தவசி லேணிங் சிற்றி கல்வியகத்தின் வருடாந்த கல்விச் சுற்றுலாவானது கடந்த 07.06.2015 அன்று நடைபெற்றது. மட்டக்களப்பின் படுவான்கரைப் பிரதேசத்தை முதன்மையாகக் கொண்டு ஒழுங்குபடுத்தப்பட்ட இச்சுற்றுலாவில் கல்வியக ஆலோசகர் சி.தில்லையன், கல்வியக பிரதிப் பணிப்பாளர் க.சிவாங்கன், சமூக இணைப்பாளர் மா.சாந்தீபன், திட்டமிடல் பணிப்பாளர் அக்ஷயன் , பழைய மாணவர்கள் மற்றும் தரம் 6- 13 வரையிலான மாணவர்களும் கலந்துகொண்டனர்.
கல்விச்சுற்றுலாவில் புவியியல் மற்றும் சமய முக்கியத்துவம் வாய்ந்த மட்டக்களப்பின் படுவான்கரையில் அமைந்துள்ள சுற்றுலாத்தலங்கள் பார்வையிடப்பட்டன. அந்தவகையில் உறுகாமம் குளம், குசலான் மலை முருகன் கோவில், உன்னிச்சைக் குளம், தாந்தாமலை முருகன் கோவில், கொக்கட்டிச் சோலை தான்தோன்றீச்சரர் ஆலயம் மற்றும் கல்லடி கடற்கரை ஆகியன பார்வையிடப்பட்டன.