இந்து இறைவர்களின் தமிழ் பெயர்கள்

நாம் சிவன், பார்வதியின் பல பெயர்களை படித்தும், பார்த்தும், கேட்டும் இருக்கின்றோம். பல பெயர்கள் சமஸ்கிருத மொழிப்பெயர்களேயாகும். நம்முள் எத்தனை பேருக்கு தெரியும் அவற்றின் தமிழ் அர்த்தங்கள். எனவே அப்பெயர்களுக்கான தமிழ் அர்த்தங்களை கீழ்வருமாறு பார்ப்போம். 



சமஸ்கிருதம்                           தமிழ்
1.    சாம்பசிவன்            -        அம்மையப்பன்
2.    ஈஸ்வரன்                   -            உடையான்
3.    ஜகதீஸ்வரன்             -            உலகுடையான்
4.    பக்தவத்சலன்            -              அடியார்க்கு நல்லான்
5.    ஏகாம்பரன்             -            ஒருமாவின்கீழன்
6.    சுந்தரன்             -            சொக்கன்
7.    மாத்துருபூதம்        -                  தாயுமானவன்
8.    சுயம்பு               -               தான்தோன்றி
9.    குஞ்சிதபாதம்             -            தூக்கிய திருவடி
10.    தட்சிணாமூர்த்தி        -              தென்முகநம்பி
11.    நடராஜன்           -               நடவரசன்
12.    வன்மீகநாதன்          -                புற்றிடங்கொண்டான்
13.    மகாதேவன்         -                   பெருந்தேவன்
14.    பிருகதீஸ்வரர், மகேஸ்வரர்       -           பெருவுடையான், மங்கை பங்கன்
15.    அர்த்தநாரி, அர்த்தநாரீஸ்வரர்      -            மாதொருபாகன்   
16.    கல்யாணசுந்தரர்       -               மணவழகன்
17.    மாக்கபந்து, மாக்கசகாயன்         -        வழித்துணையான்
18.    அம்பா              -                அம்மை
19.    அபிராமி, சுந்தராம்பா          -            அழகம்மை
20.    வாமி                -              இடவி
21.    ஜகதாம்பா             -            உலகம்மை
22.    அகிலாண்டேஸ்வரி       -               உலகமுழுதடையாள்
23.    மீனாஷ;சி          -                கயற்கண்ணி
24.    காமாஷp             -            காமக்கண்ணி
25.    விசாலாஷp            -              தடங்கண்ணி
26.    நீலாம்பா        -                  நீலம்மை
27.    பார்வதி            -                  மலைமகள்
28.    காந்திமதி           -               வடிவுடையாள்
29.    அபிதாகுஜாம்பாள்      -                உண்ணாமலையம்மன்





  -   
(ஆக்கம் :- அ.பிரசாந்தன், கிழக்குப் பல்கலைக்கழகம்)
       

Previous Post Next Post