வங்களா விரிகுடாவில் கடந்த சில தினங்களாக உருவாகியிருக்கும் தாழமுக்க மையமானது தற்போது வடக்காக நகர்ந்து சென்னைக்கு தெற்கு – தென்கிழக்கு திசையில் 630 கிலோமீற்றர் (335 கடல் மைல்) தொலைவில் நிலைகொண்டுள்ளது.
இதற்கமைவாக இலங்கையின் மட்டக்களப்பிற்கு கிழக்கே சுமார் 174 கிலோமீற்றர் (94 கடல்மைல்) தொலைவில் நிலைகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் 15- 20 நொட்ஸ் (மணித்தியாலத்திற்கு 17-23 மைல் ) வேகதத்தில் காற்றுடன் மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகளும் காணப்படுகின்றன.

இலங்கைக்கு கிழக்கே தீவிரமாகியுள்ள வளிமண்டல குழப்பநிலை, தாழமுக்க நிலைமை காரணமாக நாடுமுழுவதிலும் மற்றும் கரையோரம் சார்ந்த பகுதிகளில் காற்றுடன் கூடிய மழை இடம்பெறும்.
வடக்கு, கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழைவீச்சி இடம்பெறுவதுர்டன் பலமான காற்றும் வீசக்கூடும் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை (Issued at 05.30 a.m. on 03rd December 2013) வானிலை முன்னறிவித்தலில் குறிப்பிட்டுள்ளது.
வங்காளா விரிகுடாவில் தோற்றம் பெற்றுள்ள இந்த தாழமுக்க மையத்திற்கு 92 பி (B) எனப் பெயரிடப்பட்டுள்ளதுடன் இந்த வளிமண்டல குழப்ப நிலைமை விருத்தி பெற்று எதிர்வரும் 72 மணித்தியாலத்திற்குள் ஒரு அயன மண்டல சூறாவளியாக தோற்றம் பெறலாம் எனவும் இணைந்த தைபூன் எச்சரிக்கை மையத்தின் (JTWC) தகவல்களினடிப்படையில் பசுபிக் பிரதேச அனர்த்த நிலையம் (Pacific Disaster Center) தெரிவித்துள்ளது.
(தொகுப்பு: அக்ஷயன் BA (Hons) special in Geography )
Source: