ஐரோப்பிய ஒன்றியம் (EU)


தற்போது ஐரோப்பிய ஒன்றியமானது 28 அங்கத்துவ நாடுகளைக் கொண்ட ஓர் கூட்டமைப்பு ஆகும். எல்லா  ஐரோப்பிய ஒன்றிய ஆவணங்கள் மற்றும் தகவல்கள் அனைத்தும் ஐரோப்பிய ஒன்றியத்தின் அரசியல் அமைப்பானது அதன் நேச உடன்படிக்கையையும் ரோம் உடன்படிக்கையையும் அடிப்படையாகக் கொண்டது. இது 5 நிறுவனங்களினால் நிர்வகிக்கப்படுகிறது. ஐரோப்பிய மன்றம், ஐரோப்பிய ஒன்றிய அமைப்பு, ஐரோப்பிய பாராளுமன்றம், ஐரோப்பிய ஆணைக்குழு மற்றும் ஐரோப்பிய நீதிமன்றம்.


வரலாறு

தற்போதைய ஐரோப்பிய ஒன்றியத்தின் 1950ம் ஆண்டு முதல் 2ம் உலகப்போருக்கு பின் காணப்படும் 6 நாடுகளில் ஜேர்மனியும் ஓர் நாடு ஆகும். ஆரம்பத்தில் இது ஓர் வணிகக்கூட்டுறவாக காணப்பட்டது. 2002 ஆரம்பத்தில் யூரோ நாணயமானது ஐரோப்பாவில் 19 நாடுகளில் பொது நாணயமாக காணப்பட ஆரம்பித்தது. தற்போது பொதுவான கோட்பாடு காலநிலை மாற்றத்திலிருந்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்திலிருந்து வெளிப்புற தொடர்புகள் மற்றும் பாதுகாப்பு, நீதி மற்றும் குடிபெயர்வு போன்றவற்றிற்கு முன்னிலை வகிக்கின்றது.


குறிக்கோள் மற்றும் விழுமியங்கள்

ஐரோப்பிய ஒன்றியத்தின் குறிக்கோளானது அந்நாட்டவர்களுக்கு நலத்தையும் சமாதானத்தையும் மேம்படுத்தலாகும். அதுமட்டுமல்லாது சுதந்திரத்தை உறுதிப்படுத்தல், பாதுகாப்பு, எந்தவித வரையறையற்ற சட்டம், உட்படுத்தல், சகிப்புத்தன்மை, சட்ட நிபந்தனை, ஒன்றிப்பு மற்றும் பாகுபாடு அற்று வாழ்தல் போன்ற விழுமியங்கள் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை ஒன்று சேர்க்கின்றன. இதன் ஸ்தாபகத்திலிருந்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கிடையில் யுத்தம் என்பது ஏற்பட்டது இல்லை.

 

சமத்துவம் என்பது இன்னுமொரு ஐரோப்பிய ஒன்றியத்தின் விழுமியம் ஆகும் இதன்; குறிக்கோளானது சகல பிரஜைகளுக்கும் சட்டத்தின் முன்னால் சம உரிமை கொடுக்கப்பட வேண்டும். ஆண்கள் மற்றும் பெண்களுக்கிடையிலான சமத்துவமான ஐரோப்பிய ஒன்றியத்தின் குறிக்கோளின் ஒரு பகுதியாக உள்ளடக்கப்பட்டிருப்பதுடன் ஐரோப்பிய ஒன்றினைப்பின் அடிப்படையாகவும் காணப்படுகிறது. இது எல்லா பகுதிகளுக்கும் தொடர்பானது. இதில் முக்கியமானது சம வேலைக்கான சமமான ஊதியமானது 1957ல் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் இன்னும் அது முழுமையாக செயற்படுத்தப்படவில்லை.


ஐரோப்பிய ஒன்றியத்தின் சம நடைமுறை அதிகாரம்

ஐரோப்பிய ஒன்றியத்தின் சம நடைமுறை அதிகாரத்தின்  நோக்கமானது ஐரோப்பிய ஒன்றிய தொழிலாளர்களுக்கு ஜேர்மனியில்  கிடைக்கவேண்டிய உரிமைகளுக்காக ஆதரவளிப்பதாகும். அத்துடன் சுதந்திரம் , சட்டரீதியான  ஆலோசனைகளை வழங்குவதன் மூலம் தொழிலாளர்களுக்கு அவர்களின் உரிமைக்கான தகவல்களை வழங்குகின்றது.

இத்தகைய தகவல்கள் ஜேர்மன், ஆங்கிலம், போல்னிஸ்,ஸ்பானிஸ்,பிரஞ்சு,ரோமனியன் மற்றும் பல்கேரியன் மொழிகளில் காணப்படுகிறது.


ஐரோப்பிய பொருளாதார சமூகத்தினுடைய தோற்றம், கட்டமைப்பு மற்றும் அதன் சாதனைகள்


ஐரோப்பிய ஒன்றியம் 

ஐரோப்பிய ஒன்றியம்
ஐரோப்பிய பொருளாதார சமூகம் சிறப்பாக இயங்கிவரும் ஓர் அமைப்பாக உள்ளது. தற்போதைய காலகட்டத்தில் நாடுகள் தனித்து இயங்குவதை பார்க்க கூட்டாக இயங்குவது பெருமளவிற்கு பலம் பொருந்திய ஒன்றாக காணப்படுவதுடன் பாதுகாப்பினையும் உறுதிப்படுத்தும் வகையிலுள்ளது. அந்த வகையில் சர்வதேச ரிதியில் பல தேசிய அரசுகள் தமக்குள்ள நோக்குகளின் அடிப்படையில் கூட்டாக சேர்ந்து இயங்கும் போக்குள்ளது. இதனாலேயே பல பிராந்திய மற்றும் சர்வதேச நிறுவனங்கள் தோற்றம் பெறுகின்றன. இவற்றின் தேவைகள் வேறுபடுபவையாகவும் இருக்கலாம். சில அமைப்புக்கள் இராணுவ நோக்கின் அடிப்படையில் உறுவாகின்றன. இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு நேட்டோவாகும். இருப்பினும் வோசோவின் மறைவுக்கு பின்னர் பொருளாதார விடையங்களிலும் கவனம் செலுத்தும் அமைப்பாக உள்ளது. மேலும் சில அமைப்புக்கள் பொருகாதார அடிப்படையில் உருக்கொள்கின்றன. இவ்வாறான ஓர் அமைப்பாகவே ஐரோப்பிய பொருளாதார சமூகத்தனை அடையாளம் காணலாம். இருப்பினும் இதற்காக தனியான படை பலமும் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

