சித்தாண்டியில் பலமான காற்றுடன் மழை – 29.10.2012

மட்டக்களப்பு மாவட்டத்தின் சித்தாண்டி பிரதேசத்திலும் இன்று பலத்த காற்றுடன் மழை பெய்து வருகின்றது. இதனால் விவசாய நிலங்களுக்கு செல்வதற்கான சந்தணமடு ஆறு வரையிலான வீதி மற்றும் சில வீதிகள் சேறும் சகதியுமாகக் காணப்படுவதுடன், சந்தணமடு ஆற்றின் நீர்மட்டமும் சற்று அதிகரித்து வருகின்றது. 

 வங்களா விரிகுடாவில் தாழமுக்க நிலைமை
வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள தாழமுக்க நிலைமை காரணமாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் பலமான காற்றுடன் கூடிய மழைவீழ்ச்சி கிடைத்து வருகின்றதுடன், கடற்பகுதிகளும் கொந்தளித்துக் காணப்படுவதாக வளிமண்டலவியல் தினைக்களம் அறிவித்துள்ளது.

முல்லைத்தீவிலிருந்து சுமார் 250 கிலோமீற்றர் தூரத்தில் மையம் கொண்டுள்ள தாழமுக்க நிலைமை தீவிரமைடைந்தமையினாலேயே இந்த காலநிலை தீவிரதன்மை காணப்படுவதாகக் குறிப்பிடப்படுகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் சித்தாண்டி பிரதேசத்திலும் இன்று பலத்த காற்றுடன் மழை பெய்து வருகின்றது. இதனால் விவசாய நிலங்களுக்கு செல்வதற்கான சந்தணமடு ஆறு வரையிலான வீதி மற்றும் சில வீதிகள் சேறும் சகதியுமாகக் காணப்படுவதுடன், சந்தணமடு ஆற்றின் நீர்மட்டமும் சற்று அதிகரித்து வருகின்றது.

Previous Post Next Post