அந்தவகையிலே சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரசானது மனிதர்களிடம் ஏற்படுத்தும் தொற்றுநோயாகும். சீனாவில் ஏற்படுத்திய தாக்கத்தின் பின்னர் இதன் பரிணாமமானது உலகில் பலவகையிலும் பரவலாயிற்று. சீனாவின் வுகான்; ( Wuhan) நகரத்தில் இது ஏற்படுத்திய கொடிய தாக்கத்திற்குப் பின்புதான் இந்தபெயர் வைக்கப்பட்டது. Coronavirus
என்றழைக்கப்படும் COVID-19 என்பதன் விரிவாக்கத்தை நோக்கும் போது இதில் CO
என்பது
corona
என்பதையும்> VI என்பது virus,
D என்பது disease (தொற்று) என்பதையும் 19 என்பது 2019 இல் ஏற்பட்டதால் அதன் இறுதி இரு இலக்கங்களையும் குறித்து நின்று COVID-19என பொதுவாக விளக்கப்படுகின்றது. இன்று உலகலாவிய ரீதியில் 4 இலட்சத்திற்கும் அதிகமானோரை காவுகொண்டு சமூகத்தில் பல தாக்கத்தை ஏற்படுத்திய காவுகொல்லியாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
சமூகம் (Society)
என்பது ஒரு குறிப்பிட்ட மக்கள் குழுவைக் குறிக்கும்> ஒரே மாதிரியான புவியியல் நிலப்பகுதியில் வாழ்கின்ற ஒரு பெரியமக்கள் குழுவையும் சமூகம் எனலாம். அல்லது ஒரேமாதிரியான அரசியல் அதிகாரத்திற்கு உட்பட்ட சமூகப் பகுதிகளில் வாழ்கின்ற மக்கள் குழுவையும் சமூகம் எனலாம். இக்குழுவில் உள்ளவர்களிடையே தொடர்ச்சியான சமூகஉறவுகள் காணப்படும். இவ்வாறான கொடிய
வைரஸால்
சமூககட்டமைப்பில் பலமாற்றங்களும் தாக்கங்களும் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
அந்தவகையில் கொவிட்-19 ஆனது சமூக கட்டமைப்பில் குறிப்பாக சமூக நிறுவனங்களான குடும்பம்> பொருளாதாரம்> திருமணம்> அரசியல்> சமயம் போன்றவற்றில் பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. சமூகக்
கட்டமைப்பு மாற்றம் என்பது ஏதாவதொரு சடுதியான காரணத்தால் சமூகத்தில் இதுவரை நிலவிய ஒழுங்கு> நிலையமைப்புக்கு மாறாக ஏற்படும் மாற்றத்தை குறித்து நிற்கின்றது.
M.D. Jenson இன் கருத்துப்படி சமூக மாற்றம் என்பது என்பது இருக்கின்ற நிலைமைக்கு மாறாக மக்களை சிந்திப்பதற்கும்> செய்வதற்கும் Àண்டுகின்ற வழிமுறை என்கிறார். எனவே தான் சமூக கட்டமைப்பிலுள்ள கூறுகளுக்கிடையிலான வெளிப்படையான அல்லது மறைமுகமான மாற்றமாகும்.
இவ்வாறான எண்ணக்கருவின் அடிப்படையில் கொவிட்- 19 சமூக கட்டமைப்பில் சமூக உறவுக்கோலங்கள் என்ற வகையில் குடும்பக் கட்டமைப்பில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கூட்டுக்
குடும்பமாக இருந்து கருக்குடும்பமாக மாற்றம் பெற்ற இன்றைய
காலத்தில் கொவிட் -19 ஆனது குடும்ப உறவுகளை அன்பு> கருணை> பாசம் என்ற வகையில் இணைக்கின்ற பங்களிப்பை செய்கின்றது. அதாவது சமூக இடைவெளியை பேணும் முகமாகவும்> தம்மைத்
தாமே
பாதுகாக்கும் முகமாகவும் பேணப்படும் ஊரடங்குச்
சட்டத்தின் விளைவால் குடும்ப உறுப்பினர்கள் ஒருங்கிணையும் தன்மையை காணலாம். குறிப்பாக தொழில் நிமிர்த்தம் செல்லும் பெற்றோர்> பிள்ளைகளுக்கிடையில் காணப்பட்ட விரிசலான உறவானது இவ் சமூக பாதுகாப்பை பேணும் முகமாக அனைத்து வெளிநடவடிக்கைகளும் முடக்கப்படுவjhல் குடும்ப உறவு என்பது பிணைக்கப்படுகின்றது. இதனால் அன்பு> பாசம்> பெற்றோர்> பிள்ளைகளுக்கிடையிலான மகிழ்ச்சியான உறவு என்பது கட்டமைக்கப்படுகின்றது.
