நகைச்சுவை நடிகர் குள்ளமணி மரணம்

கரகாட்டக்காரன், பில்லா உள்பட 500–க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்தவர் குள்ளமணி (வயது 65). சிறுநீரக நோயினால் அவதிப்பட்டு வந்த அவர், சென்னையில் கடந்த 26.12.2013 அன்று  மரணம் அடைந்தார்.

அவருடைய உடல், சொந்த ஊரான புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஒன்றியத்தில் உள்ள மரமடக்கிக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு அஞ்சலி செலுத்திய உறவினர்கள் கதறி அழுதனர்.
பின்னர் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு மரமடக்கியில் உள்ள சுடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது. மறைந்த நடிகர் குள்ளமணிக்கு ராணி (30) என்ற மனைவியும், மகாலட்சுமி என்ற 3 வயது மகளும் உள்ளனர். வறுமையில் வாடும் அவரது குடும்பத்திற்கு நடிகர் சங்கமும், தமிழக அரசும் நிதி உதவி செய்ய வேண்டும் என்று அவரது மனைவி மற்றும் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





Previous Post Next Post