ஐரோப்பிய பொருளாதார சமூகத்தின் தோற்றத்தினை நோக்கும் போது ஒரு தெளிவான தோற்றப்பாட்டினை கண்டுகொள்வது கடினமாக உள்ளது. எனேனில் ஐரோப்பிய பொருளாதார சமூகம் காலத்திற்கு காலம் தோற்றம் பெற்ற பல ஒப்பந்தங்கள், உடன்படிக்கைகள் மற்றும் அமைப்புக்களை உள்ளடக்கி விரிவடைந்து வளர்ச்சியடைந்துள்ளதனாலாகும். ஐரோப்பிய பொருளாதார சமூகம் தற்பொழுது 28 உறுப்பு நாடுகளைக் கொண்ட, நாடு தாண்டிய அரசுகளுக்கு இடையிலான அமைப்பாகும். 1992ல் நிறுவப்பட்ட ஐரோப்பிய ஒன்றிய உடன்பாட்டை அதாவது “மாசுடிரிச் ஒப்பந்தம்” என்றும் பரவலாக அறியப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. இருப்பினும் 1950கள் முதற்கொண்டே இயங்கி வந்த பல்வேறு முன்னோடி அமைப்புகளின் செயற்பாடுகள், ஐரோப்பிய ஒன்றியத்தை ஒத்து இருந்தன. ஏறத்தாழ 500 மில்லியன் குடிமக்களைக் கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் உலகத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் முப்பது விதத்தை உருவாக்குகின்றன. 

1951 ஆம் ஆண்டில் ஆறு நாடுகள் சேர்ந்து உருவாக்கிய ஐரோப்பிய நிலக்கரி மற்றும் உருக்கு சமூகம், 1957 ஆம் ஆண்டின் “ரோம் ஒப்பந்தம்” ஆகியவையே ஐரோப்பிய ஒன்றியத்தின் தோற்றத்தின் மூலமாகக் கருதப்படுகிறது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், ஐரோப்பிய ஒன்றிணைப்புத் தொடர்பான நகர்வுகளை, அக்கண்டத்தைப் பேரழிவுக்கு உள்ளாக்கிய தீவிர தேசியவாதப் போக்குகளிலிருந்து தப்பும் ஒரு வழியாகப் பலர் நோக்கினர். ஐரோப்பியர்களை ஒன்றிணைக்கும் இத்தகையதொரு முயற்சியாகவே ஐரோப்பிய நிலக்கரி மற்றும் உருக்கு சமூகம் தொடங்கப்பட்டது. இது முன்னர் உறுப்பு நாடுகளின் தேசிய நிலக்கரி மற்றும் உருக்குத் தொழில்துறையில் மையப்படுத்திய கட்டுப்பாட்டைக் கொண்டுவரும் மிதமான நோக்கம் கொண்ட ஒரு முயற்சியாக இருந்தது. எனினும் இது "ஐரோப்பியக் கூட்டாட்சிக்கான முதல் அடி" என அறிவிக்கப்பட்டது. பெல்ஜியம், பிரான்ஸ், இத்தாலி, லக்சம்பர்க், நெதர்லாந்து, மேற்கு செருமனி ஆகிய நாடுகள் இதன் தொடக்க உறுப்பினர்களாக இருந்தன. 

1957 ஆம் ஆண்டில் இரண்டு புதிய அமைப்புக்கள் உருவாகின. ஒன்று ஐரோப்பியப் பொருளியல் சமூகம் மற்றது அணுவாற்றல் வளர்ச்சியில் கூட்டு முயற்சிகளை மேற்கொள்வதற்கான ஐரோப்பிய அணுவாற்றல் சமூகம். 1967ல் செய்துகொள்ளப்பட்ட ஒன்றிணைப்பு ஒப்பந்தம் மூலம் மேற்படி மூன்று சமூகங்களும் ஒன்றிணைக்கப்பட்டு ஒரே தொகுதியாயின. இவை ஒருங்கே ஐரோப்பிய சமூகங்கள் என அழைக்கப்பட்டன. ஐரோப்பிய ஒன்றியம் காலத்திற்கு காலம் உருவாக்கப்பட்ட ஐக்கிய அமைப்புக்களை உள்வாங்கி வரிவடைந்துள்ளது. .இத்தகைய அமைப்புக்களின் ஒன்றினைவும் செயற்பாடும் பாரிய அளவில் வெற்றியடைந்துள்ளதால் ஏனைய ஐரோப்பிய நாடுகளும் காலத்திற்கு காலம் ஐரோப்பிய பொருளாதார சமூகத்தில் ஒன்றினைய முனைப்பு காட்டி இணைந்துள்ளது. இதன் காரணமாக உறுப்பு நாடுகள் உதவிகள், ஓத்துழைப்புக்கள் மற்றும் சலுகைகளை பெறக்கூடியதாக உள்ளது. இதனடிப்படையில் பின்வருமாறு உறுப்பு நாடுகளின் ஒன்றினைவினை கால அடிப்படையில் அடையாளப்படுத்தலாம். 