அடுத்து சமூக மாற்றம் என்ற வகையில் ஒவ்வொரு மனிதனும் இக்காலப்பகுதியில் தம்மைத் தாமே பாதுகாத்துக் கொள்வதோடு மட்டுமின்றி இயற்கையையும் பேணிக்கொள்ளக் கூடியவகையில் சிந்தனையை வளர்த்துக் கொள்வதையை காணலாம். குறிப்பாக குடும்ப உறுப்பினர்கள் ஒன்றிணைந்து வீட்டுத்தோட்ட பயிர்ச்செய்கையில் ஈடுபடுவதையும்> இயற்கையை அதிகம் விரும்பும் தன்மையும் அதÇடாக சூழல் பாதுகாப்பை ஏற்படுத்த முனைவதையும்> கொவிட்- 19 காலப்பகுதியில் அவதானிக்க கூடிய விடயமாக உள்ளது. அநேகமான வீடுகளில் சிறுவீட்டுத் தோட்டச் செய்கையாவது குடும்ப உறுப்பினர்களால் ஒருங்கிணைந்து மேற்கொள்ளப்படுவதால் இயற்கையை பேணுவதோடு மட்டுமின்றி மகிழ்ச்சிகரமான இல்லறச் சூழலையும் கட்டியெழுப்ப கூடியதாக உள்ளது.
அத்துடன் கொவிட்-19 தொற்று காரணமாக மானிட> சமூக தேவைகள் அனைத்தும் முடக்கப்பட்டு அத்தியாவசிய தேவைகள் மாத்திரம் செயற்பட்டதால் அது குடும்பத்தில் முரண்பாடற்ற சூழலை உருவாக்கியதாக கருதலாம். அதாவது மதுபானசாலைகள் அனைத்தும் மூடப்பட்டதால் அதனால் ஏற்படும் குடும்ப முரண்பாடுகள்> சிறுவர்கள் வன்முறைக்குள்ளாதல் என்பன குறைக்கப்பட்தோடு அதனால் வீதி
விபத்துக்கள் ஏற்படும் அளவும் குறைவாகவே காணப்பட்டது. அதாவது வீதி விபத்துக்கள் அதிகம் ஏற்படுவதற்கு மதுபோதை என்பதும் காரணமாக அமைவதால் இவ்வாறு சமூக இடைவெளியையும்> பாதுகாப்பையும் பேணும் முகமாகவும் ஊரடங்குசட்டம் முன்னெடுக்கப்படுவதால் முன்னைய காலத்தில் ஏற்படும் வீதி விபத்துக்களின் எண்ணிக்கையை விட குறைவான வீதிவிபத்துக்களே இடம்பெறுகின்றது. அத்துடன் குடும்பத்தில் பிணக்குகள் ஏற்பட இவ் மதுபாவனை காரணமாக விளங்குவதால் மதுபானசாலைகள் அனைத்தும் மூடப்பட்டதால் மதுபாவனையால் ஏற்படும் வாக்குவாதங்கள் குறைவாகவே காணப்படுகின்றது. இதனால் மதுபாவனைக்கு செலவாகும் பொருளாதாரம் குடும்பத்தின் ஏனைய தேவையை ஏதொவொருவகையில்
éர்த்திசெய்யக்கூடியதாக அமைகின்றது.
