சித்தாண்டி பாடசாலை வேம்பு மரத்திலிருந்து பால் வடிகின்றது.

(Akshayan) சித்தாண்டி சித்திவினாயகர் வித்தியாலய வளாக வேம்ப மரத்திலிருந்து நேற்றைய தினத்திலிருந்து பால்போன்ற ஒரு திரவம் வெளியேறிக்கொண்டிருக்கின்றது. இது ஒரு தெய்வீக நிகழ்வாக கிராம மக்கள் சிலரால் பார்க்கப்படுகின்றபோதும்,  இது ஓர் இயற்கை நிகழ்வேயாகும்.


தாவரங்கள் சூழலின் காலநிலைத்தன்மைக்கேற்ப வாழப்பழகிக்கொண்டவை என்று கூறலாம். வரண்ட பருவங்களில் அதிக ஆவியுயிப்பு இலைகளுக்கூடாக நிகழக்கூடாது என்பதற்காக தமது இலைகளை உதிர்த்து தாவரத்திலிருந்து மேலதிகமாக நீர் வெளியேறுவதனைக் கட்டுப்படுத்துவதனை இதற்கு சிறந்த ஓர் உதாரணமாகச் சொல்லலாம். 

அந்தவைகயில் சில பிரதேசங்களில் வேப்பமரத்திலிருந்து வெள்ளையான திரவம் வெளியேறுகின்றபோது அதனைப் பால்வடிவதாகவூம்இ சமயநம்பிக்கையுடன் தொட்புடையதாகவும் எண்ணி சில இடங்களில் அதிசயப்படுகின்றனர். ஆனால் இந்த வேப்ப மரத்திலிருந்து பால் போன்ற திரவம் வெளிவருவதானது  இயல்பான ஒரு விடயம்தான். மாறாக அதிசயப்படுவதற்கு ஒன்றுமில்லை.

பொதுவாக    Azadirachta indica    என்ற விஞ்ஞானப் பெயரால் அழைக்கப்படுகின்ற வேம்பு (Neem Tree)  மரமானது  இந்தியாஇ இலங்கை பர்மா போனற அயன வலய நாடுகளில் வளHகின்ற ஒரு மருத்துவக்குணமுடைய ஒரு மரமாகும்.
வேப்பமரங்கள் ஸ்டோர்ச் எனப்படுகின்ற மாவூச்சத்தைக் கொண்டுள்ளது. இந்த மாவூச்சத்தினை வேப்பமரத்தினுடைய இலைகள் சர்க்கரையாக மாற்றுகின்றன. இவ்வாறு சர்க்கரையாக மாற்றப்பட்ட திரவமானது பால்நிறத்தில் காணப்படுவதுடன்இ இனிப்பச் சுவையுடையதாகவும் காணப்படும். இந்தத்திரவமானது வேப்பமரத்தின் பட்டையின் அடியிலுள்ள புளோயம் என்ற திசுப்பகுதியில் சேமிக்கப்படுகின்றது.

இவ்வாறு வேம்பு மரத்தின் பட்டையின் அடிப்பகுதிகளில் சேமிக்கப்பட்டிருக்கின்ற பால்நிறத்திலான திரவமானது  வேப்பம் பட்டைக்கூடாக வெளியேறும்போதே பால் என அழைக்கப்படுகின்றது. வேம்பு மரம் மட்டுமல்ல தாவரங்கள் வேரினுடாக நீர் மற்றும் போசனைகளை உறிஞ்சி ஓர் நுண்ணிய சுற்றுவட்டத்தினை தங்களுடைய பகுதிகளுக்குள்ளே நிகழ்த்துகின்றன. வேர்களுடாக நீரை உறிஞ்சுவதன் மூலம் தாவரத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் நீரூம் மற்றும் போசனைகளும் கடத்தப்படுகின்றன.

அதிக மழை நிகழும் காலங்களில் இவ்வாறு வேப்ப மரத்தினால் அதிகளவில் நீர் உறிஞ்சப்படுகின்றது. இதனால் சிலவேளைகளில் வேப்பமரத்தின் திரவத்தின் தேவையை அல்லது தாங்குதிறனை விட அதிகிhpக்கின்றபோது அந்த நீருடன் சேர்ந்த திரவங்கள் மரத்திலிருந்து ஏதாவது ஓர் பகுதியினால் வெளியேற முற்படுகின்றன. இந்தவேளையில் வேப்பமரத்தின் பட்டையின் அடியிலுள்ள  திசு வெடிப்படைந்து அதனுடாக அந்த மேலதிக திரவம் வெளியேறுகின்றது.

இவ்வாறு வெளியேறுகின்ற திரவம் பாலின் நிறத்திலும்.  இனிப்புச் சுவையுடையதாகவும் இருக்கின்றபோது அதனை பால் வடிதல் என பிரதேச மக்கள் அழைக்கின்றனர். பின்னர் மேலதிக திரவம் வெளியேறி முடிவடைந்த பின்னர் ஓரிரு நாட்களில் பட்டையில் உள்ள பிளவுகளினுடாக பால் கசிதல் நின்றுவிடுகின்றது. எல்லா வேம்பு மரங்களிலும் ஒரே காலப்பகுதியில் பால்வடிதல் நிகழ்வதில்லை. அது தாவரத்தின் வேரின் பரம்பல், ஆழம், உறிஞ்சுகின்ற நீரின் அளவு,   ஆவியுயிர்ப்பு அளவு மற்றும் உணவுத்தயாரிப்பின் அளவு ஆகியவற்றில் தங்கியிருப்பதனாலேயே ஒரு சில மரங்களில் வடிகின்றது.

எமது பிரதேசத்தில் நிகழ்ந்த வேப்பமரத்திலிருந்து பால்வடிவதற்குரிய காரணமும் மேற்கூறியதைப் போன்றதேயாகும். கடந்த டிசம்பர் மாதத்திலிருந்து தொட்ர்ச்சியாக கிடைத்து வந்த மழையின் காரணமாக அதிக நீரை வேப்பமுரம் உறிஞ்சியிருந்தது. இந்த மேலதிக திரவம் மாப்பொருளுடன் கலந்தே இந்தப் பால் வடிதல் நிகழ்வு இடம்பெற்றது. 
  (Photos by Thayabaran & Thasankan)





Previous Post Next Post