இலங்கையின் குடிசன,வீட்டு வசதிகள் தொகை மதிப்பு - 2011


இலங்கையின் குடிசன,வீட்டு வசதிகள் தொகை மதிப்பு - 2011

இலங்கையின் குடிசன, வீட்டுவசதிகள் தொகைமதிப்பு - 2011 இற்குரிய கணக்கெடுப்புகள் எதிர்வரும் பெப்ரவரி 27 தொடக்கம் மார்ச் 22 ஆம் திகதிவரை இடம்பெற உள்ளது. இதேவேளை குடிசன, வீட்டு வசதிகள் தொகை மதிப்பு பற்றியதாக இந்த ஆக்கம் அமைகின்றது.



வரையறுக்கப்பட்ட ஒரு பிதேசத்தில் குறித்த காலப்பகுதியில் வாழ்கின்ற மக்களின் அளவே குடித்தொகை என அழைக்கப்படுகின்றது. இந்தக் குடித்தொகையின் அளவை குறிப்பிட்ட ஒரு காலத்தில் கணக்கெடுப்பதே குடிக்கணிப்பாகும்.  நாட்டின் அபிவிருத்தியில் முக்கிய பங்கு வகிக்கின்ற மனித வளத்தை சரியான முறையில் அறிந்து வைத்திருப்பதன் மூலமே அபிவிருத்தி நடவடிக்கைகளை இலகுவாக மேற்கொள்ளலாம். இதன் காரணமாக குடிசன மதிப்பீடுகள் பல்வேறு நாடுகளிலும் குறிப்பிட்ட காலப்பகுதிகளில் இடம்பெறுகின்றன. உலக ரீதியாக பொதுவாக 10 வருடங்களுக்கு ஒரு முறை குடிசன மதிப்பீடு பெரும்பாலான நாடுகளில் இடம்பெறுகின்றது.



குடிசன மதிப்பீடானது இரண்டு முறைகளில் மேற்கொள்ளப்படுகின்றது. அதாவது நடைமுறைக் கணக்கெடுப்பு (Defacto) , சட்டப்பிரகார கணக்கெடுப்பு(Dejure) என்பனவே அவையாகும்.

நடைமுறைக் கணக்கெடுப்பு (Defacto)
நடைமுறைக் கணக்கெடுப்பு அல்லது யதாhத்தமான கணக்கெடுப்பு எனும் போது, சனத்தொகைக் கணக்கெடுப்பின்போது மக்கள் காணப்படும் இடங்களிலேயே கணக்கெடுப்பதாகும்.  இந்த முறையானது பொதுவாக  ஒரு குறிப்பிட்ட நாளின் இரவுவேளையில் நாடு முழுவதும் பல குடிகக்ணிப்பு அதிகாரிகளைக் கொண்டு கணிப்பிடப்படும். அந்த நாட்களில் அரச விடுமுறை வழங்கப்பட்டு அணைவரும் வீடுகளில் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டிருக்கும்.

நடைமுறைக் கணக்கெடுப்பு முறையின் நன்மைகள்:-
மிகத்தெளிவானதும் எளிமையானதுமான முறை, சாவதே ஒப்பீடு மிக இலகுவாக இருக்கும், குறுகிய நெரம் தேவைப்டல், பெறப்பட்ட தகவல்கள் நம்பகமானவையாக இருக்கும்.

நடைமுறைக் கணக்கெடுப்பு முறையின் தீமைகள்:-
நிலையற்ற மக்கள் கணக்கெடுக்கப்படமாட்டார்கள், பயி;சி பெற்ற மற்றும் அதிகமான கணக்கெடுப்பாளாகள் தேவை, விரைவாக கணக்கெடுப்பு இடம்பெறுவதனால் தவறுகள் நிகழக்கூடும்.

சட்டப்பிரகார கணக்கெடுப்பு (Dejure)
சட்டப்பிரகார கணக்கெடுப்பு எனும்போது , சனத்தொகை கணக்கெடுப்பின்போது அவர்களின் வழமையான வசிப்பிடத்தினை அடிப்படையாகக் கொண்டு கணக்கெடுக்கப்படும். இந்த முறையானது பொதவாக பகல் வேளைகளில் ஒன்று அல்லது இரண்டு, மூன்று வாரங்களாக கணக்கெடப்பு இடம்பெறும்.