இலங்கையில் மதுபாவனையானது 80 வீதத்தால் குறைவடைந்துள்ளதோடு அதனால் ஏற்படும் சமூகப்பிரச்சனைகளும்
கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மதுபாவனைய தொடர்பாக 46 வீதமான மனைவியர்களிடம் ஆய்வு மேற்கொண்டதற்கமைய 54 வீதத்தினரின் வீடுகளில் மதுபாவனை குறைவடைவதால் பணம் மீதப்படுத்தப்படுவதாக கருத்து தெரிவித்தனர். அத்துடன் 68 வீதமானோர் புகைத்தலை தடுத்துள்ளனர் எனவும் மதுபாவனை மற்றும் போதைப்பொருள் பாவனை நிலையம் குறிப்பிட்டுள்ளதை ஊடகங்களின் மூலம் அறிந்து கொள்ளக்கூடியதாக இருந்தது.
ஆனால் பொருளாதாரம் என்ற வகையில் நோக்கும் குடும்பக் கட்டமைப்பில் முரண்பாடுகளையும் ஏற்படுத்தியுள்ளது. அதாவது அன்றாட கூலி வேலைக்கு செல்லும் குடும்பங்களில் பொருளாதாரத்தை ஈட்டுவதென்பது இக்காலப்பகுதியில் பெரும் சவாலாக இருந்தது. இதனால் கணவன்> மனைவிக்கிடையே முரண்பாடுகள் ஏற்பட்டு மறுபக்கம் குடும்ப பிணக்குகளும் அதிகரித்தது. இவ்வாறு நேர்நிலையான
தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குடும்பத்தின் தேவைகளை éர்த்திசெய்ய பொருளாதாரம் என்பது இன்றியமையாத சமூகநிறுவனமாக விளங்குவதால் அதில் ஏற்படும் தடைகள் வறுமையை ஏற்படுத்துவதோடு மட்டுமில்லால் பொருளாதாரத்தை மையப்படுத்திய வகையில் குடும்பத்தில் முரண்பாடுகள் ஏற்படவும் வழியமைக்கின்றது.
குறிப்பாககடந்த 3 மாதங்களாக நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழலில் தற்கொலை வீதங்கள் அதிகரித்து வருவதை காணக்கூடியதாக உள்ளது. குறிப்பாக இக்காலப்பகுதில் மட்டக்களப்பு மாவட்டத்தில்; 15 ற்கும் அதிகமான தற்கொலைகள் இடம்பெற்றுள்ளது. எனவே கொவிட்-19 ஆனது இயற்கை மற்றும் சமூக> மானிட சூழலை பேணும் வகையில் அமைந்து சமூக ஒருங்கிணைவை ஏற்படுத்தினாலும் பொருளாதாரம் என்ற வகையிலும் வேறு காரணங்களாலும் கணவன்> மனைவிக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு தற்கொலை போன்ற விளைவுகளை ஏற்படுத்துகின்றது. அதாவது சமூகபாதுகாப்பை கருதி மானிட செயற்பாடுகள் அனைத்தும் மட்டுப்படுத்தப்படுவதால் (கணவன்>மனைவி இருவரும் தொழிலுக்குசென்று) தமது அன்றாட தேவைகளை éர்த்திசெய்ய முடியாத பட்சத்தில் ஏற்படும் மனஉழைச்சல்களும்> முரண்பாடுகளும் ஏற்பட்டு தற்கொலைகள் குறித்தகாலப்பகுதில் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கல்விச் செயற்பாடுகளில் கொவிட்- 19 ஏற்படுத்திய
தாக்கத்தை நோக்கும் போது மாணவர்களது சுய கற்றல் திறனைவளர்க்ககாரணமாக அமைந்துள்ளது. அதாவது வெகுஜன ஊடக
சாதனங்கள் மூலம் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கற்றல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பட்சத்தில் மாணவர்கள் வீட்டில் இருந்;து கொண்டு தாமாக முயன்று தேடல் முயற்சியில் ஈடுபடுகின்றனர். அதாவது வெகுஜன ஊடகங்களின் மூலம் ஆசிரியர்> மாணவர்களுக்கிடையிலான குழுமக்கலந்துரையாடல் (WhatsApp,Viber,LMS…) மூலம் கல்விநடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதால் மாணவர்கள் தமக்குதெரியாத வினாக்களுக்கான விடயங்களை இணையத்தளம்> பாடÁல்களில் மேலதிக தேடலை
மெற்கொண்டு அதற்கான விடைகளை பின்Çட்டலாக வழங்குகின்றனர். இதன் மூலம் மாணவர்களது சுய கற்றல் திறன் வளர்கின்றது. அத்துடன் வெகுஜன ஊடகங்களின் பாவனை மூலம் ஆசியரியர்களுக்கும்> மாணவர்களுக்குமிடையிலான இடைவினை மேலும் அதிகரிக்கின்றது. இதன் மூலம் மாணவர்களது அறிவுத்திறன் மேம்படுத்தப்படுகின்றது. அதாவது விடுமுறைகாலத்திலும் மாணவர்கள் ஏதோவொருவகையில் தமதுகற்றல் நடவடிக்கைகளை மேம்படுத்துவதோடு ஆசிரியர்களோடு தொடர்பாடலில் இருப்பதையும்; காணக்கூடியதாக உள்ளது.
