கோராவளி கண்ணகி அம்மன் சடங்கு உற்சவம் 2017- அறிவித்தல்






(Akshayan) கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் கிராமியத் தெய்வ வழிபாட்டிற்கு பிரசித்தி பெற்ற இடமாக கோராவளி அமைந்துள்ளது. மருதமும் , முல்லையும், குறிஞ்சியும் ஒருங்கே அமையப் பெற்ற இக்கிராமத்தில் கோயில் கொண்டுள்ள கோராவளி கண்ணகி அம்மன் ஆலயத்தின் திருக்குளிர்த்தி சடங்கானது எதிர்வரும் 08.06.2017 (வியாழன்) அன்று ஆரம்பமாகி எதிர்வரும் 09.06.2017 (வெள்ளி) அன்று திருக்குளிர்த்தி பாடுதலுடன் நிறைவு பெறவுள்ளது.









உற்சவ காலத்தில் கோரளைப்பற்று தெற்கு பிரதேச செயலகத்தினால் ஆலயத்திற்கு வருகை தரும் அடியவர்களுக்காக போக்குவரத்து ஒழுங்கமைப்பும் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.























கோராவளி கண்ணகி அம்மன் ஆலய வரலாறு





கண்ணகி அம்மனின் கதை கூறும் நூலாக சிலப்பதிகாரம் விளங்குகின்றது. அதாவது கண்ணகியின் கணவனான கோவலன் மாதவியின் ஆடல்களுக்கு மயங்கி கண்ணகியை விட்டு மாதவியுடன் சென்றார். கண்ணகியின் ஆபரணங்கள் அனைத்தையும் கோவவலன் விற்று மாதவியுடன் சந்தோசமாக இருந்தார். சிலநாட்களின் பின் மாதவியை விட்டுப் பிரிந்து கண்ணகியுடன் சேர்ந்தார். அதன் போது சிலம்பொன்றை விற்பதற்காக கோவலன் சென்றார்.


 பாண்டிய மன்னர்களின் சிலம்பும்,தொலைந்து அடகு வாங்குபவர் கோவலன் கொண்டு சென்ற சிலம்பை பாண்டிய மன்னனிடம் கொடுத்தார். அப்போது பாண்டிய மன்னன் தனது காவலாளிகளிடம் கோவலனை கொன்டு வாருங்கள் என்றார். காவலாளிகள் கோவலனை கொன்டு வந்தனர். இந்த செய்தியை கெட்ட கண்ணகி ஓடிவந்து கோவலனிடம் சென்று அழுது இதற்கு நீதி கிடைக்க வேண்டுமென கூறி பாண்டியன மன்னனிடம் சென்றார். அங்கு சென்று என்ன நடந்தது எனக் கேட்ட போது கோவலன்; கொன்டு வந்த சிலம்பு பாண்டிய மன்னனுக்குரியது என்பதால் கோவலனை கொண்டு வருமாறு கூற கொண்று விட்டனர். 


கண்ணகி பாண்டிய மண்ணனிடம் முத்தா? மாணிக்கமா? எனக் கேட்டார். அதற்கு பாண்டிய மன்னன் மானிக்கம் எனக்கூறினார். கண்ணகி சிலம்பை உடைத்துக் காட்டினார். அதில் முத்து இருந்தது. அப்போது கண்ணகியிடம் பாண்டிய மன்னன் மன்னிப்புக் கேட்டார். அப்போது கண்ணகி எரியட்டும் எரியட்டும் மதுராபுரியே எரியட்டும் தாது கோபுரங்கள உடையட்டும் என சாபம் இட்டு பாண்டிய மன்னனின் சீற்றம் காரணமாக எரித்து சினத்தோடு இலங்கைக்குப் புறப்பட்டார். 


இலங்கையின் கிழக்கு மகாணத்தில் 'பட்டிப்பளை' எனும் காட்டுப் பகுதியில் கோபம் தனிப்பதற்காக வந்தார். அந்த ஊர் தனது கோபத்தை ஆற்றியமையால் வந்து+ஆறு என்று வந்தாறு மூலை எனும் பெயர் பெற்றது. ஆந்த ஆலயத்தில் குழந்தைகளின் அழுகை ஓசையும் மனிதர்களின் கூக்குரல் ஒலி கேட்ட வன்னம் இருந்மையால் அங்கிருந்து புறப்பட்டு கோரளைப் பறறு கோராவளி என்னும் அடர்ந்த காட்டுப் பகுதியில் வற்றாத கங்கை ஓரமாகவும் கொக்கட்டி மர நிழலில் குடி கொன்டார். அக்கால வாசிகள் இதனைக் கண்டார்கள். 


கண்ணகை குழந்தை அழுகை ஒலி கேட்க விருப்பமில்லாமையால் வருடத்துக்கு ஒரு முறை வைகாசிப் பௌர்னமி தினத்தன்று 7 ஊர் மக்களால் அலங்கார உற்சவம் கொன்டாடப் படுகின்றது. சித்தாண்டி, முறக்கொட்டாஞ்சேனை, சந்திவெளி, கோரகளிமடு, கிரான், கின்னியடி, ஆகிய ஊர்மக்களால் கொத்துப்பந்தல் இட்டு ஆயிரக்கணக்கான மக்களால் புதுப்பானையில் பொங்கல் பொங்கி அம்மனுக்குப் படைத்து நேர்த்திக்கடன்களை நிறைவேற்றி வழிபடுவார்கள். பக்தர்களுக்கு வேண்டிய வரங்களை கொடுப்பதால் மிகவும் பிரசித்தி பெற்று விளங்குகின்றது. ஆகவே கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அம்மன் வழிபாட்டிற்கு பிரசித்தி பெற்ற இடமாக விளங்குகின்றது.










கோராவளி கண்ணகி அம்மன் புகழ் கூறும் பாடல்



Previous Post Next Post