சட்டப் பிரகார கணக்கெடுப்பின் நண்மைகள்:-
போதுமான நேரம் காணப்படும், தவறுகள் குறைக்கப்படும், அதிக தகவல்களைப் பெறமுடியும், பெறப்பட்ட தகவல்கள் நம்பகமானவையாகக் காணப்படும்.

சட்டப் பிரகார கணக்கெடுப்பின் தீமைகள்;:-
தற்காலிக வரையறைகள் அதிகம், சில வாரங்கள் தரவு சேகரிப்பதனால் பிறப்பு, இறப்பக்களில் மாற்றம் நிகழும், ஒருவரின் நிலையான வதிவிட முகவரியில் சந்தேகம் எற்படலாம்.

இலங்கையின் குடிசனக் கணக்கெடுப்பு

இலங்கையில் குடிசனக் கணக்கெடுப்பானது ஒவ்வொரு 10 வருடங்களுக்கு ஒரு முறை இடம்பெற்று வருகின்றது. இலங்கையின் குடிசனக் கணக்கெடுப்பினை இலங்கை தொகைமதிப்பு பள்ளிவிபரவியல் தினைக்களம் மேற்கொள்கின்றது. இலங்கையில் விஞ்ஞான பூர்வமான முதலாவது குடிக்கணிப்பு 1871 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்டது. பின்னர் ஒவ்வொரு 10 வருடங்களுக்கு ஒரு தடவை இக்கணிப்பீடு மேற்கொள்ளப்பட்டு வந்தபோதிலும் சில தடவைகளில் இந்த இடைவெளியில் மாற்ற் காணப்பட்டது.இலங்கையின் குடிக்கணிப்பானது 1871, 1981, 1891, 1901, 1911, 1921, 1931 ஆகிய ஆண்டுகளில் முறையே இடம்பெற்றுவந்தது. ஆனால் 1941 இல் இரண்டாம் உலக மகாயுத்தம் காரணமாக இடம்பெறவில்லை. பின்னர் 1946, 1953, 1963 மீண்டும் 1971, 1981 என கணிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டது.

1991 இல் இலங்கையில் நிலவிய  யுத்த சூழ்நிலைமைகள் காரணமாக அக்கணிப்பீடு இடம்பெறவில்லை. பின்னர் மீண்டும் 2001 இல் இறுதியாக கணிப்பிடு இடம்பெற்றது. ஆனால் இதில் அம்பாறை தவிர வடக்கு கிழக்கு மாகாணங்களிலுள்ள  மாவட்டங்கள் குடிக்கணிப்புக்கு உட்படவில்லை. இவற்றுக்குரிய தரவுகள் மதிப்பீட்டு முறையிலேயே கணிக்கப்பட்டன. அதேவேளை 2011 இற்குரிய சனத்தொகைக் கணிப்பீட்டை இலங்கை முழுவதும் மேற்கொள்வதற்குரிய நடவடிக்கையை தொகைமதிப்பு புள்ளிவிபரவியல் தினைக்களம் மேற்கொண்டிரந்தது. ஆனால் துரதிஸ்டவசமாக குடிக்கணிப்பிற்குரிய வினாக்கொத்து (படிவம்) அச்சுப்பதிவு செய்யும் இயந்திரம் இடையில் பழுதடைந்நதனால் அது காலதாமதமாகி தற்போது இடம்பெறுகின்றது. இது 2012 பெப்ரவரி மார்ச் மாதங்களில் இடம்பெற்றாலும் உத்தியோகபூர்வமாக குடிசன, வீட்டுவசதிகள் தொகை மதிப்பு 2011 (கணக்கெடுப்புக் கட்டம் - மார்ச் 2012) என்றவாறே அறிவிக்கப்படும் என தொகை மதிப்பு புள்ளிவிபரவியில் தினைக்களம் அறிவித்துள்ளது.

இந்தக் கணக்கெடுப்பை முன்னிட்டு கிராமசேவகர் பிரிவு ரீதியாக கணக்கெடுப்பு உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டு அவர்கள் கிராம சேவையாளர்களின் மேற்பார்வையின் கீழ் பணிபுரிவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Previous Post Next Post