சித்தாண்டி, வந்தாறுமூலை, மாவடிவேம்பு கலைஞர்களின் கூட்டுமுயற்சியில் உருவான "விவசாயி" குறும்படத்தின் வெளியீட்டு நிகழ்வானது வந்தாறுமூலை தரிசன ஒன்றிய மண்டபத்தில் நானிலம் கலைக்குழுமத்தின் ஏற்பாட்டில் இன்று (27.12.2015) சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக திரு. உ.உதயசிறிதர் (பிரதேச செயலாளர், ஏறாவூர்ப் பற்று) அவர்களும், கௌரவ அதிதிகளாக திரு. க.சூரியகுமாரன் (பணிப்பாளர், வளிமண்டலவியல் திணைக்களம், மட்டக்களப்பு) அவர்களும், திரு. ஏ.கந்தசாமி (பெரும்பாக உத்தியோகத்தர், கமநல கேந்திர நிலையம், வந்தாறுமூலை) அவர்களும், சிறப்பு அதிதிகளாக திரு. Pசிவராம் (கலாசார உத்தியோகத்தர்) அவர்களும், திரு. K.S.R. சிவகுமார்(கலாசார உத்தியோகத்தர்), திரு. Y.குகநாத் (பொறியியல் உதவியாளர்), திரு. M.கலைமோகன் (விவசாய போதனாசிரியர்), திரு. R.பிரபாகரன் (விவசாய போதனாசிரியர்), திருமதி. J.புவீந்திரன் (ஆசிரியர்), திரு. R.நாகேந்திரன் (ஆசிரியர்) அவர்களும் கலந்துசிறப்பித்தனர்.
மேலும் இந்நிகழ்வில் நானிலம் கலைக் குழுமத்தின் உறுப்பினர்கள், பிரதேச பொதுமக்கள் மற்றும் சிறுவர்களும் கலந்துகொண்டனர்.
இக்பகுறும்படமானது தேவராஜ் அவர்களின் தயாரிப்பிலும், அக்சயன் அவர்களின் இயக்கத்திலும் வெளிவந்தமை குறிப்பிடத்தக்கது.