நீங்கள் விரும்பும் கோப்புறையை Send To விற்குள் சேர்த்தல்

Send To எனும் கோப்புறையில் நாம் அடிக்கடி பயன்படுத்தும் ஒரு கோப்புறைய இடுவதன் மூலம் நாம் கணனியில் மேற்கொள்ளும் செயற்பாடுகளை மிக இலகுவாக மேற்கொள்ள முடியும்.

உதாரணமாக நீங்கள் தயாரிக்கும் ஆவணங்களை எல்லாம் MY ALL DOCUMENTS எனும் ஒரு கோப்புக்குள் இட்டு வருவீர்களானால் நீங்கள் தயாரித்த ஆவணங்களை இடும் ஒவ்வொரு முறையும் குறிப்பிட்ட கோப்புக்கு செல்ல வேண்டியிருக்கும் ஆனால் இதனை Send To என்பதில் சேர்த்து விட்டால் மிக இலகுவில் Send To என்பதன் மூலம் குறுப்பிட்ட கோப்புக்கு இட்டு விடலாம்.


எனவே நீங்கள் விரும்பும் கோப்புறையை Send To என்பதில் சேர்க்க பின்வரும் வழிமுறையை பின்பற்றுக.

நீங்கள் Send To இல் இணைக்க விரும்பும் கோப்புறையின் மேல் Right Click செய்து Send To ===> Desktop (Create Shortcut) என்பதனை சுட்டுக.

பின் நீங்கள் பயன்படுத்துவது Windows XP எனின் Run என்பதில் SendTo என தட்டச்சு செய்து Enter அலுத்துக அன்றி நீங்கள் பயன்படுத்துவது Windows இன் அண்மைய பதிப்புக்கள் எனின் Run என்பதில் shell:sendto என தட்டச்சு செய்து Enter அலுத்துக இவ்வாறு திறக்கப்படும் சாளரத்தில் நீங்கள் Desktop இல் உருவாக்கிய Shortcut Cut செய்து Past செய்க.

அவ்வளவுதான்

இனி உங்கள் Sent To பகுதியில் குறிப்பிட்ட கோப்புறை இணைக்கப்பட்டுவிடும். இனி இலகுவாக உங்கள் செயற்பாடுகளை மேற்கொள்ள முடிவதுடன் நேரத்தையும் மீதப்படுத்த முடியும்.
 (Source:- www.tamilinfotech.com)
Previous Post Next Post