(Sritharan) கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கிடையிலான பேண்ட வாத்திய இசைப் போட்டி இன்று(08.01.2014) வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.
கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளர் திரு எஸ்.ஸ்ரீகிருண்ராஜா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம். சாள்ஸ் அவர்களும், கௌரவ அதிதிகளாக கோறளைப்பற்று தெற்கு (வாகரை) பிரதேச செயலாளர் செல்வி எஸ்.ஆர்.இராகுலநாயகி அவர்களும், கோறளைப்பற்று (வாழைச்சேனை) பிரதேச செயலாளர் திருமதி ரீ.தினேஸ் அவர்களும், கோறளைப் பற்று தெற்கு(கிரான்) பிரதேச செயலாளர் திரு கே.தனபாலசுந்தரம் அவர்களும், ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் திரு உ.உதயசிறிதர் அவர்களும் சிறப்பு அதிதிகளாக சித்தாண்டி இராணுவ மகாம் பொறுப்பதிகாரி அவர்களும், வேர்ள்ட்விசன் லங்கா நிறுவனத்தின் கிரான் பிரதேச உதவி திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.பி. பிரேமச்சந்திரன் அவாகளும் மேலும் கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட அதிகாரிகள், பாடசாலை அதிபர்கள் முதலியோரும் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட ஒன்பது பாடசாலைகள் பங்குபற்றியிருந்ததுடன், வேர்ள்ட்விசன் லங்கா அரச சார்பற்ற நிறுவனம் இந்த போட்டிக்கான அனுசணையினை வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட ஒன்பது பாடசாலைகள் பங்குபற்றியிருந்ததுடன், வேர்ள்ட்விசன் லங்கா அரச சார்பற்ற நிறுவனம் இந்த போட்டிக்கான அனுசணையினை வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.