1973 ஆம் ஆண்டில் இச் சமூகங்கள், டென்மார்க், அயர்லாந்து, ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகளையும் உள்ளடக்கி விரிவடைந்தன. போர்த்துக்கல், கிரேக்கம், எசுப்பானியா ஆகிய நாடுகள் 1980ல் இதில் இணைந்தன. 1990ல் சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் அதன் நட்பு நாடாக இருந்த கிழக்கு ஜேர்மனியும், ஒன்றிணைந்த ஜேர்மனியின் ஒரு பகுதியாக ஐரோப்பிய சமூகத்தில் இணைந்தது. ஐரோப்பிய சமூகத்தை கிழக்கு-மைய ஐரோப்பா நோக்கி விரிவாக்குவதை நோக்கமாகக் கொண்டு, அச் சமூகத்தின் உறுப்பு நாடுகளாக இணைவதற்கான தகுதிகளை வரையறுக்கும் “கோப்பன்ஹேகன் கட்டளைவிதி” ஏற்றுக்கொள்ளப்பட்டது. 1993 நவம்பர் 1 ஆம் தேதி “மாசுடிரிச் ஒப்பந்தம்” செயல்படத் தொடங்கியபோது ஐரோப்பிய ஒன்றியம் முறைப்படி நிறுவப்பட்டது. 1995ல் ஆஸ்திரியா, சுவீடன், பின்லாந்து ஆகிய நாடுகள் புதிய ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்ந்துகொண்டன. 2004 ஆம் ஆண்டில் ஐரோப்பிய ஒன்றியத்தின் மிகப் பெரிய விரிவாக்கம் இடம் பெற்றது. அப்போது மால்ட்டா, சைப்பிரஸ், சுலோவீனியா, எஸ்தோனியா, லத்வியா, லித்துவேனியா, போலந்து, செக் குடியரசு, சிலோவாக்கியா, ஹங்கேரி ஆகிய 11 நாடுகள் இவ்வொன்றியத்தில் இணைந்தன. ஐரோப்பிய ஒன்றியம் தற்போது 28 சுதந்திரமான, இறைமையுள்ள நாடுகளை உறுப்பு நாடுகளாகக் கொண்டுள்ளது. 

இவை

ஆஸ்திரியா, பெல்ஜியம், பல்கேரியா, சைப்பிரஸ், செக் குடியரசு, டென்மார்க், எஸ்தோனியா, பின்லாந்து, பிரான்ஸ், ஜேர்மனி, கிரேக்கம், ஹங்கேரி, அயர்லாந்து, இத்தாலி, லத்வியா, லித்துவேனியா, லக்சம்பர்க், மால்ட்டா, நெதர்லாந்து, போலந்து, போர்த்துக்கல், ருமேனியா, சிலோவாக்கியா, சிலோவேனியா, எசுப்பானியா, சுவீடன், ஐக்கிய இராச்சியம், குரோவாசியா 
என்பவை. 2013-07-01ம் திகதி அதாவது இறுதியாக குரோவாசியா நாடு ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடாக சேர்க்கப்பட்டது. 

28 உறுப்பு நாடுகளையும் சேர்த்து ஒட்டுமொத்த ஐரோப்பிய ஒன்றியத்தின் நிலப்பரப்பு 43,81,376 சதுர கிலோமீற்றராகும். ஏனைய அமைப்புக்களை போலல்லாது இவ் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்கு பல நாடுகள் போட்டிபோடும் நிலையுள்ளது. இவ்வமைப்பில் உறுப்பு நாடுகளாக இணைவதற்கு பல தகுதிகளையும் ஐரோப்பிய ஒன்றியம் எதிர்பாக்கிறது. இதனடிப்படையில் பல நாடுகள் இவ்வமைப்பில் இணைந்துகொள்ள முடியாத நிலையுள்ளது. இந்தவகையில் மசிடோனியக் குடியரசு, துருக்கி ஆகிய இரு நாடுகளும் உறுப்பினர்களாகச் சேர்வதற்கான நியமனம் பெற்றுள்ளன. மேற்கு பால்க்கன் பகுதி நாடுகளான அல்பேனியா, பொசுனியா எர்செகோவினா, மொண்டெனேகுரோ, செர்பியா ஆகிய நாடுகளும் இவ்வமைப்பில் சேரும் தகுதியுள்ளவையாக ஏற்கப்பட்டுள்ளன. ஐரோப்பிய ஆணையம் கொசோவோவையும் தகுதியுள்ளதாகக் குறிப்பிட்டிருந்தும், ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் அனைத்தும் இதனை ஒரு தனி நாடாக ஏற்றுக்கொள்ளாமையால் அதனைத் தகுதியுள்ள நாடுகள் பட்டியலில் சேர்க்கவில்லை. 

21 ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் “நேட்டோ" அமைப்பிலும் உறுப்பு நாடுகளாக உள்ளன. இராணுவ கூட்டமைப்பாக செயற்பட்டுவரும் நேட்டோ, தற்போதைய உலக ஓழுங்கில் பலம் பெருந்திய ஓர் முக்கிய அமைப்பாக உள்ளது. இதில் பல ஐரோப்பிய நாடுகள் அங்கத்துவம் பெற்றிருப்பது ஐரோப்பிய நாடுகளையும் அன்னாடுகள் பிரதிநிதித்துவம் செய்யும் அமைப்புக்களையும் பலப்படுத்துவதாக உள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்துக்கு உறுப்பு நாடுகளின் நீதியமைப்பு, உள்நாட்டு அலுவல்கள் ஆகியவற்றிலும் பங்களிப்புகள் உண்டு. 1985 ஆம் ஆண்டில், செஞ்சென் ஒப்பந்தம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, பெரும்பாலான உறுப்பு நாடுகளிடையே கடவுச்சீட்டு இல்லாமல் பயணம் செய்யத்தக்க வகையில் அவற்றின் எல்லைகள் திறந்துவிடப்பட்டன. இதைவிட உறுப்பு நாடுகளிடையே சலுகைகள் அடிப்படையில் பல கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. 1986ல் ஐரோப்பியக் கொடி பயன்படத் தொடங்கியதுடன், தலைவர்கள் ஒற்றை ஐரோப்பியச் சட்டமூலம் (Single European Act) ஒன்றிலும் கையெழுத்திட்டனர். இவ்வாறு பல ஐக்கிய செயற்பாடுகளை காலத்திற்கு ஏற்ப ஏற்படுத்தி கட்டமைப்பினை வலுப்படுத்தியுள்ளது. 

அடுத்ததாக ஐரோப்பிய பொருளாதார சமூகம் இந்தளவு வெற்றிபெற முக்கிய காரணம் என்ன என்று பார்த்தால் இதனது கட்டமைப்பே முக்கியம் பெறுகின்றது. ஐரோப்பிய ஒன்றியம் தனது செயற்பாடுகள் அனைத்தினையும் இறுக்கமான கட்டமைப்பியனை ஏற்படுத்தி செயற்படுத்துவதால் இதல் வெற்றி கண்டுள்ளது. ஒரு தேசிய அரசின் கட்டமைப்பினை ஒத்ததாக இது காணப்படுவது ஓர் சிறப்பம்சமாகும். அதாவது பாராளுமன்றம் சட்டத்துறைக்கு பொறுப்பாகவும், ஐரோப்பிய ஆணையகம் நிர்வாகத்திற்கு பொறுப்பாகவும், நீதி விடையங்களுக்காக ஐரோப்பிய நீதிமன்றும் உள்ளன. இவை தவிர இன்னும் பல அமைப்புக்களும் நடைமுறையில் உள்ளது. இதனை பின்வருமாறு அவதானிக்க முடியும். ஐரோப்பிய ஒன்றியம், முடிவுகளை எடுப்பதில் அரசுகளிடையான இணக்கப்பாடு, அரசுகளுக்கு அப்பாற்பட்டு இயங்கும் அமைப்புக்கள் ஆகியவற்றைக் கொண்ட ஒரு கலப்பு முறையைக் கைக்கொள்கிறது. ஐரோப்பிய ஒன்றியம் ஐரோப்பிய ஆணையம், ஐரோப்பிய நாடாளுமன்றம், ஐரோப்பிய ஒன்றிய அவை, ஐரோப்பிய நீதிமன்றம், ஐரோப்பிய மத்திய வங்கி ஆகிய அமைப்புக்களை உள்ளடக்கியுள்ளது.   

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் குடிமக்கள் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ஐரோப்பிய நாடாளுமன்றத்தைத் தெரிவு செய்கின்றனர். இது ஐரொப்பியக் கூட்டமைப்பின் சட்டம் இயற்றும் அமைப்பாகும். இதன் அங்கத்தினர்கள் உறுப்பு நாடுகளின் குடிமக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். 1979-ஆம் ஆண்டு முதல், ஐரோப்பிய நாடாளுமன்றாத்தின் தேர்தல் மக்களாட்சி முறைப்படி நடைபெற்றது. இதன் தலைமையகம் பிரான்சில் உள்ள ஸ்ட்ராஸ்பர்க் (Strasburg) என்னுமிடத்தில் உள்ளது. தற்போது இதில் 736 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும். இது ஐரோப்பிய சட்டமன்றத்தின் பாதி அளவு ஆகும். ஐரோப்பிய ஆணையத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தை ஏற்றுக் கொள்ளுதல் அல்லது மாற்றங்கள் செய்வது நாடாளுமன்றத்தின் முக்கிய அதிகாரமாகும். ஐரோப்பிய ஒன்றிய மன்றம் சில நேரங்களில் “அமைச்சர்களின் கூட்டமைப்பு மன்றம்” என்று அழைக்கப்படுகிறது. இது ஐரோப்பியச் சட்டமன்றத்தின் மறுபாதியாகும். ஒவ்வொரு உறுப்பு நாடுகளில் இருந்தும் ஒருவர் இந்த அவைக்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். 2009 ஆம் ஆண்டு நவம்பர் 19 ஆம் தேதி ஹெர்மன் வான் ராம்பே (Herman Van Rampay) என்பவர் இந்த அவையின் முதல் நிரந்தரத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2009 ஆம் ஆண்டு, டிசம்பர் முதலாம் திகதி இவர் பதவியேற்றார். 

ஐரோப்பிய ஒன்றியத்தின் நிர்வாகத் துறையாகச் செயல்படுவது ஐரோப்பிய ஆணையமாகும். மேலும் சட்டம் இயற்றுவதற்குத் தூண்டுதலாக இருந்து ஐரோப்பியர் கூட்டமைப்பின் அன்றாடப் பணிகளைச் செய்கிறது. ஐரோப்பியக் கூட்டமைப்பின் சட்டங்களை வடிவமைத்து, அதனை ஐரோப்பிய நாடாளுமன்றத்திலும் சமர்ப்பிப்பது இதன் முதன்மைப் பணியாகும். இது லக்சம்பர்க் நகரில் அமைந்துள்ளது. அடுத்து முக்கியம் பெறுவது ஐரோப்பிய நீதிமன்றமாகும். இதில் 15 நீதிபதிகள் இடம்பெற்றுள்ளனர். ஐரோப்பிய ஒன்றியம் மேற்கொள்ளும் அனைத்து உடன்படிக்கைகளும், மன்றத்தின் சட்டங்களுக்கு உட்பட்டதா என்பதைத் தீர்மானிப்பது இந்நீதிமன்றமாகும். இம்மன்றத்தின் தீர்ப்புகளும், ஒன்றியத்தின் சட்டங்களும் உறுப்பு நாடுகள் அனைத்தையும் கட்டுப்படுத்தும் வல்லமை பொருந்தியதாகும். அடுத்து நிதி சம்மந்தப்பட்ட விடையங்களில் முக்கியம் பெற்று ஐரோப்பிய ஒன்றியத்தின் வரவு செலவுக் கணக்குளை நிர்வகிப்பது ஐரோப்பியக் கணக்கீட்டாளர் மன்றமாகும். ஐரோப்பிய நாடாளுமன்றத்துடன் இணைந்து வளங்கள் மற்றும் நிதியைச் சிறந்த முறையில் பங்கீடு செய்கிறது. எனவே மேற்கூறிய விதத்தில் அதன் கட்டமைப்பு திரன்பட செயற்படுகின்றது. 

இதன் முக்கிய நோக்கங்களாகவும் அடைவு மட்டமாகவும் காணப்படுவது ஐரோப்பியக் குடியுரிமையை ஏற்படுத்துதல், ஐரோப்பியக் குடிமக்களுக்கு குடிமை உரிமைகளை உறுதிசெய்தல், சமுதாய முன்னேற்றத்தை உயர்த்துதல், ஐரோப்பிய பாதுகாப்பைப் வலுப்படுத்துதல், சமநீதியை உறுதிசெய்தல் போன்றனவாகும். ஏனைய அமைப்புக்களை போலல்லாது ஐரொப்பிய ஒன்றியம் வெற்றிகரமாக அமைப்பாகும். உலகில் உள்ள அமைப்புக்கள் தோன்றி தனது நோக்கினை அடைவதில் பல சவால்களை எதிர்கொண்டு தோல்வியடைந்துள்ளன. உதாரணமாக எமது பிராந்திய அமைப்பான சார்க்கினை எடுத்துக்கொண்டால் இது ஒரு வெற்றிகரமான அமைப்பு என கூறமுடியாதுள்ளது. 

