(Rajan)சித்தாண்டியில் வாழ்வின் எழுச்சி பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் 2014ஆம் ஆண்டுக்கான வேலை திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல் கடந்த 09.02.2014 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணியளவில் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு இணைத்தலைவரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் மற்றும் ஏறாவூர் பற்றுபிரதேச செயலாளர் உதயசிறிதர் ஆகியோரின் தலைமையில் வந்தாறுமூலை மத்திய மகாவித்தியாலய மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் திட்டமிடல் பணிப்பாளர் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவனேசதுரை சந்திரகாந்தனின் இணைப்பாளர் ஆர்.தேவராஜா முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூ .பிரசாந்தன் கிராம சேவை உத்தியோகத்தர்கள் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு உத்தியோகத்தர்கள் மாதர் சங்கம் கிராம அபிவிருத்தி சங்கம் இபாடசாலை அதிபர்கள் மற்றும் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.
ஆரம்ப நிகழ்வாக மங்கள விளக்கேற்ற பட்டு இறை வணக்கத்துடன் கலந்துரையாடல்கள் இடம்பெற்றது. இந்த கலந்துரையாடலில் 2014ஆம் ஆண்டில் வாழ்வின் எழுச்சி திட்டத்தின் கீழ் இணைத்துக்கொள்ளபட்டுள்ள கிராமங்களில் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் திட்டத்தில் ஒரு கிராமத்தில் 10 பயனாளிகள் தெரிவு செயப்பட்டு அவர்களின் வாழ்வாதாரம் மற்றும் கிராம மட்டத்தில் பொது அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.
இந்த அபிவிருத்தி தொடர்பாக சித்தாண்டி 1,2,3,4 மாவடிவேம்பு 1,2ஆகிய கிராமங்கள் 2014ஆம் ஆண்டு திவிநெகும வேலை திட்டத்தில் கீழ் இணைத்துக் கொள்ளப்பட்டு கலந்துரையாடல்கள் இடம்பெற்றது.மேலும் இந்நிகழ்வில் வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலய அதிபர் திரு.தி. ரவி அவர்கள் அபிவிருத்தியானது மாணவாகளின் கல்வி சார்ந்து இடம்பெறுவதை வரவேற்பதாக தமது கருத்தாக முன்வைத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.