங்கைப் பிரஜையாக இருத்தல் வேண்டும்.


(ii) சிறந்த தேகாரோக்கியமும் நன்னடத்தையும் உள்ளவராக இருத்தல் வேண்டும்.


(iii) 2016.10.17 ஆம் திகதியன்று 18 வயதிற்கு குறையாமலும் 35 வயதிற்கு மேற்படாமலும் இருத்தல் வேண்டும்.


(iv) விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித் திகதிக்கு அதாவது 2016.10.17 ஆம் திகதிக்கு முன்னரான மூன்று ஆண்டுகள் சபரகமுவ மாகாணத்தில் நிரந்தர வசிப்பிடத்தைக் கொண்டிருத்தல் வேண்டும். (நேர்முகப் பரீட்சையின் போது தமது நிரந்தர வதிவை கிராம உத்தியோகத்தரின் சான்றிதழ் அல்லது வேறு ஏதாவது ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய ஆவணமொன்றின் மூலம் உறுதிப்படுத்த வேண்டும்.)





ஆ. கல்வித் தகைமைகள்


(i) விண்ணப்பிக்கும் அனைத்துப் பட்டதாரிகளும் இலங்கை ஆசிரியர் சேவை பிரமாணக் குறிப்பிற்கமைய 2016.10.17 ஆம் திகதியன்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட ஏதாவது (உள்நாட்டு / வெளிநாட்டு) பல்கலைக்கழகம் ஒன்றில் பட்டத்தைப் பெற்றிருக்க வேண்டும். ஆங்கில வெற்றிடங்களுக்காக விண்ணப்பிக்கும் டிப்ளோமாதாரிகள் 2016.10.17 ஆம் திகதியன்று இலங்கை உயர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் (SLIATE) அல்லது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட ஏதாவது (உள்நாட்டு / வெளிநாட்டு) பல்கலைக்கழகம் ஒன்றினால் வழங்கப்படும் ஆங்கில மொழி தொடர்பிலான இரண்டு வருட மழு நேர டிப்ளோமாவைப் பெற்றிருத்தல் வேண்டும். அந்தப் பட்டத்தைப் பெற்றிருக்கும் பிரதான பாடங்களுக்குரித்தான ஒவ்வொரு பாடங்களின் பொருட்டும் அட்டவணை இல. 01 இல் குறிப்பிடப்பட்டுள்ள தகைமைகளுடன், பின்வரும் 11 இன் தகைமைகளைப் பூர்த்தி செய்திருத்தல் கட்டாயமாகும். 





(ii) கல்வி அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட கொள்கையின் அடிப்படையில் க.பொ.த. (சா/த) பரீட்சையிலும் மற்றும் க.பொ.த. (உஃத) பரீட்சையில் கீழ்க் குறிப்பிட்டுள்ளவாறு சித்தியடைந்திருக்க வேண்டும். 


க.பொ.த. (சா/த) பரீட்சையில் இரு தடவைகளுக்கு மேற்படாத வகையில் தாய்மொழி மற்றும் கணிதம் உட்பட 03 திறமைச் சித்திகளுடன் 06 பாடங்களில் சித்தியடைந்திருக்க வேண்டும்.


அத்துடன்


க.பொ.த. (உ/த) பரீட்சையில் புதிய பாடத்திட்டத்தின் கீழ் ஒரே தடவையில் 03 பாடங்களில் (பொதுச் பரீட்சை, பொது ஆங்கிலம் தவிர்ந்த) சித்தியடைந்திருக்க வேண்டும்.





விண்ணப்பப்படிவத்தைக் கீழேயுள்ள இணைப்பிலிருந்து தரவிறக்கிக்கொள்ளுங்கள்.












அறிவுறுத்தல்களை பார்வையிடுவதற்குக் கீழேயுள்ள படங்களின் மீது சொடுக்கி, அதனைப் பெருப்பித்து பார்ப்பதன் மூலம் அறிந்து கொள்ளலாம். விண்ணப்ப முடிவுத் திகதி 17.10.2016 ஆகும்.
























Previous Post Next Post