British Council அனுசரணையுடன் பிராந்திய ஆங்கில கற்கை நிலையம் (RESC) நடத்தியமாவட்ட மட்ட போட்டிகளில் மட்டக்களப்புமாவட்டத்தில் அதிகூடுதலாக 15 இடங்களை மட்/ககு/வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயம் வெற்றிகொண்டது. இந்தப் போட்டிகளில் வந்தாறுமூலைமத்தியமகாவித்தியாலயம் 15 நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்றதுடன், கனிஷ்ட பிரிவு நாடகத்துக்கு முதலாம் பரிசினையும் பெற்றுக்கொண்டது.
பிரிட்டிஷ; கவுண்சில் அனுசரணையுடன் நடைபெறும் கற்கைநெறியை பின்பற்றிய ஆசிரியர்கள் தாம் பெற்ற ஆங்கில ஆற்றலை மாணவர்களுக்கு வழங்கியுள்ளார்களா? என்பதை பரிசோதிப்பதற்காக நடத்தப்பட்ட மேற்படி TKT studentcompetitions கடந்த 03-02-2014 அன்று மட்/திரேசா கொண்வென்ற் பாடசாலை அரங்கில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இப்பாடசாலையிலிருந்து பயிற்சிக்குத் தோற்றிய செல்வி.பிரபாஜினி சாமித்தம்பி மற்றும் திரு.தே.குகதாசன் ஆகிய ஆசிரியர்கள் மேற்படி நிகழ்ச்சிகளுக்கு மாணவர்களை பயிற்றுவித்தனர். இவ்வெற்றிக்கு சிலதினங்கள் முன்பாக இவ்வாசிரியரிகளால் வழிநடத்தப்படும் பாடசாலையின் ஆங்கிலமன்றமான ShakespeareanEnglish Club தனது வருடாந்ததிறமைகளின் வெளிப்பாடு நிகழ்ச்சிகளை அரங்கேற்றியதுடன் அதற்கு பாடசாலையின் ஆங்கிலஆசிரியர் குழாமும் திரு.அ.சிறிதரன் ஆசிரியர் தலைமையிலானஅழகியல் பாடப் பிரிவினரும் விஞ்ஞானதொழில்நுட்ப பாடப் பிரிவினரும் பெரும் பங்காற்றியமை குறிப்பிடத்தக்கது.