நுரையீரல் மூச்சுக் குழாயில் ஏற்படும் சுருக்கம் அல்லது அழுத்தத்தினால் சுவாசித்தலில் தடையை ஏற்படுத்தும் பிரச்சினை ஆஸ்த்துமா அல்லது இழுப்பு என அழைக்கப்படுகின்றது. ஆஸ்துமா தொடர்பாக இங்கு நாம் அவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சிறந்த வீட்டு மருத்துவங்களை பார்க்கவிருக்கின்றோம்.
ஆஸ்த்துமாவின் அறிகுறிகள்
- இருமல்
- நாசியழற்சி
- மூச்சுத்திணறல்
- மார்பு இறுக்கம்
- மூச்சு திணறல்
- களைப்பு
- அதிகரித்த சுவாச விகிதம்
- அதிகரித்த நாடித்துடிப்பு
- வியர்வை
ஆஸ்மதுமா நோய் ஏற்படுவதற்கான காரணிகளும், தூண்டுதல்களும்.
- மன அழுத்தம்
- கோபம்
- ஒவ்வாமை வெளிப்பாடு
- உணவுகள்
- சுவாச நோய் தொற்று
- மருந்துகள்
- சுற்றுச்சூழல் மாசுபாடு
- புகை
- குளிர் வெளிப்பாடு
- உடற்பயிற்சி
- இரசாயனத் தீப்பொறிகள்
- தூசி
ஆஸ்துமா நோய்க்கு இயற்கையான வீட்டு மருத்துவ முறைகள்
- திப்பிலி மற்றும் விளாம்பழம் ஆகியவற்றைச் சிறிது நீருடன் கலந்து கொதிக்க வைத்து அதனை உள்ளெடுத்துக் கொள்வதன் மூலம் உடனடியான மூச்சுவிடுவதில் ஏற்படும் பிரச்சினையை நீக்கிக்கொள்ளலாம்.
- ஒரு கப் அளவு வெந்தயத்துடன், ஒரு தேக்கரண்டி தேன் மற்றும் இஞ்சிச் சாறு கலந்து கசாயமாக வைத்து அருந்துவதனால், சிறந்ததொரு சுவாசச் சளி நீக்க மருந்தாகச் செயற்படுகின்றது.
- ஒரு அங்குலம் அளவிலான இஞ்சியினைத் துண்டுகளாக்கி அதனை தண்ணீரில் நன்றாகச் சுடவைத்து காலை மற்றும் மாலையில் குடித்து வந்தால் நுரையீரல் சுவாசக் குழாயின் வீக்கத்தைக் குறைத்து சீரான சுவாசத்திற்கு உதவுகின்றது.
- ஒரு கிளாஸ் தன்னீருடன், 10 வெள்ளைப்பூண்டுத் துண்டங்களையும் சேர்த்து நன்றாகக் கொதிக்க வைக்கவேண்டும். பின்னர் அதனை ஒரு நாளைக்கு ஒரு தடவை குடித்து வந்தால் நுரையீரல் நெருக்குதலை நீக்குகின்றது.
- தேசிக்காய் பாணத்தினை தினமும் அருந்தி வருகின்றபோதும் ஆஸ்த்துமாவினைக் கட்டுப்படுத்துகின்றது. தேசிக்காயிலுள்ள விட்டவின் சி மற்றும் ஆண்டிஒக்சினேற்றுகளும் இதற்கு காரணமாகும்.
- தூதுவளை இலையைக் காயவைத்து தூளாக்கி அதனை தேனுடன் கலந்து சாயப்பிட்டால் , ஆஸ்த்துமாவைக் குணப்படுத்தக்கூடிய சிறந்த ஒரு மருந்தாகும்.
- துளசி இலையைத் தேனுடன் கலந்து சாயப்பிடுவதனாலும் ஆஸ்துமா நோயின் தாக்கத்திலிருந்து விடுபடலாம்.
- ஆஸ்த்துமா வேளையின்போது கோப்பியினை அருந்துவதன் மூலமும், கோப்பியிலுள்ள கோஃபின் எனும் பொருளானது சுவாசப்பை இளக்கியாகும். இதனால் சுவாசத்திற்கான வழிகள் திறந்து இலகுவான சுவாசத்திற்கு வழிவகுக்கின்றது.
- வெற்றிலைச் சாறினை மிளகுடன் கலந்து நித்திரைக்குச் செல்லுமுன்னர் அருந்துவதன் மூலம் ஆஸ்த்துமா காரணமாக ஏற்படும் சுவாசத்தடை அல்லது மூச்சுத்திணறலைக் கட்டுப்படுத்தலாம்.
- மஞ்சள் கட்டியினை அரைத்து அதனை பாலுடன் கலந்து குடிப்பதன் மூலமும் சுவாசத்தினை இலகுவாக்கின்றது.
இணையத்திலிருந்து தேடிப் பெற்று இத்தகவல்களை இங்கு வழங்கியுள்ளேன். மேலும் பல உடல்நலம் தொடர்மிபான க்க தகவல்களுடன் மீண்டும் சந்திப்போம். Akshayan