வந்தாறுமூலை மத்திய மகாவித்தியாலயத்தின் ஷேக்ஸ்பியரியன் ஆங்கிலமன்றம் வழங்கும் திறமைகளின் காட்சி

கல்குடாகல்விவலயத்தின் 1AB வகைப் பாடசாலைகளுள் ஒன்றான மட்/ககு/வந்தாறுமூலை மத்திய மகாவித்தியாலயத்தின் மாணவர்களால் ஷேக்ஸ்பியரியன் ஆங்கிலமன்றம்' எனும் பெயரில் மாணவர் மன்றம் ஒன்று கடந்த 2013 யூலை 12ஆம் திகதி உருவாக்கப்பட்டது. 

தரம்-5 தொடக்கம் 13 வரையான மாணவ, மாணவியரில் சுமார் 60 பேரை முதன்மை அங்கத்தவர்களாகக் கொண்டு தாபிக்கப்பட்டுள்ள இம்மன்றத்தின் முதலாவது உத்தியோகபூர்வ திறமைகளின் வெளிப்பாடு பாடசாலையின் நல்லையா அரங்கில் கடந்த 28.01.2013(செவ்வாய்கிழமை) அன்று இடம்பெற்றது.

வித்தியாலய அதிபர் திரு.தி.ரவி அவர்களின் ஆலோசனையின் பிரகாரம் பாடசாலையின் ஆங்கில பாடத்துறையைச் சேர்ந்த ஆசிரியர்களால் உருவாக்கப்பட்ட இம்மன்றமானது மாணவியான செல்வி.கிசாநிதிபரசுராமன் அவர்களால் தலைமை தாங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

பாடசாலையின் ஆங்கிலபாடத்துறைக்கு தலைமைவகிக்கும் பாட இணைப்பாளரான திருதே.குகதாசன் (ஆசிரியர்) அவர்களினதும் ஆங்கிலமன்றத்தின் பிரதமநெறிப்படுத்துநர் செல்வி.சா.பிரபாஜினி (ஆசிரியை) அவர்களினதும் ஏற்பாட்டில் அனைத்து ஆங்கிலஆசிரியர்களும் இணைந்து நெறிப்படுத்திய மாணவர்களது நிகழ்ச்சிகள் இன்று அரங்கேற்றப்பட்டன. பாடசாலையின் அழகியல்இவிஞ்ஞானம் மற்றும் தகவல் தொழில்நுட்ப பாடத்துறைகளின் தலைவர்களது வழிநடத்தலில் அத்துறைகளும் இவ் விழாவுக்கு தொழில்சார் நுட்பங்களைவழங்கி அணிசேர்த்தன.

குறித்த நிகழ்ச்சிகளுள் ஒன்றான சபையோருடனான திறந்தகலந்துரையாடலின் போதுவருகைதந்திருந்த விருந்தினர்கள் மற்றும் பெற்றோர் உள்ளிட்ட பார்வையாளர்கள்; மாணவர்களுடன் ஆங்கிலமொழியில் உரையாட வாய்ப்பளிக்கப்பட்டது. மன்றத்தின் பிரதானகுறிக்கோளான 'மாணவர்களின் ஆங்கிலமொழி பேச்சுத் திறன்' சாத்தியமாகியுள்ளமை இதன்போது மெய்ப்பித்துக் காட்டப்பட்டது.

ஷேக்ஸ்பியரியன் ஆங்கிலமன்றத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற நிகழ்வுகளுக்கு வித்தியாலய அதிபர் தலைமை தாங்கினார். பிரதமஅதிதியாக திருமதி.சு.குலேந்திரகுமார் (கல்குடாவலயபிரதிகல்விப் பணிப்பாளர்) அவர்களும் கௌரவஅதிதிகளாக ஜனாப்.நிபால் அலாவுதீன் (யுனிசெப் மட்டக்களப்பு அலுவலக பொறுப்பதிகாரி),  கோட்டக் கல்விப் பணிப்பாளர்களான திரு.பொ.சிவகுரு, திரு.ந.குணலிங்கம், இப்பாடசாலையில் முன்பு அதிபராக பணியாற்றியவரும் தற்போதைய கல்குடாவலய ஆசிரிய நிலைய முகாமையாளருமான திரு.வ.பஞ்சலிங்கம் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இவர்களுடன் பாடசாலை சமூகத்தின் சார்பில் பாடசாலை அபிவிருத்திசங்கம், பாடசாலை அபிவித்திக் குழு, சித்ததாண்டி-மாவடிவேம்பு பொதுஅமைப்புக்களின் ஒன்றியம் ஆகியவற்றின் நிருவாகக் குழு பிரதானிகளும் வித்தியாலயத்தின் அனைத்து அசிரியர்களும் பெற்றோர்இநலன் விரும்பிகள் பலரும் கலந்துகொண்டனர். இந்நிகழ்வை நடத்துவதற்கான அனுமதி கல்குடாவலய கல்விப் பணிப்பாளர் திரு.செ.ஸ்ரீ கிருஷ;ணராஜா அவர்களால் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

காலை 09.00-11.30 வரை இடம்பெற்ற ஆடல், பாடல், பேச்சு, நாடகம்,கவிதை, கலந்துரையாடல்  முதலியவடிவங்களிலான நிகழ்வுகள் வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தின் வரலாற்றில் ஒருமுக்கிய மைல்கல்லாக அமைவதுடன் சித்தாண்டி-மாவடிவேம்பு பிரதேச இளைஞர்களின் 'பேச்சுஆங்கிலம்' என்ற கனவை நனவாக்க பெரிதும் உதவும் எனவும் பார்வையாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.























Previous Post Next Post