மாவடிவேம்பில் கால்வாய்கள் நிர்மாணிப்பு

மாவடிவேம்பு பிரதேசத்தில் ஏற்படும் வெள்ள நீர் விரைவாக வழிந்தோடுவதற்காக  பிரதான கால்வாயுடன் துணைக் கால்வாய்களை அமைக்கும் பணிகள் டைபெற்று வருகின்றன. இவை காளிகோவில் வீதிக்கு சமாந்தரமாகச் செல்லும் பிரதான கால்வாயுடன் தொடர்புபடுத்தப்படவிருக்கின்றன. 


காளிகோவில் 2 ஆம் குறுக்கு, காளிகோவில் 4 ஆம் குறுக்கு ஆகிய பகுதிகளில் சுமார் 100 மீற்றர் கொண்ட துணைக்கால்வாய்கள் அமைக்கப்படுகின்றன. சித்தாண்டி - மாவடிவேம்பு நலன்புரி அமைப்பினர் விடுத்த வேண்டுகோளின் பேரிலேயே இந்தக் கால்வாய்கள் அமைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.











Previous Post Next Post