அண்மைக்காலமாக டுவிற்றர், பேஸ்புக் மற்றும் சமூக வலைத்தளங்களில் நேசமணி தொடர்பாக #Pray_for_Neasamani எனும் பல்வேறு பிரார்த்தனைகளும், அவர் பற்றிய பல்வேறு பதிவுகளும் இடப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் சிலர் நேசமணி என்றால் யார் என்று தெரியாமல், யார் இந்த நேசமணி? அவர் என்ன செய்தார்? ஏன் அவருக்காக அனைவரும் வேண்டுகிறார்கள் என குழும்பிக் கொண்டிருக்கின்றனர். இந்தவேளையில் நேசமணி என்றால் யார் என்பதை அறியாதவர்கள் அறிந்து கொள்வதற்காகவே இந்தப் பதிவு. இந்தப் பதிவானது எனும் இணையத்தளத்தின் செய்தியைத் தழுவி பதிவிடப்படுகின்றது.
உண்மையில் நேசமணி என்பது 2001 ஆம் ஆண்டில் வெளியாகிய பிரண்ட்ஸ் படத்தில் வெளிவந்த வடிவேல் ஏற்று நடித்திருந்த பாத்திரத்தின் பெயரே நேசமணி ஆகும். இப்படத்தில் வடிவேலு கண்டக்டர் நேசமணியாக நடித்திருந்தார். இதில் ஒரு கட்டத்தில் அவருடைய உதவியாளரான ரமேஸ்கண்ணாவினால் சுத்தியல் மண்டையில் பட்டு மயக்கமடைந்திருந்தார். இந்த நகைச்சுவையான சம்பவமே நேசமணிக்காக உலகமே பிரார்த்தனை செய்யுமளவிற்கு மாற்றியது.
2001 ஆம் ஆண்டில் இடம்பெற்ற இந்தச் சம்பவம் இப்போது எப்படி உலகமே பிரார்த்தனை செய்யுமளவிற்கு மாற்றியது என பலரும் யோசிக்கக்கூடும். அது எப்படி நடந்தது என அடுத்து பார்ப்போம்.
பாகிஸ்தானுடைய ஒரு வலைப்பக்கத்தில் சுத்தியலின் படத்தைப் போட்டு உங்கள் நாட்டில் இதற்குரிய பெயர் என்ன? எனப் பதிவிடப்பட்டிருந்தது. அதற்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு முகநூல' பாவணையாளரால் "இதன் பெயர் சுத்தியல்" என தமிழில் பெயரிடப்பட்டதுடன், கண்டக்டர் நேசமணியின் மண்டைய ஒருவர் அச்சுத்தியலால் உடைத்துவிட்டர்" எனவும் பதிவிடப்பட்டது.
இந்தப் பதிவிற்கு இன்னுமோர் தமிழ் பாவணையாளர் நகைச்சுவையாக "இப்போது அவர் நலமாக உள்ளாரா?" என வினாவியுள்ளார். இந்த தொடர்ச்சியான கருத்துக்கள் நிலரை நம்பவைத்தும், நகைச்சுவயயாகவும் நேசமணிக்காக பிரார்த்திக்கும் ஒரு போக்கை ஏற்படுத்தியிருந்தது.
சில கலையுலக பிரபலங்கள் கூட தமது வேண்டுதல்களை முகப்புத்தகத்திலும், டுவிட்டரிலும் பதிவிட்டு வருகின்றனர். இந்தவேளையில் பல மீம்ஸ்கள் இதனை அடிப்படையாகக் கொண்டு முகப்புத்தகத்தில் உலாவி வருகின்றன. சில விளம்பர நிறுவனங்கள் கூட நேசமணியை அடிப்படையாகக் கொண்டு விளம்பரங்களைத் தயாரித்திருக்கின்றன.
சில அரசியல் பிரபலங்கள் பதவிட்டது போன்றதான போட்டோசொப் மூலமான கருத்துக்களும், படங்களும் உலாவருகின்றன.