யாழ்ப்பாணத்தைக் கடந்து செல்கிறது புயல்


வங்காள விரிகுடாவில் மையம் கொண்டுள்ள தாழமுக்கமானது அயனப் புயலாக  மாற்றமடைந்து வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து செல்கின்றது. இப்புயலானது இன்று நள்ளிரவு யாழ்ப்பாணத்தின் கிழக்குக் கரையோரமாக  புயலின் கண்ணானது கடந்து செல்லும். 

தற்போது மணித்தியாலத்திற்கு சுமார்  65 கிலோமீற்றர் சுழற்சி வேகத்தைக் கொண்ட புயலானது இன்று நள்ளிரவு 12.00 மணியளவில் மணித்தியாலத்திற்கு 75 கிலோமீற்றர் சுழற்சி வேகத்தில் சென்று நாளைய தினம்  (30.10.2012) இந்தியாவின் தமிழ்நாட்டுப் பகுதியினை தாக்கவிருக்கின்றது.

இலங்கையின் வடகீழ் கரையை இப்புயலானது கடந்து செல்வதனால் நாட்டின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 
Location of Tropical Storm on World Map

Tropical Cyclone moving Path

Tropical Cyclone moving Path
Scale of Storm
 (1knots = 1.852 km/h)  
Sources:-
http://tropic.ssec.wisc.edu/
http://www.usno.navy.mil/JTWC/
http://en.wikipedia.org/wiki/Tropical_cyclone_scales
Previous Post Next Post