அதேபோன்று உயர் கல்வி நிறுவனங்களின் கல்விச்செயற்பாடுகளும்
இவ்வாறு
நடைமுறைப்படுத்தப்படுவதால் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் ஏனைய கல்வி நிறுவன மாணவர்களும் தங்களது காலத்தை வீணடிக்காமல் தமக்குரிய கற்றல் செயற்பாடுகளில் தொடர்ந்து ஈடுபடுகின்றமை அவர்களது அறிவாற்றல் மழுங்கடிக்கப்படாமல் தொடர்ந்து வளர்க்கப்படுவதை எடுத்துக்காட்டுகின்றது.
மாறாக இக் கற்றல் நடவடிக்கைகள் கஸ்ட> அதிகஸ்ட பிரதேச மாணவர்களுக்கு சென்றடைவதிலும்> கையடக்கதொலைபேசி> இணையத்தள> கணினிவசதி இல்லாத மாணவர்களுக்கு சென்றடைவதென்பது சவாலாகவே அமைகின்றது. இருந்தபோதிலும் அதிபர்> ஆசிரியர்கள் செயலட்டைகளையும்> பயிற்சிவினா கையேடுகளையும் வழங்கி ஏனைய மாணவர் கற்றல் திறனை மேம்படுத்த முனைகின்றனர். இருந்தபோதிலும் கஸ்ட> அதிகஸ்ட பிரதேச பின்தங்கிய கிராமப்புற மாணவர்களது கல்வி நடவடிக்கைகள் எவ்வகையில் சாத்தியமாகின்றது என்பது கேள்விக்குறியான விடயமாகவே உள்ளது. எவ்வாறிருப்பினும் இக்காலப்பகுதியில் இவ்வாறானகற்றல் நடவடிக்கைகளை மேற்கொள்ள மாணவர்களது பங்கு முக்கியமானதாகும்.
இவ்வாறுகற்றல் நடவடிக்கைகளை மிகைப்படுத்தப்படும் பட்சத்தில் மாணவர்கள் சவால்களையும் எதிர்கொள்கின்றனர். அதாவது மாணவர்களுக்கு தமது பாடவிதானத்துடனான விடயங்களில் சந்தேகங்கள் ஏற்படும் பட்சத்தில் அதனை ஆசிரியர்களிடம் கேட்கதயங்கும் நிலைகாணப்படுகின்றது.
அத்துடன் இவ்வாறு கையடக்கதொலைபேசி மூலம் இணையத்தளவசதிகளுக்கூடாக கற்றல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது ஒரு குடும்பத்தில் ஒன்றுக்கு மேற்பட்டபிள்ளைகள் இருக்கும் பட்சத்தில் ஒரேநேரத்தில் இச் செயற்பாட்டை முன்னெடுக்க முடியாமல் போகின்றது. இதனால் பெற்றோர்களுக்கிடையிலும்> வீட்டில் உள்ள சகோதரர்களுக்கும் இடையில் முரண்பாடு ஏற்படுகின்றது. அதாவது ஒரு கையடக்க தொலைபேசியில் ஒரே நேரத்தில் கல்வி நடவடிக்கைகள் பகிரப்படும் பட்சத்தில் சகோதரர்களுக்கிடையில் முரண்பாடுகள் ஏற்படுகின்றது. குறித்த மணித்தியாலத்திற்குள் கற்றல் நடவடிக்கைகளை éர்த்திசெய்ய வேண்டியுள்ளதால் ஒன்றுக்கு மேற்பட்ட சகோதரர்களைக் கொண்ட குடும்பத்தில் இது சவாலாக அமைகின்றது.
