ATM இயந்திரம் உருவான வரலாறு

    நாம் எமது வங்கிக் கணக்கில் மீதமாகவுள்ள பணத்தினை அவசரமாக எடுக்க தேவை ஏற்படுகின்ற போது ATM  இயந்திரத்தினை பயன்படுத்துகின்றோம்.
விடுமுறை நாட்களிலும், இரவு வேளைகளிலும் பணத்தினை எடுத்துக் கொள்ள முடியும். இம்முறை இன்று உலகம் பூராகவும் நடைமுறையில் காணப்படுகின்றது. அனேகமானோருக்கு இம்முறையே வசதியானதாக காணப்படுகின்றுது. எனினும் பெரும்பாலானோர் இம்முறை எவ்வாறு வழக்கத்துக்கு வந்தது, இதனை யார் கண்டு பிடித்தது, இதன் வரலாறு என்ன என்று அறியாதவர்களாகவே காணப்படுகின்றோம். எனவே இதன் வரலாறு பற்றி அறிந்த கொண்வோமே.
    ATM இயந்திரத்தை முதன்முதலில் உருவாக்கியவர் 'ஜோன் ஷெப்பர்ட் பெரோன்' என்பவர் ஆவார். இவர் ஸ்கொட்லான்ட் நாட்டைச் சேர்ந்தவர். இவருக்கு இந்த யோசனை எவ்வாறு தோன்றியது தெரியுமா? ஒரு முறை இவர் அவசரமாக வங்கிக்கு பணத்தை எடுக்கச் செல்கையில் வங்கி மூடப்பட்டிருந்தமையால், இவரால் பணத்தை எடுக்க முடியவில்லை.  இந்நிகழ்ச்சி இவருக்கு வேதனையையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியது. இச்சந்தர்ப்பத்திலேயே இவர் நாம் நினைக்கும் நேரத்தில் பணத்தை எடுப்பதற்கான வழிவகை இருந்தால் எப்படி இருக்கும் என யோசித்தார். அப்போது உருவானதே இந்த ATM  இயந்திர முறைமையாகும்.
    அதாவது பணத்தை கொடுத்தால் சொக்லட்களை தரும் இயந்திரமொன்று வழக்கத்திலிருந்ததால் அதனை அடியொட்டி இவ்யோசனை இவருக்கு பிறந்தது. இதற்கமைவாகவே ATM  இயந்திரத்தை ஜோன் ஷெப்பர்ட் பெரோன் உருவாக்கினார்.
    இவரால் உருவாக்கப்பட்ட முதலாவது ATM  இயந்திரம் 1967 ஆம் ஆண்டில் வடக்க லண்டனில் அமையப்பெற்றிருந்த 'பார்க்லேஸ்' என்ற வங்கியில் பொருத்தப்பட்டிருந்தது. இந்த யுவுஆ இயந்திரத்துக்கு பெரும் வரவேற்பு கிட்டியது. இதன் பயனை எல்லோரும் உணரத்தொடங்கினர். ஆனால் அப்போது தற்போது உள்ளதைப் போன்று ATM  கார்ட்கள் இருக்கவில்லை. அதற்கு பதிலாக விசேட காசோலைகளே பயன்படுத்தப்பட்டன. காசோலைகளை இயந்திரத்துக்குள் செலுத்துவதற்கு முன்னர் இரகசிய இலக்கங்களை தெரிவிக்க வேண்டும். ஆரம்பத்தில் பத்து இலக்கங்களைக் கொண்ட இரகசிய இலக்கங்களையே ஷெப்பர்ட் உருவாக்கினார். எனினும் அத்தனை இலக்கங்களையும் ஞாபகத்தில் வைத்திருப்பது சிரமமானது என அவரது மனைவி கூறியமையால், உடனே அவர் அதனை நான்கு இலக்கங்களைக் கொண்ட இரகசிய இலக்கங்களாக மாற்றியமைத்தார்.
    தற்பொதும் இந்த நான்கு இலக்க வழிமுறையே பயன்பாட்டில் இருந்து வருகின்றது. நாளடைவில் காசோலைகளுக்குப் பதிலாக ATM அட்டையொன்றை உருவாக்கும் பணி மேற்கொள்ளப்பட்டதற்கமைவாக இரகசிய இலக்கங்களை சங்கேத நடையில் குறித்த ATM  அட்டையில் பதித்து அதனை இயந்திரத்தில் உட்செலுத்துவதன் மூலம் பணத்தைப் பெற்றக்கொள்ளும் வழிமுறை பாவனைக்கு வந்தது.
Previous Post Next Post