உங்கள் பேஸ்புக் கணக்கினை பாதுகாக்கும் வழிமுறைகள்

சமூக வலைத்தளங்களில் முன்னணி தளமாக பேஸ்புக் தளமும் இயங்கி வருகின்றது. பேஸ்புக் தளமானது நன்பர்களின் ஒன்று கூடல், புதிய உறவுகள் என பல நன்மைகளைக் கொடுத்து வருகின்றபோதும், ஒருசிலரின் தவறான செய்கைகளினால் சிலர் மனஉளைச்சலடையும் சர்ந்தர்ப்பங்களும் ஏற்படுவதுண்டு.  குறிப்பாக பெண்கள் பேஸ்புக்கில் மிக அவதானமாக பயன்படுத்த வேண்டிய தேவை இன்று காணப்படுகின்றது. 


ஒரு பெண்ணின் பேஸ்புக்கில் உள்ள படங்களை எடுத்து அதனை போஸ்ட்டாக தமது பேஸ்புக் கணக்கில் போடுவது அல்லது தவறாக கருத்துரைகளை போடுவது என பல அநாகரிகமான செய்கைகள் இன்று நடைபெற்று வருகின்றன. 

அது மாத்திரமன்றி  பெண்களின் பேஸ்புக் கணக்கினூடாக அவர்களை தொந்தரவு செய்தல், அநாகரிகமான வார்த்தைகளை பயன்படுத்தி உரையாடுதல் போன்ற செயல்களும் இன்று நடைபெற்று வருகின்றன. எனவே இத்தகைய அநாகரிகமான செயற்பாடுகளிலிருந்து பேஸ்புக்கை பயன்படுத்துகின்ற பெண்கள் மிகவும் அவதானமாக நடந்துகொள்ளல்வேண்டும்.

இத்தகைய நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டுதான் பல பாதுகாப்பு வழிமுறைகளை தொடர்ந்தும் இத்தளத்தினூடாக எழுதவிருக்கின்றேன்.  முதலில் எமது தனியுரிமை பாதுகாப்பினை  (protect your Facebook privacy) எவ்வாறு பொருத்தமாக அமைத்துக்கொள்வது என்று இப்பகுதியில் பார்ப்போம்.

முதலில் உங்கள் பேஸ்புக் கணக்கினுள் நுழைந்து கொள்ளுங்கள். பின்னர் உ;களுயை பேஸ்புக் முகப்பின் வலதுபக்க மேல்மூலையில் settings என்பதைக் குறிக்கக்கூடிய ஒரு icon காணப்படும். அதனை கிளிக் செய்யுங்கள். தற்போது உங்களுக்கு அங்கு Privacy settings  எனும் ஒரு பகுதி காணப்படும். இப்போது அதனை கிளிக் செய்யுங்கள். 




தற்போது உங்களுக்கு கீழே உள்ளது போன்ற ஒரு பகுதி தோன்றியிருக்கும். இந்தப் பகுதிதான் உங்களுடைய privacy settings பகுதிக்குரிய முகப்பாகும்.





இந்த முகப்பில் தடித்த எழுத்தில் மூன்று விடயங்கள் தலைப்பிடப்பட்டிருக்கும். அவை பின்வருமாறு காணப்படும்.
  • Who can see my stuff?

  • Who can contact me?

  • Who can look me up?



இந்த மூன்று தலைப்புகளுக்கும், சில உபபிரிவுகள் வழங்கப்பட்டிருக்கும். 
  • Who can see my stuff?

    • Who can see your future posts? - Edit

    • Review all your posts and things you're tagged in  - Use Activity Log
    • Limit the audience for posts you've shared with friends of friends or Public? - Limit Past Posts
  • Who can contact me?

    • Who can send you friend requests?- Edit

    • Whose messages do I want filtered into my Inbox?- Edit

  • Who can look me up?

