ஆசிரியர்களுக்கு பயனான ஒரு அன்றோய்ட் மென்பொருள்




தமிழ் மொழி மூல ஆசிரியர்களுக்கு பயன்படக்கூடிய சில இணையத்தளங்களின் இணைப்பினை இலகுவில் அடையக்கூடியவாறு அக்சயன் அவர்களால் தயாரிக்கப்பட்டுள்ள அண்ட்றாய்ட்டு இயங்குதளமுடைய கைத்தொலைபேசிகளில் பயன்படுத்தக்கூடிய மென்பொருள் ஒன்றின் இணைப்பு இங்கே வழஙகப்பட்டுள்ளது. அவ்விணைப்பின் வழியே சென்று மென்பொருளை தரவிறக்கி கைத்தொலைபேசிகளில் நிறுவிப் பயன்படுத்தலாம்.




இந்த மென்பொருளில் பின்வரும் நண்மைகள் காணப்படுகின்றன.





1. கல்வி அமைச்சின் இ-தக்சலாவ எனும் நிகழ்நிலை இணையத்தளத்தின் தமிழ் பக்க இணைப்பின் மூலம் பாடங்கள் மற்றும் வினாத்தாள்களைத் தரவிறக்கும் வசதி.





2. தேசிய கல்வி நிறுவகத்தினால் வெளியிடப்படுகின்ற ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி மற்றும் பாடத்திட்டம் என்பவற்றை தமிழில் இலகுவில் தரவிறக்கும் வசதி.





3. இலங்கை கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தினால் வெளியிடப்படுகின்ற நூல்களின் மென்பிரதிகைளத் தரவிறக்கிக் கொள்ளும் வசதி.





4. கல்வி அமைச்சினால் வெளியிடப்படுகின்ற சுற்றுநிருபங்களைத் தரவிறக்கக்கூடிய வசதி.





5. நூலகம் எனும் தளத்திலிருந்து தமிழ் நூல்களை தரவிறக்கிக் கொள்ள அல்லது அவற்றின் உள்ளடக்கங்களைப் பார்வையிடுவதற்கான வசதி.





6. புவியியல் பாடம் தொடர்பான இணையத்தளக் குறிப்புரைகள் மற்றும் நூல்களைப் பார்வையிடக்கூடிய வசதி.













Download link







Troubleshooting



Step 1




If installation is blocked, go to your settings



Step 2




Enable 'Allow installation of apps from sources other than the Play Store'



Previous Post Next Post