சுமார் 24 ஆண்டுகளுக்கு முன்பு சேர்.டிம் பேர்னர்ஸ் லீ முன்வைத்த புதிய சிந்தனைகள மற்றும் அதனூடாக முன்வைத்த புதிய படைப்பு இன்று உலகம் முழுவதும் புரட்சிகர மாற்றத்தினை ஏற்படுத்தியுள்ளது. தேச எல்லைகளை கடந்து ஒவ்வொரு மனித வாழ்கையிலும் செல்வாக்குச் செலுத்தும் தன்மையினை அது அடைந்துள்ளது.
இந்த சிறப்புக்களை இவர் தொடர்ந்து அவதானித்து வருவதுடன் இன்றும் அது தொடர்பான பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபட்டும் வருகின்றார். அவரது உருவாக்கம் தான் World Wide Web (WWW) எனப்படும் உலகளாவிய வலை ஆகும். உலகுக்கு முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த உலகளாவிய வலை குறித்து அண்மையில் உலகின் கவனம் திரும்பியுள்ளது. சுமார் 24 ஆண்டுகளுக்கு முன்பு சேர்.டிம் பேர்னர்ஸ் லீ சுவிற்லாந்தின் ஜெனீவா நகரில் அமைந்துள்ள 'சேர்ன்' அணு ஆராய்ச்சி நிலையத்தில் பணியாற்றிய போதே இந்த அரிய கண்டுபிடிப்பு நிகழ்ந்தது. 1955 ஆம் ஆண்டு ஜீன் 8ம் திகதி லண்டனில் பிறந்த சேர்.டிம் பேர்னர்ஸ் லீ பௌதீகவியல் விஞ்ஞானியாகவும் கணினி அறிவியலாளராகவும் திகழ்கின்றார். இவர் ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிலையத்தில் (ERN) பணியாற்றிக்கொண்டிருந்த போது தனது நண்பர்களுடன் தொடர்பினை பேணுவதற்கு ஒரு வழிமுறை அவருக்கு தேவைப்பட்டது. அதன் விளைவாகவே World Wide Web தோற்றம் பெற்றது. அதற்கமைய 1989 மார்ச் மாதத்தில் முதன்முதலில் அவர் WWW என்ற சொல்லை பயன்படுத்தும் யோசனையை முன்வைத்தார்.அவர் தனது தகவல் பரிமாற்றக்குழுவான alt.hypernet news group இற்காக முன்வைத்த செயற்றிட்டத்தினை விளக்கும் போது இந்த WWW செயற்றிட்டத்தின் நோக்கம் அனைத்து தகவல்களையும் செய்திகளையும் எந்தவோர் இடத்திற்கும் கொண்டு செல்வதாகும் என்றார். பின்னர் அது நேரடியாக இணையும் போது டிம் பேர்னர்ஸ் லீ பின்வருமாறு கூறினார். 'இந்த வலைத்தள விஸ்தரிப்பினை வேறு பகுதிகளுக்கும் மேற்கொள்வதில் நாம் அக்கறையாக உள்ளோம் இதனூடாக பிற தரவுகள் மற்றும் தகவல் சேவைகளுக்கும் இடமளிக்க நாம் முயற்சிக்கின்றோம். இதற்கு ஒத்துழைப்பு வழங்க முன்வருவோரை நாம் மனம் உவந்து வரவேற்கின்றோம்.' என்றார்.
அப்பொழுது டிம் பேர்னர்ஸ் லீ க்கு 56 வயது டிமொத்தி ஜோன் டிம் பேர்னர்ஸ் லீ என்ற இயற்பெயரை உடைய சேர். டிம் பேர்னர்ஸ் லீ எனும் சிரேஸ்ட விஞ்ஞானி “Tim Bl” என்ற சுருக்கப் பெயராலும் அழைக்கப்படுகின்றார். இவரது பெற்றோர்களான கொன்வே பேர்னர்ஸ் லீ மற்றும் மேரி லீ வூட்ஸ் ஆகிய இருவரும் வர்த்தக ரீதியில் முதன்முதலில் தயாரிக்கப்பட்ட முதலாவது கணினியான 'ஃபெரன்டி மாக்' தொடர்பில் பணியாற்றிய கணினி மற்றும் கனித விஞ்ஞானிகளாவர் ஒக்ஸ்போர்ட் பௌதீக விஞ்ஞான பட்டதாரியான டிம் பேர்னர்ஸ் லீ பொறியியலாளராக பணியாற்றிக் கொண்டே 1978 இல் அச்சு தொடர்பான கணினி வர்ணக்கலவை மென்பொருள் ஒன்றை உருவாக்கினாh. 1980 இல் சுவிஸ்லாந்தின் சேர்ன் நிறுவனத்தில் பணியாற்றும் போதுதான் முதன்முதலில் hypertext என்ற விடயத்தினை முன்வைத்தார். இதனூடாக ஆராய்;ச்சியாளர்கள் மத்தியில் கணினி வலையமைப்பினூடாக தகவல்களைப் பரிமாற்றிக் கொள்ள முடியும் என்று சுட்டிக் காட்டிய இவர் அதற்காக ENQUIRE என்ற பெயரில் முதல்நிலை அமைப்பொன்றினை நிறுவினார்.
அதன் பின்னர் இங்கிலாந்தின் கணினிக்கட்டமைப்புடன் தொடர்புடைய நிறுவனம் ஒன்றில் பணியாற்றிய டிம் பேர்னர்ஸ் லீ அங்கு கணினி வலையமைப்பு தொடர்பான அறிவினைப் பெற்றார் 1984 இல் மீண்டும் சேர்ன் நிறுவனத்தில் இணைந்தார். அங்கு வைத்தே இணையத்தில் hypertext கோட்பாட்டினை அவர் இணைத்தார். 1989 மார்ச் மாதத்தில் இதன் அடிப்படை யோசனையை முன்வைத்த அவர் 1990 இல் ENQUIRE அமைப்பில் கையாண்ட சிந்தனையை பயன்படுத்தி World Wide Web இனை உருவாக்கினார். முதலாவது Web browser ஐயும் அதற்காகவே உருவாக்கினார். அதுமட்டுமன்றி முதலாவது வெப் சேர்வரான சேர்ன் எச்டிடிபிடி (CERN HTTPD) யினையும் உருவாக்கினார். அந்த வகையில் சேர்ன் இல்தான் முதலாவது வலைத்தளம் ஆரம்பமானது. அதனை இணையத்துடன் இணைக்கும் பணி 1991 ஒகஸ்ட் 6 ஆம் திகதி நடைபெற்றது. இன்றும் அவர் வலைத்தளத்தின் விஸ்வரூப வளர்ச்சியினை கண்காணித்து வருகின்றார். World Wide Web கொன்சோர்ட்டியத்தின் பணிப்பாளராக இருந்து கொண்டு அப்பணியினை ஆற்றி வருகின்றார்.