    • Who can look you up using the email address you provided?- Edit

    • Who can look you up using the phone number you provided?- Edit

    •  Do you want other search engines to link to your timeline?- Edi
1) நீங்கள் போடுகின்ற பதிவுகளை தேவையற்றோரிடமிருந்து மறைத்து வைத்தல்.
நீங்கள் இடுகின்ற போஸ்ட்களை உங்களுடைய பேஸ்புக்கில் உள்ள நன்பர்கள் மாத்திரமே பெரும்பாலும் பார்வையிடவேண்டும் என்ற விடயம் தேவைப்பட்டால்  Who can see your future posts? - Edit என்பதில் உள்ள Edit என்பதனை கிளிக் செய்து, அதில் வரும் தேர்வில் Friends என்பதனை தேர்வுசெய்யுங்கள். இதன் மூலம் உங்களுடைய பதிவுகளை  ஒளிப்படம் உள்ளடங்கலாக  நன்பர் பட்டியலில் உள்ளவர் தவிர்ந்த வேறொருவர் பார்வையிடமுடியாது.




2)  கடந்தகாலங்களில் பகிர்ந்த பதிவுகளையும் நன்பர்கள் அல்லாதவாகள் பார்வையிடாதவாறு மறைத்தல்.
சிலவேளைகளில் நீங்கள் இப்போதுதான் இவ்வாறு அமைப்பினை செய்வதனால், இனிமேல் போடுகின்ற பதிவுகள்தான் நன்பர்கள் மாத்திரம் பார்வையிடவும், ஏணையோர் பார்வையிடமுடியாதவாறும் அமைந;திருக்கும். 

ஆனால் நீங்கள் இதற்குமுன்னர் public என எல்லோரும் பார்வையிடக்கூடியவாறு சில பதிவுகளை இட்டிருப்பீர்கள். அவற்றையும் நீங்கள் நன்பர்கள் அல்லாதவர்களிடமிருந்து பாதுகாக்க முடியும். அதற்கு 
Limit the audience for posts you've shared with friends of friends or Public? - Limit Past Posts என்பதில் உள்ள Limit Past Post என்பதனை கிளிக் செய்யுங்கள். இப்போது வரும் Limit Old Posts என்பதனை கிளிக் செய்துவிட்டால் உடனே ஏணையவற்றையும் மறைத்துவிடும்.





3) உங்களுக்கு நன்பர் வேண்டுகோள் கொடுப்பவர்களை வரையறுத்தல்.
உங்களுக்கு நன்பர் வேண்டுகோள் கொடுப்பவர்கள், உங்களுக்கு நன்றாக தெரிந்தவாகளாகத்தான் என்று கருதினால் நீங்களே வேண்டுகோள் கொடுத்து இணைந்துகொள்ளலாம். அத்துடன் உங்களுடைய நன்பர்களுக்கு தெரிந்தவர்கள் மட்டுமே வேண்டுகோள் கொடுக்கக்கூடியவிற்கு மாற்றியமைப்தனுடாக அனாமதேய வேண்டுகொள்கலிருந்து பாதுகாத்துக்கொள்ள முடியும். 

இந்த விடயத்தை  Who can send you friend requests?- Edit என்பதில் உள்ள Edit என்பதனை கிளிக் செய்து Friends of Friends என்பதனை தெரிவு செய்துகொள்ளுங்கள்.


4) மேலும்   Who can look me up?  என்ற தலைப்பின் கீழுள்ள முதல் இரண்டு விடயங்களையும் Friends என்பதற்கு தெரிவு செய்யுங்கள். 

இப்போது உங்களுடைய முகப்புத்தகத்தினை நீங்கள் ஓரளவேனும் பாதுகாப்புடன் பயன்படுத்த முடியும். இதன்மூலம் அனாமதேய மனக்குழப்பங்கள், பிரச்சினைகளைக்கூட தவிர்த்துக்கொள்ளலாம். 

சந்தேகங்கள் இருப்பவர்கள் கமாண்டினூடாக சந்தேகங்களைக் கேட்கலாம்.
Previous Post Next Post