இன்றைய காலகட்டத்தில் வியக்கதக்க பல விடயங்களை நாம் அன்றாட வாழ்வில் கான்கின்றோம். இவற்றுக்கு காரணம் தொழிநுட்ப விருத்தியே என்று கூறவேண்டும்.
தொழில்நுட்ப விருத்தியின் விளைவாகவே இன்று எமது வங்கி வேலைகளை நாம் எமது வீட்டில் இருந்த படியே செய்து முடிக்கலாம். ஆம் இங்கு கூறவருவது நெட் வாங்கிங் எனப்படும் சேவையாகும். இதனால் எமது நேரம், பணம் என்பன மீதப்படுத்தப்படுகின்றன. நெட்வாங்கிங் கணக்கை திறப்பதற்கு நீங்கள் கணக்கு வைத்துள்ள வங்கி கிளைக்கோ அல்லது உங்கள் கணக்கு உள்ள வங்கி இணையத்தளத்திலோ சென்று நீங்கள் உங்களுக்கான கணக்கினை உருவாக்கி செயற்படுத்திக் கொள்ள முடியும். இதன்போது உங்களுக்கு நீங்களே தேவையான ID களையும், பாஸ்வேர்ட்களையும் உருவாக்கிக் கொள்ள முடியும்.
நீங்கள் மக்கள் வங்கியில் கணக்கு வைத்திருந்தால் கீழ்வரும் முகவரிக்கு சென்று உங்களுக்கான கணக்கினை உருவாக்கி கொள்ள முடியும். பின்பு உங்கள் கணக்கினை உரவாக்கிய பின்பு உங்களுக்கு தரப்படும் படிவத்தினை பதிவிறக்கம் செய்து அதனை உங்கள் வங்கி கிளைக்கு ஒப்படைத்தால் உங்கள் கணக்கினை செயற்படுத்தி தருவார்கள்
இலங்கை வங்கியாயின் http://web.boc.lk/assets/pdf/ebank/ebankpersonal.pdf
இன்று பெரும்பாலான கம்பெனிகள் ஊழியர்களின் சம்பளத்தை நேரடியாக அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தி விடுகின்றன. அதனால் சம்பள பணத்தை கொண்டு போய் பேங்க்கில் செலுத்த வேண்டிய வேலை மிச்சம். தேவைக்கு மட்டும் அப்பப்போ எடுத்துக் கிடலாம். இதனால் வங்கிகளுக்கும் லாபம். குறைந்தது 2, 3 நாளைக்காவது நம்ம அக்கவுண்ட்ல பணம் இருக்கும். இது தவிர நெட் பேங்கிங் மூலம் வீட்டில் இருந்தபடியே ஏகப்பட்ட வேலைகளை பார்த்துக் கொள்ளலாம். கரண்ட் பில். மொபைல், டெலிபோன் பில் கட்டலாம். இதெல்லாம் வீட்டில் இருந்தபடியே செலுத்தலாம். இதற்காக பல கிமீ தூரம் டூவீலரிலோ, பஸ்சிலோ செல்ல தேவையில்லை. பெட்ரோல் ரொம்ப ரொம்ப மிச்சமாகும்.
தொலைவில் உள்ள நமது உறவினர்களுக்கு எந்த நேரத்திலும், நடு ராத்திரியா இருந்தாலும் உடனே அவங்க அக்கவுண்ட்டில் பணம் செலுத்தி விடலாம். இதற்கு பணம் செலுத்துபவருக்கு மட்டும் நெட் பேங்கிங் வசதி இருந்தால் போதும்.
பணம் பெறுபவருக்கு வங்கியில் கணக்கு இருந்தால் மட்டும் போதும். அவரது கணக்கு எண்ணில் நேரடியாக நமது பணம் சேர்ந்து விடும். இதற்கு தேவையானது இனைய வசதி மட்டுமேயாகும். இன்று பெரும்பாலும் பெரும்பாலானவர்கள் இனையப் பாவனை கொண்டவர்களாகவே காணப்படுகின்றமையால் இந்த முறை வசதியானதுதானே இதற்கு கம்ப்யூட்டர்தான் தேவை என்பதில்லை. மல்டி மீடியா மொபைல் போன் போதும். இதனால் உள்ளங்கையில் இருந்து உங்கள் வங்கி கணக்கை அப்பப்ப செக் பண்ணிக்கலாம். நாமே பாஸ்வேர்டு வைத்துக் கொண்டுதான் இந்த கணக்கை இயக்க வேண்டும். இந்த பாஸ்வேர்டை நினைவில் மட்டும் தான் வைத்திருக்க வேண்டும். எதிலும் எழுதி வைத்திருக்க கூடாது.