ஐரோப்பிய ஒன்றியம் மேற்கூறிய முறைப்படுத்தப்பட்ட நீண்ட கால வரலாற்றினையும் கட்டமைப்பினையும் கொண்டு செயற்படுவதால் பல விடையங்களில் தன்னிறைவு கண்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியம், தனது உறுப்பு நாடுகளிடையே மக்கள், பொருட்கள், சேவைகள், முதலீடுகள் ஆகியவற்றின் கட்டுப்பாடுகளற்ற பரிமாற்றத்திற்கும், நகர்வுகளுக்கும் உத்தரவாதம் அளிக்கும் பொதுவான சட்டங்களைக் கொண்ட ஒற்றைச் சந்தையை உருவாக்கியுள்ளது. இது பொதுவான வணிகக் கொள்கை, வேளாண்மை, மீன்பிடிக் கொள்கைகள் என்பவற்றுடன் பிரதேச வளர்ச்சிக் கொள்கையையும் பேணி வருகின்றது. பதினைந்து உறுப்பு நாடுகள் யூரோ எனப்படும் பொதுவான நாணய முறையையும் ஏற்றுக்கொண்டுள்ளன. இது ஒரு வெளிநாட்டலுவல்கள் கொள்கையொன்றையும் உருவாக்கியுள்ளதுடன், உலக வணிக அமைப்பு, பு8 உச்சி மாநாடு, ஐக்கிய நாடுகள் அவை என்பவற்றிலும் சார்பாண்மை கொண்டுள்ளது. 

ஐரோப்பிய பொருளாதார சமூகம் இன்று பல நாடுகளினால் அவதானிக்கப்படும் முக்கிய அமைப்புக்களில் ஒன்றாகும். இவ்வமைப்பின் நடவடிக்கைகளை ஏனைய நாடுகள் தொடர்ச்சியாக கண்காணித்து வரும் போக்கும் உள்ளது. ஏனெனில் இவ்வமைப்பின் நடைமுறை செயற்பாடுகள் அனைத்தும் வெற்றியடைந்தமை இதற்கு காரணமாகும். உலக பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ஐரோப்பிய பொருளாதார சமூகம் பல சாதனைகளை செய்துள்ளது. இச்சாதனைகள் அனைத்தும் உலதின் ஏனைய நாடுகளுக்கு முன்மாதிரியாகவும் நல்ல அனுபவமாகவும் உள்ளது. ஐரோப்பிய பொருளாதார சமூகத்தின் சாதனைகளாக ஒற்றைச் சந்தை, ஒற்றை நாணய முறை, ஐரோப்பிய ஒன்றிய விரிவாக்கம், அறிவியல் ஆராய்ச்சி போன்ற பலவற்றை குறிப்பிடலாம். இவை ஒவ்வொன்றையும் பின்வருமாறு தனித்தனியாக வரையறுக்கலாம். 

நிலையான சட்டங்களின் மூலம் ஐரொப்பிய ஒன்றியம் ஒற்றை சந்தை முறையை அமுழ்ப்படுத்தியுள்ளது. இச்சட்டங்கள் எல்லா உறுப்ப நாடுகளுக்கும் பெருந்துவது மட்டுமன்றி, தனது உறுப்பு நாடுகளிடையே பொருள்கள், சேவைகள் மற்றும் முதலீடு ஆகியவற்றின் முதலீடுகளுக்கு உத்திரவாதம் அளிக்கிறது. இது பொதுவான வணிகக்கொள்கை, விவசாயக்கொள்ளை, மீன் வளர்ப்புக் கொள்கையையும் பேணி வருகிறது. பொதுவான வெளியுறவு கொள்கை மற்றும் பாதுகாப்பு கொள்கை அதாவது ஐரொப்பிய ஒன்றியம் பிற நாடுகளுடன் உடன்படிக்கைகளை ஏற்படுத்துவதுடன், ஒன்றியத்துக்காக உள் விவகார சட்டங்களை பாராபட்சமின்றி இயற்றி வருகிறது. ஐரொப்பிய ஒன்றியம் நிரந்தர அரசியலான்மை கொள்கையை உருவாக்கியதுடன், உலக வணிக அமைப்பு, ஜி 8, ஜி 20 போன்ற முக்கிய பொருளியல் அமைப்புக்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் போன்றவற்றிலும் தனது சார்பாண்மையை நிலைநாட்டியுள்ளது. இதில் முக்கியம் பெறுவது பொதுவான வெளியுறவு கொள்கை மற்றும் பாதுகாப்பு கொள்கையாகும். ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ஏனைய சர்வதேச நிறுவனங்களில் தனது நிலைப்பாட்டினை வெளிப்படுத்தும் போது ஒருமித்த கருத்தினை கொண்டுள்ளன. ஏனைய அமைப்புக்கள் அவ்வாறு பேச்சளவில் பேசினாலும் நடைமுறையில் கைக்கொள்வதில்லை. உதாரணமாக சார்க் அமைப்பின் அங்கத்துவ நாடுகள் ஐக்கிய நாடுகள் சபையில் ஒருமித்த கருத்தினை வெளிப்படுத்துகின்றது என கூறமுடியாது. இதனை மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டுவந்த பிரேரணையில் சார்க் நாடுகள் செயற்பட்ட விதத்தினை முன்னுதாரணமாக கொண்டு உணரலாம். 

