ஆழிப்பேரலை நினைவு நாள் - 26.12.2013

கடந்த 26.12.2004 அன்று இலங்கையில் சுமார் 40000 பேர்வரையில் ஒரே நாளில் பலியெடுத்த நிகழ்வாக சுனாமி என்னும் ஆழிப்பேரலை தாக்கியது. ஆழிப்பேரலை தாக்கி இன்றுடன் 9 வருடங்கள் நிறைவுபெறுகின்றன. இன்று இலங்கையின் பல பாகங்களிலும் சுனாமி நினைவு தினம் அனுஸ்டிக்கப்பட்டிருந்தது.
Tsunami Memorial Song


•    2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ம் திகதி அதிகாலை 6.29 மணியளவில் இந்துசமுத்திரத்தில் சுமாத்திரா தீவிற்கு மேற்கே சுமார் 150 கிலோமீற்றரில்  9.0 றிச்டர் அளவில் 10 கிலோமீற்றர் ஆழத்தில் ஒரு புவிநடுக்கம் உருவாகியது.

•    உருவாகிய புவிடுக்கத்தினால் ஏற்பட்ட சமுத்திர அலைகள் பல நாடுகளைத் தாக்கியது. இந்தோனேசியா, மலேசியா, இந்தியா, இலங்கை, தாய்லாந்து, மாலைதீவு, பங்களாதேஸ், சோமாலியா முதலிய நாடுகள் அதிக பாதிப்புக்களை எதிர்நோக்கின. இச் சுனாமி பேரலையால் 350000 பேருக்கும் மேற்பட்டவர்கள் இறந்தனர்.

•    இலங்கையில் இச்சுனாமிப் பேரலையின் காரணமாக 35399 பேர் உயிரிழந்ததுடன், 1.25 மில்லியன் மக்கள் தமது இருப்பிடங்களை விட்டு இடம்பெயர்ந்தனர். அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை, முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், கொழும்பு ஆகிய மாவட்டங்களில் பெருமளவு சேதம் ஏற்பட்டது.

Previous Post Next Post