காடுகளில் வாழும் ஒருவகை கோழி இனமே காட்டுக் கோழி ஆகும். மட்டக்களப்பின் காட்டுப்பகுதிகளிலும் இவ்வகைக் கோழி இனம் வாழ்கின்றது. நகரப்பகுதிகளில் வாழ்பவர்களுக்கு இந்தக் கோழி பற்றி அறிந்திருப்பது குறைவு.
இந்தக் கோழி இனம் சாதாரண கோழி இனத்திலிருந்து சற்று வித்தியாசப்படுகின்றது. வால்கள் நீளமானதாகவும், காலில் உள்ள அபாய முள்ளு நீளமானதாகவும் இருப்பதுடன், இது மரத்திற்கு மரம் தாவிப் பறக்கக்கூடியதுமாகவும், மரத்திலே தங்கி வாழக்கூடியதாகவும் காணப்படுகின்றது.