அத்துடன் திருமணம்> விழாக்கள் போன்றவை குறித்த காலப்பகுதியில் மட்டுப்படுத்தப்பட்டதாகவும்> களியாட்ட நிகழ்வுகளை மேற்கொள்ள முடியாத
நிலை
ஏற்பட்டு சமூக ஒருங்கிணைவை ஏற்படுத்தாத போதிலும் இவ்வாறான நடவடிக்கைகள் மூலம் சமூகப் பாதுகாப்பு மேம்படுத்தப்படுகின்றது. அதாவது சமூக இடைவெளி பேணப்பட்டு மக்களுக்கு அனைத்து வகையிலும் பாதுகாப்;பு கொடுக்கப்படுகின்றது. இது சமூக விலகலாக அமைந்தாலும் அனைத்து மக்களதும்> சமூகத்தினதும் பாதுகாப்;பிற்கு வழிகோலுகின்றது. அத்துடன் இவ்வாறான களியாட்ட விழாக்கள் மட்டுப்படுத்தப்படுவதால் அதன் மூலம் ஏற்படும் முரண்பாடுகள், பொருளாதார செலவுகள் அனைத்தும் குறைக்கப்படுகின்றது. கொவிட்- 19 காரணமாக அரசாங்கத்தால் விடுக்கப்படும் சட்ட திட்டங்கள் அனைத்தும் சமூக பாதகாப்பு கருதியாகவும்> அதன் மூலம் களியாட்ட நிகழ்வுகளால் ஏற்படும் பொருளாதார செலவுகள் சமூகத்திற்கு மீதப்படுத்தப்படுகின்றது.
எனவே தொகுத்து நோக்கும் போது கொவிட் -19 ஆனது உலகலாவிய ரீதியில் பல உயிரிழப்புக்களை ஏற்படுத்தி உலக நாடுகளை பொருளாதார ரீதியாக பாதிப்படைய செய்தாலும் அதன் மூலம் சமூகத்திற்கு ஏற்படுத்தப்படும் சமூக திட்டமிடல்கள் சமூக கட்டமைப்பில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்துகின்றது. அதாவது இலங்கை அரசாங்கத்தினால் கடந்த மார்ச் மாதத்திலிருந்து நடைமுறைப்படுத்தப்படும் ஊரடங்கு சட்டமானது சமூகத்திலுள்ள தனிநபர்கள் மற்றும் சமூக குழுக்களிற்கிடையில் பல மாற்றங்களை ஏற்படுத்துகின்றது. cதாரணமாக அரசாங்கத்தால் வழங்கப்படும் சமுர்த்தி திட்டங்கள்> நிவாரணங்க;ள் சௌபாக்கியா வீட்டுத்தோட்ட திட்டம்> வட்டியில்லா கடன் வசதி அனைத்தும் மக்களது தேவைகளை நிவர்த்தி செய்து அவர்களது சிந்தனையிலும்> திறனிலும் மாற்றத்தை ஏற்படுத்துகின்றது. இவை குடும்ப> சமூக> பொருளாதார தேவைகளை éர்த்தி செய்வதோடு அதன் காரணமாக மக்களது மனநிலையில் மாற்றத்தையும் ஏற்படுத்த இவ் கொவிட்-19 காரணமாக அமைகின்றது.
எனவே கொவிட்-19 ஆனது சமூக கட்டமைப்பில் குறிப்பாக கல்வி> குடும்பம்> பொருளாதாரம் போன்றவற்றில் ஏற்படுத்தும் தொடர்பினடிப்படையில் அதன் தாக்கம் சமூகத்தில் நேர்> மறை மாற்றங்களையும் தாக்கங்களையும் ஏற்படுத்தியுள்ளதை மேற்கூறிய விடயங்கள் எடுத்துரைக்கின்றன.
- கிருஷிகா இராஜேந்திரன் -