ஒற்றை நாணைய முறையினை நோக்கும்போது ஐரோப்பிய ஒன்றியத்தின் பல உறுப்பினர் நாடுகள் இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்தே பொருளியல், வணிக நடவடிக்கைகளில் ஒருங்கிணைந்து செயல்பட்டு வந்துள்ளன. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு பொது நாணய முறை ஒன்றை உருவாக்க நீண்ட நாட்களாக முயன்று வந்தன. 1990களில் அதற்கான திட்ட அளவைகள் வரையறுக்கப்பட்டன. “ஐரோ ஒன்றுசேர்தல் திட்ட அளவைகள்” என்று பெயரிடப்பட்ட அந்த அளவைகள் 1992ல் கையெழுத்தான மாஸ்டிரிக்ட் ஒப்பந்தத்தில் இடம் பெற்றிருந்தன. இதனால் மாஸ்ட்ரிக்ட் அளவைகள் என்று வழங்கப்படுகின்றன. 01.01.2002 ஆம் ஆண்டு முதல் நடைடுறைப்படுத்தப்பட்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒற்றை நாணைய முறை யூரோ என்றழைக்கப்படுகிறது. இதன் குறியிடு € ஆகும். ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆரம்ப காலம் முதல் 2002 வரையிலாக இடைப்பட்ட காலத்தில் உறுப்பு நாடுகள் தங்களின் நாணய முறையையே பின்பற்றினர். ஐரோப்பிய ஒன்றிய யூரோ ஐரோப்பிய எல்லையை கடந்து வெளிநாடுகளில் வணிகளம் செய்யும் குழமத்திற்கு ஏற்படும் வணிகப் பரிவர்த்தனைக்கான தடைகளைக் களைகிறது. மேலும் இது தடையற்ற வணிகத்தை மேன்மையுற செய்கிறது. 

ஐரோப்பிய ஒன்றிய விரிவாக்கம் ஆரம்பக்கட்டத்தில் ஆறு நாடுகளுடன் தோன்றிய ஐரோப்பிய ஒன்றியம் இன்று 28 உறுப்பு நாடுகளை தன்னகத்தே கொண்டுள்ளது. இந்நாடுகள் உடன்படிக்கைகளுக்கு உட்பட்டு, தங்களுடைய மேலாண்மையை இழக்காமல் ஐரோப்பிய ஒன்றியத்தின் அங்கங்களுக்கு தங்களின் உறுப்பினர்களை அனுப்பி வருகின்றது. 1957ம் ஆண்டு தொடக்கம் ஐரோப்பிய பொருளாதார சமூகம் ஏனைய நாடுகளையும் உள்ளடக்கி செயற்பட்டு வருகின்றது. இது வெற்றிகரமாக இயங்கும் ஒர் அமைப்பாக காணப்படுவதால் இதில் அங்கத்துவம் பெறுவதற்கு போட்டியும் காணப்படுகிறது. மற்றும் ஏனைய நாடுகளின் இறைமைக்கு பங்கம் ஏற்படாத விதத்தில் ஐரோப்பிய ஒன்றியம் செயற்படுவதாலும் இவ் அங்கத்துவம் உயர காரணமாகும். அதாவது ஐரோப்பிய ஒன்றிய திட்ட உருவாக்கத்தில் உறுப்பு நாடுகள் சம்மதம் இருந்தால் மட்டுமே இணைந்து கொள்ளலாம். அதாவது ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அனைத்தும் யூரோ நாணயத்தினை ஏற்றுக்கொள்ளவில்லை. இருப்பினும் விரும்பிய நாடுகள் இணைந்து கொள்ளலாம். தற்போது உறுப்பு நாடுகள் 28 ஆக உள்ளபோதும் மேலும் பல நாடுகள் இவ்வமைப்பில் இணைய விருப்பம் கொண்டுள்ளன. அதிகரிக்கும் உறுப்பு நாடுகளினால் ஐரோப்பிய ஒன்றியத்தின் பலம் அதிகரிக்கின்றது. இவ்வதிகரிப்பு பல இடர்பாடுகளுக்கும் காரணமாக காணப்படினும் நன்மைகளே அதிகம் எனலாம். 

அறிவியல் ஆராட்ச்சி அதாவது அறிவியல் முன்னேற்றத்துக்கான வசதிகளை செய்து கொடுப்பது ஐரோப்பிய ஒன்றியத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும். அறிவியல் ஆராச்சிக்குத் தூண்டுகோலாய் இருப்பதும், அதற்கு ஒத்துழைப்பதும் இவ்வொன்றியத்தின் முக்கிய நோக்கமாகும். ஐரொப்பிய ஆராச்சி ஆணையகம் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் தனிப்பட்ட நாடுகளின் அறிவியல் ஆராச்சி திட்டங்களுக்கும் நிதியுதவி அளித்து வருகிறது. ஆராச்சிய தற்போதைய உலகில் பலம் பொருந்திய விடையமாகவே உள்ளது அதனது பலம் வெளிப்படையாக தென்படாவிட்டாலும் மறைமுகமாக மிகப் பலம் பொருந்தியதாகவும் இவ்வாராச்சிகள் வெற்றியளிக்கும் போது பண வருவாய்க்கான மூலமாகவும் மாற்றமுறும். இவ்வாறு பல சாதனைகளை ஐரோப்பிய ஒன்றியம் தனதாக்கியுள்ளது.   

ஐரோப்பிய ஒன்றியம் ஐக்கிய நாடுகள் சபையுடன் வலிமையான உறவு கொண்டுள்ளது. முன்னேற்றம், பருவ நிலை மாற்றம், பாதிக்கப்பட்ட நாடுகளில் அமைதிக்காக பாடுபடுதல், நெருக்கடி காலங்களில் மனிதாபிமான உதவிகள், உலக சுகாதாரம் பேணுதல், தொழிலாளர் பிரச்சினைகள் மற்றும் கலாச்சார சீர்திருத்தங்கள் போன்ற மிகப்பெரிய திட்டங்களில் ஐக்கிய நாடுகள் சபை ஒத்துழைப்புடன் ஐரேப்பிய ஒன்றியம் சிறந்த முறையில் பணியாற்றி வருகிறது. ஐக்கிய நாட்டுச் சபையின் திட்டங்களுக்கு பேச்சளவு ஒத்துழைப்பு மட்டுமன்றி, பொருளாதார ரீதியாகவும் உதவிகள் செய்து வருகிறது. உலக அந்நிய செலவாணியில் ஐரோப்பிய ஒன்றியத்தின் பங்களிப்பு மிகப்பெரியதாகும். 2006 ஆம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்தின் வரவு செலவுத்திட்ட மதிப்பு 671 மில்லியன் யூரோ ஆகும். இதில் 48 சதவீதம் ஆப்பிரிக்க, கரீபிய மற்றும் பசிபிக் நாடுகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு உதவிகள் செய்வானுடாக ஐரோப்பிய ஒன்றியம் குறித்த நாடுகளில் அழுத்தங்களையும் பிரயோகிக்க முடிகின்றது. இதனை இலங்கையின் அனுபவத்தினை கொண்டு அறியலாம். 

