டெங்கு பரவுவதை தடுக்கும் நோக்கில் மாவடிவெம்பு அறநெறி மாணவர்களினால் சிரமதான பணி

மாவடிவேம்பு பிரதேசத்தில் பொதுத் தேவைகளுக்கென ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில் டெங்கு நுளம்பு பரவும் அபாயத்தினைத் தடுக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட சிரமதான நிகழ்வொன்று மாவடிவெம்பு அறநெறி பாடசாலை மாணவர்களினால் இன்று முன்னெடுக்கப்பட்டது. 


இந்த சிரமதான நிகழ்வில் மாவடிவேம்பு அறநெறிப் பாடசாலையின்; ஆசிரியர்கள்,  மாணவர்கள், இளைஞர் கழக உறுப்பினர்கள், கிராம முன்னேற்றச் சங்க உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர். கடந்த 20 வருடங்களுக்கு மேலாக அறநெறிப் பாடசாலை ஒன்றை அமைக்கும் நோக்கில் அரச தேவைக்கென ஒதுக்கப்பட்ட குறித்த காணியில் சிரமதான வேலைகள் நடைபெற்றது. இதன்போது வருகை தந்த அரசியல் கட்சிகளின் பிரதேச பிரதிநிதிகள் குறித்த நிலத்தில் அறநெறி பாடசாலைக்கான கட்டடம் ஒன்றை அமைப்பதற்கு கூடிய விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.



 
Previous Post Next Post