கல்குடா கல்வி வலயத்தில் ஏறாவூர் பற்று 02 கோட்டத்தில் அமைந்துள்ள மட்/ககு /களுவன்கேணி விவேகானந்தா வித்தியாலயத்தின் அதிபராக கடமையாற்றிய திரு.பொ. சிவகுரு அதிபர் அவர்கள் ஈ ஏறாவூர் பற்று 02 கோட்டக் கல்வி அதிகாரியாக பதவி உயர்வு பெற்றுச் சென்றதன் காரணமாக 1 C தரத்தையுடைய இப்பாடசாலையில் அதிபர் பதவி வெற்றிடமாக இருந்தது. இப்பாடசாலைக்குரிய அதிபர் ஒருவரைத் தேர்ந்தெடுக்கும்பொருட்டு கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளரின் வேண்டுகோளுக்கமைவாக கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளரால் வின்னப்பங்கள் கோரப்பட்டது.
விண்ணப்பதாரிகளுக்கான நேர்முகப்பரீட்சை கடந்த 03.01.2014 அன்று கிழக்கு மாகாண கல்வி அமைச்சில் நடைபெற்றது. இந்த நேர்முகப் பரீட்சையில் தகைமை, திறமை, அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் அதிகூடிய புள்ளிகளைப்பெற்ற தற்போது வினாயகர் கிராமம் அலைமகள் வித்தியாலயத்தில் அதிபராகக் கடமையாற்றும் திரு.கு.சன்முகம் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, உடன் செயற்படும் வண்ணம் மாகாணக் கல்வியமைச்சின் செயலாளரினால் நியமணம் வழங்கப்பட்டுள்ளது.
புதிய அதிபராகக் கடமையேற்கும் திரு.கு.சன்முகம் அவர்கள் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் முதுதத்துவமானி பட்டதாரியாவர் என்பதுடன் சிறந்த ஆய்வாளரும், எழுத்தாளரும் மற்றும் பல விருதுகளையும் பெற்றவராவார்.
நேர்மையான முறையில் இடம்பெற்ற நேர்முகப் பரீட்சையில் தகுதியான ஒருவரை இப்பாடசாலைக்கு நியமித்ததையிட்டு கிழக்கு மாகாண கல்விஅமைச்சின் செயலாளர், மாகாணக் கல்விப் பணிப்பாளர், கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளர் ஆகியோருக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றது.