GSP+ வரிச்சலுகை ஐரொப்பிய ஒன்றியத்தினால் 2005ம் ஆண்டு நடுப்பகுதியில் இருந்து இலங்கைக்கு வழங்கப்படுகிறது. இதன்மூலம் இலங்கை ஐரோப்பிய ஒன்றியத்தின் இறக்குமதி தீர்வின்றி பொருட்களை ஏற்றுமதி செய்யமுடியும். இதனால் 3 பில்லியன் டொலர் பெறுமதியான வருமானம் ஆண்டுதோறும் கிடைக்கும் மேலும் 100000 பேர் வேலைவாய்ப்பு பெறுவர். இச்சலுகையை தக்கவைத்துக்கொள்ள 27 உடன்படிக்கைகளில் சலுகை பெறும் நாடு கையொப்பமிட வேண்டும். இதில் முக்கியமாக மனித உரிமை விடயங்களை குறிப்பிட்ட நாடு பாதுகாக்க வேண்டும். இதனை இலங்கை போர் காலத்திலும் அதற்கு பின்னரும் கடைப்பிடிக்காததனால் இச்சலுகையை 2010 ம் ஆண்டு இலங்கை இழந்தது. 

இச்சிறப்பு வரிச் சலுகை நீக்கம், பாரிய பின் விளைவைக் கொண்டது. சலுகையற்ற நிலையில், சந்தையில் போட்டியிடும் நிலைக்கு இலங்கை பொருட்களுக்கு எற்பட்டுள்ளது. இதனால் இதுவரை சலுகை பெற்ற எற்றுமதியான பொருள் சந்தையில் முடங்கும். பொருளின் விலை வரியினால் அதிகரிக்கும். அதேநேரம் பொருள் தேக்கம், மற்றைய இறக்குமதி நாடுகள் குறைந்த விலையில் பொருளை கோரும். இலங்கையின் எற்றுமதி சந்தையில் ஒரு பாரிய நெருக்கடி உருவாகும். உற்பத்தி செய்யும் தொழிளார்கள் கூலி குறையும். பொருளின் தேக்கம், கூலி குறைப்பும், இயல்பாக, பாரிய வேலை இழப்பை உருவாக்கும். எற்றுமதியைச் சுற்றி உப உற்பதிகள் முடங்கும். இப்படி பாரிய பொரளாதார நெருக்கடி உருவாகும். எற்றுமதியை நம்பி கட்டும் கடன் தவனைகள், நெருக்கடிக்கு உள்ளாகும். இலங்கை மக்களை வேறு வகையில் சுரண்டி கடன் கொடுக்கும் போக்கு அதிகரிக்கும். இன்று இலங்கை அதிகளவு எற்றுமதி செய்வது ஐரோப்பிய யூனியனுக்குத்தான். அதாவது 33 சதவீகிதத்தை ஐரோப்பிய யூனியனுக்கு எற்றுமதி செய்தது வந்தது. இலங்கையின் பிரதான எற்றுமதியான புடைவத் துறை இதனால் முற்றாக பாதிக்கும். இது இலங்கை மொத்த எற்றுமதியில் 41 சதவீதமாகும். இதைவிட பல பொருட்களின் எற்றுமதியம் இதனால் பாதிக்கப்படும்.புடவைத் துறையில் 2.75 லட்சம் பேர் இன்று நேரடியாக தொழில் பெற்றுவருகின்றனர். இவர்களை இது நேரடியாக பாதிக்கும். இதை சுற்றி இயங்கும் 10 லட்சம் தொழிளார்கள் தங்கள் வேலையை இழப்பர். இலங்கை மொத்த எற்றுமதி வர்த்தகத்தில் 36 சதவீதம் இந்த வரிச்சலுகை உட்பட்டது. இப்பாதிப்பு பாரியது மட்டுமன்றி அரசியல் ரீதியாக பாரிய நெருக்கடி கொடுக்கக்கூடியது. 

இத்தகைய வரிச்சலுகைகளை காரணம் காட்டி ஐரோப்பிய ஒன்றியம் தமக்கு சார்பான வெளியுரவு கொள்கையினை குறித்த நாடு உருவாக்க வைக்கவும் முயல்கிறது. இலங்கையை மட்டுமன்றி பல வறிய நாடுகளில் இத்தகைய உத்தியையே ஐரோப்பிய ஒன்றியம் கைக்கொள்கிறது. இதன் மூலம் குறித்த நாட்டின் மூல வழங்களையும் சுரண்ட எத்தனிக்கிறது. இப் பொருளாதார சமூகம் பொருளாதார விடையங்களில் மட்டுமன்றி பாதுகாப்பினை மையப்படுத்தி படை பலத்தினையும் பெருக்கியுள்ளது. வரலாற்றினை நோக்கும்போது தனது படைபலத்தின் மூலம் பல நாடுகளில் போர் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளதை காணலாம். இதற்காக 7.9 மில்லியன் டொலர் செலவில் நிறுவப்பட்டுள்ள EUFOR அதன் தலைமையகத்தை, இத்தாலியின் றியர் அட்மைரல் க்ளாடியோ கௌடோசியின் கீழ் ரோமில் கொண்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் இரு போர்ப் படைப் பிரிவுகளைக் கொண்டுள்ளது. இவ்விடையங்களினுடாக பார்க்கும் போது பொருளாதார மற்றும் பாதுகாப்பு விடையங்களில் ஐரோப்பிய ஒன்றியம் தன்னிறைவினையே பெற்றுள்ளது. 

