சித்தாண்டி மற்றும் தாழ்நிலப் பகுதிகளில் வெள்ள அபாயம்

(Kanthan&Nanthan) கடந்த சில தினங்களாக மட்டக்களப்பில் பெய்துவரும் மழைகாரணமாக முந்தணி ஆறு மற்றும் மியான்கல் ஆறு என்பனவற்றின் நீரோட்டம் அதிகரித்து பெருக்கெடுத்தமையினால்  சித்தாண்டி மற்றும் அயல்தாழ்நிலப் பிரதேசங்கள் வெள்ள அபாயத்தை எதிர்நோக்கியுள்ளன.

சித்தாண்டி மதுரங்காட்டுக் கொலனி மற்றும் சித்தாண்டி 03 மாரியம்மன் கோவிலை அண்டிய பகுதிகளில் வெள்ளநீர் தற்போது காணப்படுகின்றது. இன்று காலையில் சித்தாண்டி நாகதம்பிரான் ஆலய வீதிவரையில் காணப்பட்ட வெள்ளநீர் தற்போது சித்தாண்டி 04 பலநோக்கு கட்டடப்பகுதியையும் தாண்டியுள்ளது. மதுரங்காட்டுக் கொலனிப் பகுதியைச் சேர்ந்த மக்கள் தற்போது இடம்பெயரத் தொடங்கியுள்ளனர். 
















Previous Post Next Post