ஐரோப்பிய ஒன்றியத்தின் பேர்லின் அறிக்கை ஐரோப்பிய ஒன்றியத்தின் செயற்பாடுகளையும் அடைவு மட்டத்தினையும் மிக சிறப்பாக எடுத்து கூறுகின்றது. “பல நூற்றாண்டுகளாக ஐரோப்பா என்பது ஒரு கருத்துவடிவில்தான் இருந்தது அமைதி, புரிந்துணர்வு ஆகியவற்றிற்கு நம்பிக்கை காட்டிய வகையில்தான் இருந்தது. அந்த நம்பிக்கை இப்பொழுது நிறைவு பெறுகிறது. ஐரோப்பிய ஒன்றிணைப்பு சமாதானத்தையும் செழிப்பையும் சாத்தியமானதாக்கியுள்ளது” தொடர்ந்தது “அமைதிக்கும், சுதந்திரத்திற்கும், ஜனநாயகத்திற்கும் சட்டத்தின் ஆட்சிக்கும், பரஸ்பர மரியாதை, பொறுப்புணர்வை பகிர்ந்துகொள்ளல், செழிப்பு, பாதுகாப்பு, சகிப்புத்தன்மை, பங்கு பெறுதல், நீதி, ஒற்றுமை ஆகியவற்றிற்காக நாம் பாடுபடுகிறோம்.” எனவே அமைதி, செழிப்பு, ஒற்றுமை என்பவற்றில் உலகில் உள்ள ஏனைய நாடுகளுக்கும், அமைப்புகளுக்கும் ஐரோப்பிய ஒன்றியம் முன்மாதிரியாக விளங்குகிறது. 

ஐரோப்பிய பொருளாதார சமூகத்தினுடைய நகர்வுகள் தொடர்ச்சியாக வெற்றியளித்துள்ளது என தென்பட்டாலும், கண்டம் முழுவதும் நடைபெறும் சமீபத்திய தொடர் நிகழ்வுகள் இதற்கு எதிர்மாறாக உள்ளது. இதில் முக்கியமாக வேலையின்மை பிரச்சினை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு பெரும் சவாலாக உள்ளது. கண்டம் முழுவதிலும் வேலையில்லாதவர்களுடைய எண்ணிக்கை 23 மில்லியனை அடைந்துவிட்டுதாக கூறப்படுகிறது. கிரேக்க வணிகக் குழுவின் கருத்துப்படி, 2011 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில் அனைத்து கிரேக்க வணிகத்தின் 20 சதவிகித நிறுவனங்கள் மூடப்பட்டுவிட்டன, மற்றும் 15 சதவிகிதமோ கிட்டத்தட்ட மூடும் தருவாயில் உள்ளன. வேலையின்மை விகிதம் தற்பொழுது 18.8 சதவிகிதம் என்று உள்ளது இளைஞர்களில் 46.6 சதவிகிதம் வேலையற்று உள்ளனர். நான்கு பெரிய ஐரோப்பியப் பொருளாதாரங்களின் புள்ளிவிபரங்கள் பெரும் கவலையை அளிக்கின்றன: 

• பிரித்தானியா: நான்காம் காலாண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 0.2 எனச் சரிந்தது உற்பத்தித்துறையோ 0.9 சதவிகிதத்தைச் சரிவாகக் கொண்டது. 

• இத்தாலி: நாட்டின் பொருளாதாரம் இந்த ஆண்டு 1.5 சதவிகிதம் சுருங்கும் என்று பாங்க் ஆப் இத்தாலியால் கணிக்கப்பட்டுள்ளது சர்வதேச நாணய நிதியமோ (MIF) 2.2 சதவிகிதம் சுருக்கம் இருக்கும் என்று முன்கணிப்பு செய்துள்ளது. 

• பிரான்ஸ்: வேலையின்மை விகிதம் 9.7 சதவிகிதம் என்று 11 ஆண்டுகளில் இல்லாத உயர்வை அடைந்துள்ளது பிரெஞ்சு அரசாங்கக் கடன் 639 பில்லியன் யூரோக்கள் என்று அதிகரித்துவிட்டது. ஸ்டாண்டர்ட் ரூ பூவர்ஸ் பிரெஞ்சுக் கடன்தரத்தை AAA என்பதிலிருந்து 2012 ஜனவரி 14ம் திகதி குறைத்துவிட்டது. 

• ஜேர்மனி: ஐரோப்பாவின் மிகப் பெரிய பொருளாதாரம் ஜேர்மனிய புள்ளிவிபர அலுவலகத்தின் கணக்குப்படி, 2012 ன் கடைசி மூன்று மாதங்களில் 0.25 சதவிகிதம் சுருங்கியது இது 2009 தொடக்கத்தில் ஏற்பட்ட வோல்ஸ்ட்ரீட் சரிவிற்குப் பின் முதல் சரிவு ஆகும். 

• ஸ்பெயின்: ஐரோப்பாவின் ஐந்தாவது மிகப் பெரிய பொருளாதாரமான ஸ்பெயின் எல்லாவற்றையும் விட, குறைந்தப்பட்சம் தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத் தரங்க்கள் மீதான பாதிப்பைப் பொறுத்தவரை மிக மோசமாக இருக்கக்கூடும். இப்பொழுது மிக உயர்ந்த அளவில் ஐந்து மில்லியன் தொழிலாளர்களை பதிவு செய்துள்ளது என்று ஸ்பெயின் கூறியுள்ளது. வேலையற்றோர் விகிதம் 2012 நான்காம் காலாண்டில் 23.9 சதவிகிதம் என்று உயர்ந்துவிட்டது. இளைஞர் வேலையின்மை விகிதமோ 50 சதவிகிதத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. 

எனவே மேற்கூறிய கணிப்பிட்டின் பல ஐரோப்பாவின் வேலையின்மை பிரச்சினை ஐரோப்பிய பொருளாதார சமூகத்தின் எதிர்காலத்தினை பாதிப்பதாக மாறலாம். இதற்கு சிறந்த திட்டத்தினை கைக்கொண்டு தீர்வினை ஏற்படுத்த வேண்டியது காலத்தின் தேவையாக உள்ளது. மேலும் ஐரோப்பாவில் மூல வளங்கள் குறைந்து செல்வதும் ஓர் பாரிய பிரச்சினையாக உள்ளது. இதற்கும் பொருத்தமான நடவடிக்கை அவசியமாகும். 

முடிவாக நோக்கும் போது வெற்றிகரமாக இயங்கும் அமைப்புக்களில் ஐரோப்பிய பொருளாதார சமூகம் ஒன்றாகும். இச்சமூகம் தனது ஐக்கியத்தினுடாக உலக அரசியலில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தும் அமைப்பாகவும் உள்ளது.

Sources:
https://www.mmmexam.com/2016/12/blog-post_84.html
Previous Post Next Post